Followers

Saturday, February 9, 2013

பங்கு வர்த்தக சோதிடவிளக்கம் 1



வணக்கம் நண்பர்களே !

                    இருதினங்களுக்கு முன்பு பங்குவர்த்தகத்தைப்பற்றி ஒரு பதிவை தந்தேன். பங்குவர்த்தக சோதிடத்தை கேட்டு பல போன்கால்கள் வருகின்றன். கடந்த பதிவிலேயே சொல்லிவிட்டேன் நான் சோதிடவகுப்பு எடுப்பதில்லை என்று ஆனால் அதனைப்பற்றி தான் போன்கள் வருகின்றன. 

சோதிடம் என்பது எதிர்காலத்தில் என்ன நடைபெறபோகிறது என்று சொல்லுவது தான் அதன் முக்கிய வேலை அடுத்த நோடி கூட எதிர்காலம் தான் என்பதை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் சோதிடம் கணிக்க கற்றுக்கொண்டால் பங்குவர்த்தகத்தை எளிதில் கணித்துவிடலாம். 

சோதிடம் கணிக்க தெரியவில்லை ஆனால் நான் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் என்று நினைத்தால் தாராளமாக இறங்குங்கள். இறங்கும்போது நீங்கள் அதிக பணம் வரவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். பத்தாயிரம் முதல் போட்டால் தினமும் நூறுரூபாய் எதிர்பாருங்கள். நூறுரூபாய் எதிர்பார்த்தால் எளிதில் இந்த பணத்தை பெற்றுவிடலாம். ஏதோ ஒரு பங்குகளில் போட்டு எளிதில் எடுத்துவிடலாம். மாதத்திற்க்கு இருபது நாள் வர்த்தகம் நன்றாக நடக்கும் பத்தாயிரத்திற்க்கு இரண்டாயிரம் பணம் வரும் இது போதும். உங்களின் முதலீட்டு தொகையும் அப்படியே இருக்கும் வருமானமும் வரும்.

நீங்கள் என்ன செய்வீர்கள் பத்தாயிரம் மூதலீடு போட்டுவிட்டு பத்தாயிரம் ரூபாய் எதிர்பார்ப்பீர்கள். இப்படி நீங்கள் வர்த்தகம் செய்தால் ஒரே நாளில் அக்கெளண்ட் போய்விடும். இருந்த பணமும் இல்லாமல் போய்விடும். பத்தாயிரத்திற்க்கு நூறுரூபாய் எதிர்பார்த்தால் எப்படா சம்பாதிப்பது என்று நீங்கள் நினைக்கலாம்.  பொறுமையாக சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள். ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஐநூறு ரூபாய் வரும். இது போதுமே. வேறு எந்த வியாபாரத்தில் இப்படி சம்பாதிக்கமுடியும்.

நான் இந்த வர்த்தகத்தில் இருக்கும்போது பல பேரை பார்த்திருக்கிறேன். பத்து லட்சத்தை பத்து நாட்களில் விட்டுவிடுவார்கள். மேற்க்கொண்டு கம்பெனிக்கு பணம் கட்டவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். ஏன் இவ்வாறு என்றால் இருக்கிற அனைத்து கம்பெனி ஷேர்களிலும் ஆர்டர் எடுக்கிறது. ஏதாவது ஒரு கம்பெனி ஷேர் நன்றாக போகும் மீதி இருக்கிற கம்பெனி நஷ்டத்தை சந்திக்கும். இவ்வாறு எடுப்பதும் தவறு.

நான் இருந்தது கமாடிட்டி வர்த்தகம் அதனைப்பற்றி தெரியவேண்டும் என்றால் தொடர்புக்கொள்ளலாம். கமாடிட்டி சோதிடத்தைப்பற்றி கேட்காதீர்கள். நேரம் வரும்போது அதனைப்பற்றி நமது தளத்தில் எழுதலாம்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: