Followers

Saturday, February 16, 2013

பூர்வ புண்ணியம் 33



வணக்கம் நண்பர்களே!
                    அகாயு என்று பகவத்கீதையில் ஒரு வார்த்தை இருக்கிறது அதனைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

அகாயு பாவமே ஆயுளாகக் கொண்டவன். தன்னுடைய கடமையை ஆற்றாமல் இருப்பதுதான் படைப்புச் சக்கரத்திற்க்கு எதிரானது. மனிதன் தன்னுடைய கடமையை மறந்து போகங்களில் பற்றுதலுடன் எப்பொழுதும் புலன்களில் மூலம் போகங்களில் சுவை காண்பவன். எவ்விதத்திலாவது போகங்களைப் பெற்று புலன்களை திருப்தி பண்ணுவதே லட்சியமாக கொண்டவன்.

இன்று மனிதர்கள் தன்னுடைய கடமையை மறந்துவிட்டு தன்னுடைய ஆசைக்கு என்ன வேண்டுமே அதை மட்டும் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். போகங்களின் மீது ஆசையினால் மனம் போனபடி நடந்து கொள்கிறார்கள். தன்னுடைய நலமே மனதில் ஊறி இருப்பதனால் பிறருக்கு விளையும் நன்மை தீமைகளை சிறிதும் கவனிக்காமல் பிறரிடம் தவறான விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் என்ன ஆகும் என்றால் படைப்பின் சீரான ஓட்டத்திற்க்கு இடையூறு விளைக்கிறான். இப்படி இருப்பதானல் அனைத்து உயிருனங்களுக்கும் துன்பம் அளிக்கிறான். ஆகவே தனது கடமையை ஆற்றாமல் படைப்பில் தடுமாற்றத்தை ஏற்படச்செய்யும் மனிதன் மிகப்பெரிய குற்றத்திற்க்கு ஆளாகிறான். மனிதன் தன்னலம் நிறைவேறுவதற்காக வாழ்க்கை முழுவதும் அதிகமாக செல்வம் ஈட்டுகிறான்.

மனிதன் தன் கடமைகளை ஆற்றுவதன் மூலம் எல்லா உயிருனங்களுக்கு சுகம் அடைய வேண்டும் என்பதற்க்காக கர்மங்களைச் செய்து பரம மங்களமான பகவானை அடைவது என்ற உயரிய லட்சியத்தை அந்த மனிதன் அடையாமல் போகிறான். தன்னுடைய விலைமதிப்பிட முடியாத அருமையான மனித வாழ்க்கைளை விஷய போகங்களில் ஈடுபட்டு வீணாக இழக்கிறான் அதனால் அவன் வாழ்வது வீண் என்கிறார்.

கிருஷ்ணரே என்ன சொல்லியுள்ளார். அவன் அவன் வந்த வேலையை விட்டுவிட்டு தேவையற்ற வேலையில் ஈடுபட்டுக்கொண்டு அவன் வாழ்க்கையை வீணாடிக்கிறான் என்று சொல்லுகிறார். இன்று பணம் தேவை தான் அதற்க்காக எந்த நேரமும் அதன் பின்னாடியே சென்றுக்கொண்டு இருக்ககூடாது. உங்களின் வாழ்க்கைக்கு தேவையான பணம் கிடைத்துவிட்டால் அதனை வைத்துக்கொண்டு நீங்களும் வாழ்ந்து உங்களின் கர்மாவை போக்கிக்கொண்டு கடவுளை அடைய முயற்சி செய்யுங்கள்.

பரம்பரை பணக்காரன் சும்மா இருப்பான். புதிதாக ஒருவனுக்கு பணம் கிடைத்துவிட்டால் போதும் அவன் சும்மா இருக்கமாட்டான். அனைத்துவிதமான கீழ்தரமான வேலையில் இறங்கிவிடுவான். பணம் வருகிறது என்று ஆடகூடாது. அனைத்தையும் சமமாக எண்ணிப்பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்களின் கர்மாவை தீர்க்க என்ன முயற்சி செய்தீர்கள் என்று தினமும் ஒரு நொடியாவது எண்ணிப்பார்க்க வேண்டும். ஏன் என்றால் வாழ்க்கையின் இறுதிகாலம் நெருங்கிகொண்டிருக்கிறது.மரணம் உங்களை எந்த நேரமும் வந்து ஆட்கொள்ளலாம். 

மரணம் வரும் நேரத்தில் அனைவருக்கும் ஒரு எண்ணம் தோன்றும் அது என்ன என்றால் எப்பேர்பட்ட வாழ்க்கையை வீணடித்துவிட்டேன். இந்த எண்ணம் வரும்போது நீங்கள் மரணத்தை விட கொடுமையாக உணர்வீர்கள். கடவுள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்துங்கள் கால தாமதம் வேண்டாம்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: