Followers

Wednesday, January 2, 2013

பூர்வ புண்ணியம் 9


வணக்கம் நண்பர்களே!
                        பூர்வ புண்ணியம் பற்றி பார்த்து வருகிறோம். இப்பதிவிலும் பார்க்கலாம்.

கடந்த பதிவில் எண்ணங்களைப்பற்றி பார்த்தோம் இப்பதிவிலும் அதைப்பற்றி பார்க்கலாம். உங்களின் மனதில் எண்ணங்கள் உருவாகி கொண்டே இருக்கும் நீங்கள் கூட்டத்தில் இருந்தாலும் பேசிக்கொண்டே இருந்தாலும் அது உள்வாங்கிகொண்டே அதன் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கும். நீங்கள் சிலபேர்களின் பேச்சை கவனிக்க மாட்டீர்கள் ஆனால் அவர்களின் பேச்சை மனது உள்வாங்கிக்கொண்டே தான் இருக்கிறது ஆனால் அதனை நம்மால் எடுக்கமுடியவில்லை அவ்வளவு தான். 

மனது என்ன செய்யும் என்றால் அனைத்து விசயங்களையும் உள்வாங்கி அதனை அலசி பார்க்கும் அனைத்து கோணத்திலும் அதனை உள்நோக்கும் ஆனால் அதனை முடிவு எடுக்காது. புத்தி தான் முடிவு எடுக்கும். இவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்று முடிவு எடுக்கும். மனது என்பது வேறு புத்தி என்பது வேறு. மனது உள்நோக்கத்தில் செயலாற்றும் புத்தி வெளியில் செயலாற்றும். 

நீங்கள் ஒருவரை பார்ப்பீர்கள் அவரை உங்களுக்கு பிடித்து இருக்கும் அதாவது உங்கள் மனதிற்க்கு பிடித்திருக்கும். அவரை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்று உங்கள் மனது நினைக்கும் ஆனால் புத்தி என்ன செய்யும் இவரை திருமணம் செய்தால் நமது வாழ்க்கை நன்றாக இருக்குமா என்று முடிவு எடுக்கும். 

பூர்வபுண்ணியாதிபதி கெட்டால் முதலில் உங்களுக்கு ஆப்பு அடிக்கும் விஷயமாக மனது தான் இருக்கிறது. உங்களின் மனதை குழப்பிவிட்டு முடிவு எடுக்கவும் விடாமல் செய்வதில் முக்கியபங்கு பூர்வபுண்ணியாதிபதிக்கு இருக்கிறது.

ஆன்மீகத்தை எடுப்பதற்க்கு முதல் தகுதி அனுபவத்தை பெறவேண்டும் என்று சொல்வார்கள். சும்மா படித்துக்கொண்டு இருப்பது அல்ல ஆன்மீகம் அதனை உணரவேண்டும். நான் எழுதும் ஆன்மீக அனுபவங்கள் அனைத்தும் ஒரு சதவீதம் தான் மீதி நீங்கள் அனுபவத்தில் தான் உணரவேண்டும்.

உலகியலுக்கும் அனுபவத்திற்க்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. உலகியல் என்பது அனைத்து விசயங்களையும் மனதிற்கில் உள்வாங்கி அதை நல்லதா கெட்டதா என்று அலசி ஆராய்ச்சி செய்வது உலகியல். அனுபவம் என்பது இது என்ன என்று கேட்டு அதனை அப்படியே செய்வது அனுபவம். 

உங்களிடம் நான் ஆன்மீகத்தைபற்றி சொன்னேன் என்று வையுங்கள் நீங்கள் என்ன செய்வீர்கள் உடனே ஆயிரம் புத்தகத்தை எடுத்து அவர் சொன்னது உண்மையாக இருக்குமா என்று அலசுவீர்கள். ஏன் என்றால் நீங்கள் உலகியலை சார்ந்து வாழ்கிறீர்கள். வீட்டில் குழந்தை இருக்கும் அது ஏதாவது கேட்கும் நீங்கள் அதைப்பற்றி சொன்னால் நீங்கள் சொல்லுவது உண்மை என்று அப்படியே ஏற்றுக்கொள்ளும். நீங்கள் ஆன்மீகத்திற்க்கு செல்லும்போது குழந்தைபோல் தான் இருக்கவேண்டும். குழந்தை ஏற்றுக்கொள்வது அனுபவம். அனுபவத்தில் நின்றால் மட்டுமே ஆன்மீகத்தில் நீங்கள் முன்னேறமுடியும். 

இதனை ஏன் இந்த நேரத்தில் சொல்லுகிறேன் என்றால் பூர்வ புண்ணியாதிபதி கெடும் போது உங்களின் மனநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது எந்த விசயத்திலும் ஒழுங்கான ஒரு முடிவு எடுக்கமுடியாத நிலையை அது தரும்.

நேற்று ஒரு பெண் என்னை பார்க்கவந்தார். அவர் நமது பதிவை படித்துவிட்டு வந்தவர். அவர் கடைசியில் நீங்கள் நல்லவரா உங்களை எப்படி நம்புவது என்று கேட்டார். நான் ஏன் என்னுடன் குடும்பம் நடத்தபோகிறீர்களா என்று கேட்டேன். இல்லை சும்மா தான் கேட்டேன் என்றார். ஒரு சாமியார் தவறு செய்துவிட்டதை இவரின் மனதில் ஏற்றிவிட்டார் அதனால் அந்த மனது அனைத்திலும் எச்சரிக்கையுடன் இருக்கிறது அவரை சொல்லி குற்றமில்லை. 

மனது அற்ற நிலையில் தியானம் கைகூடும் என்று சொல்லுவார்கள் மனது அற்ற நிலையை அடைய பூர்வபுண்ணியாதிபதி கைகொடுக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே தெய்வீக அனுபவத்தை பெறமுடியும்.


நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



1 comment:

Unknown said...

the new website says permission denied. I have registered yesterday was able to read. FYI>
rgds/Surya