Followers

Wednesday, January 23, 2013

ஆன்மீக அனுபவங்கள் 57



வணக்கம் நண்பர்களே !
                     ஆன்மீக அனுபவத்தில் இப்பதிவில் ஆத்மாவின் ஏக்கத்தை பற்றி பார்க்கலாம்.  

பல பிறவிகளாக ஆத்மா பிறப்பு எடுக்கும்போது ஒவ்வொரு பிறவியிலும் அதற்கு அனைத்து வித விருப்பத்தையும் பெறுவதில்லை பத்து சதவீத விருப்பத்தை பூர்த்தி செய்தாலே அது போதும் என்ற நிலையில் தான் இருக்கிறது. அபபடி பிறப்பெடுத்த அந்த ஆத்மாவின் விருப்பத்தை பாதிஅளவு பூர்த்தி செய்துவிட்டால் அந்த ஆத்மாவிற்க்கு நீங்கள் தான் கடவுள். அந்த ஆத்மா எந்த கோவிலுக்கு சென்றாலும் எங்கே பூர்த்தி ஆனதோ அந்த நினைப்பு தான் வரும். கோவில் உள்ள சாமியின் சிலையை பார்த்தாலும் விருப்பத்தை நிறைவு செய்தவரை தான் அந்த சிலையின் வழியாக பார்ப்பார்கள்.

பல பிறவியின் ஏக்கத்தோடு தான் அந்த ஆத்மா பிறக்கிறது அப்படி பிறந்த ஆத்மா யாரிடமாவது பார்த்த உடனே அல்லது பேசும்போதே பரவசம் அடைந்தால் அந்த நபர் தான் மிக உயர்ந்தவராக இருப்பார். அந்த நபர் எப்படிபட்டவராகவும் இருக்கலாம். ஆனால் அந்த ஆத்மா பார்த்து பரவசம் அடைந்துவிட்டால் அவரின் வழியாக தான் அந்த ஆத்மாவை கரைசேர்க்க முடியும்.

பரவசம் என்றால் என்ன என்று எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். உன்னையறியாமல் ஒருவரால் ஈர்க்கப்படும்போது அந்த இடத்தில் பரவச நிலை ஏற்படும். சிற்றின்பத்தில் ஒரு நொடியில் கிடைத்த அந்த சுகம் பல நேரம் உங்களிடம் இருக்கும். எல்லையற்ற ஆனந்தத்தை நீங்கள் உணருவீர்கள்.

வாழ்க்கையில் நீங்கள் இதுவரை அந்த நிகழ்வை உணர்ந்து இருக்கமாட்டீர்கள். அப்படி ஒரு உணர்வு உங்களுள் நடப்பதை நீங்கள் காணமுடியும். இதனை நான் சொல்லி தெரிவதை விட நீங்கள் அனுபவிக்கும் போது அதனைப்பற்றி தெரியவரும்.

இது நடந்த பிறகு தான் உங்களின் ஆத்மாவின் ஏக்கம் தணிய ஆரம்பிக்கும். எண்ணங்கள் அற்ற நிலையை அதன் பிறகு நீங்கள் உணரலாம். ஒவ்வொரு நாளும் மிகவும் சுகமாக வாழ்வது போல் உணர்வீர்கள்.

இதைப்போல் செய்வது மிகப்பெரிய சாமியார்கள் கூட செய்வதில்லை சாதாரணமாக இருக்கும் நபர்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் சந்திக்கும்போது அல்லது அவர்களிடம் பேசும்போதோ நடைபெறும்.

இதனை எப்படி நாம் பெறுவது என்பதை அடுத்த பதிவில் நாம் பார்க்கலாம்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: