Followers

Monday, December 22, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      வீட்டைப்பற்றி பல பதிவுகளில் சொல்லிருக்கிறேன். இந்தப்பதிவில் மேலும் ஒரு கருத்தை பார்க்கலாம்.

ஒரு கோவில் கட்டி முடிக்கப்பெற்ற பின்பு அதற்கு கும்பாபிஷேகம் செய்து பிறகு தான் மக்களை வழிபாடு செய்ய சொல்லுகிறார்கள். கும்பாபிஷேகம் செய்யும்பொழுது பல பூஜைகள் மற்றும் யாகங்களை செய்த பிறகு தான் வழிபாடு செய்கிறார்கள்.

கும்பாபிஷேகத்தில் ஒரு நிகழ்வாக பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை உள்ளே இழுக்க செய்வதற்க்கு ஒரு வித சடங்கு செய்வார்கள். அந்த சடங்கு செய்யும்பொழுது பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை உள்ளே வரவழைக்க கோவிலின் கலசம் வழியாக நூல் கட்டி உள்ளே இழுப்பார்கள். அப்படி இழுத்து சிலைக்குள் கொண்டுவந்து நிறுத்துவார்கள். இது பழைமையான கோவிலில் இப்படி தான் செய்வார்கள். தற்பொழுது இதனை எல்லாம் செய்வதில்லை. அதனால் தான் கோவிலில்களில் சக்தி இல்லாமல் இருக்கிறது.

 ஒரு வீட்டை கட்டிய பிறகு அந்த வீட்டிற்க்கு குடிபோகும்பொழுது ஒரு சின்ன கணபதி ஹோமம் மட்டும் செய்துவிட்டு அப்படியே குடிபுகுந்துவிடுவார்கள். இந்த ஹோமம் செய்வதற்க்கு கூட இப்பொழுது சரியான ஆட்கள் இல்லை என்பது தான் உண்மையான ஒரு செய்தி.

குடிபுகும்பொழுது செய்கின்ற பூஜை எல்லாம் அந்த வீட்டில் நடந்த தீட்டை மட்டும் குறைக்குமே தவிர பிரபஞ்ச சக்தியை உள்ளே தங்குவதற்க்கு எல்லாம் செய்வது கிடையாது. 

வீடு கட்டும்பொழுது பல ஆட்கள் வேலை செய்வார்கள். அவர்கள் வேலை செய்யும்பொழுது ஒழுங்காக சுத்தமாக இருந்து வேலை செய்து இருக்க மாட்டார்கள். அவர்களின் வழியாக தீட்டு உள்ளேயே இருக்கும். நீங்கள் பிராமணர்களை வைத்து செய்கின்ற பூஜை எல்லாம் இந்த தீட்டை மட்டும் குறைக்குமே தவிர பிரபஞ்ச சக்தி உள்ளே வருவதற்க்கு செய்வது கிடையாது.

பிரபஞ்ச சக்தி அதுவாகவே உள்ளே வந்தால் கூட உங்களின் கட்டிடத்தில் உள்ளே தங்க வைக்க பல ஏற்பாடுகளை நீங்கள் செய்யவேண்டும். அப்படி ஏற்பாடுகளை செய்தால் மட்டுமே உங்களின் வீடு மிகுந்த சக்தி அளிக்க கூடியதாக இருக்கும்.

கோவிலில் இருக்கும் சிலைக்கு மனிதன் பிராணன் கொடுத்து தான் அந்த சிலைக்கு உயிர் கொடுக்கிறான். அப்படி கொடுக்கும்பொழுது தான் அது கடவுள். அப்படி இல்லை என்றால் அது வெறும் கல். உங்களின் வீட்டிற்க்கும் உயிர் கொடுத்தால் தான் அது சக்தி மிகுந்த வீடு அப்படி இல்லை என்றால் அது வெறும் டப்பா போல் தான் இருக்கும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: