Followers

Monday, May 20, 2013

அம்மனின் அருள்



வணக்கம் நண்பர்களே!
                    எனது ஊரில் எனக்கு என்ன வேலை என்றால் காலையில் எழுந்தவுடன் நூலகம் செல்வது அங்கு சென்று ஒரு புத்தகம் விடமால் படிப்பது இது தான் வேலை. எனது அப்பா என்னை பார்த்துவிட்டு இவனை இப்படியே விட்டுவிட்டால் சரிபட்டு வரமாட்டான் என்று ஒரு உறவினர் சென்னையில் தொழில் செய்துக்கொண்டு இருக்கிறார் அவரிடம் என்னை அனுப்பினர். அடையாரில் அலுவலகம் இருந்தது அவர் சென்னையில் பல தொழில்கள் செய்து வருகிறார். 

அடையாரில் மட்டும் நான்கு இடத்தில் சொந்தமாக இடம் வைத்திருந்தார். சென்னையில் கட்டிடதொழிலும் செய்து வந்தார். அவரிடம் நான் வேலைக்கு சேர்ந்தேன். அடையாரில் வசிக்க ஆரம்பித்தது அப்பொழுது இருந்து தான். நான் அங்கு வேலை பார்க்கும்பொழுது அந்த கம்பெனியில் மிககுறைந்த சம்பளம் வாங்கியது நான் ஒருவனாக இருக்கமுடியும். ஏன குறைவாக சம்பளம் கொடுத்தார் என்றால் ஊரில் இருந்து வந்திருக்கிறான் ஒன்றும் தெரியாது என்று அவரின் நரித்தனத்தை பயன்படுத்தினார். சரி நாமும் இந்த தொழிலில் புதியவன் தொழிலை கற்றுக்கொள்ளலாம் என்று எண்ணி இருந்துவிட்டேன். 

சரியாக ஒரு வருடகாலம் அதில் இருக்கும்பொழுது அனைத்தையும் கற்றுவிட்டேன். இவர் சம்பளத்தை மட்டும் ஏற்றவில்லை அப்பொழுது ஒரு நபர் வெளியில் எனக்கு பழகப்பட்டார். அந்த நபரிடம் நான் பழகியதை தெரிந்து இந்த தொழில் அதிபர் என்னை கம்பெனியில் இருந்து வெளியில் போகச்சொன்னார். நானும் வெளியில் வந்து சிறிய அளவில் ஒரு கம்பெனி தொடங்கலாம் என்று எண்ணி தெரிந்த நபரிடம் உதவி கேட்டேன் அவரும் உதவி செய்கிறேன் என்று சொன்னார்.

அப்பாடா சென்னை வந்து ஒரு வருடத்தில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கபோகிறோம் என்று எண்ணி மிகுந்த சந்தோஷம் அடைந்தேன். அப்பொழுது தான் விதி விளையாட ஆரம்பித்தது. நான் கம்பெனி ஆரம்பிக்கிறேன் என்பதை அறிந்துக்கொண்ட அந்த தொழில்அதிபர் என்னை விடக்கூடாது என்று பல தொந்தரவுகளை கொடுக்க ஆரம்பித்தார். பிரச்சினையை என்னால் எதிர்க்கொள்ளமுடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். 

அவரிடம் பல கோடி இருக்கிறது அவரை எதிர்ப்பது என்பது என்னால் முடியாதா காரியம். என்னிடம் ஒரு பைசா கிடையாது அனைத்தும் அடுத்தவர்களின் உதவி நோக்கி இருப்பவன் எப்படி மிகப்பெரிய சாம்ராஜத்தை எதிர்ப்பது. ஒரு பணக்காரனை எதிர்ப்பது என்பது நாமே சுவற்றில் போய் மோதிக்கொள்வதற்க்கு சமம். பணத்தை வைத்துக்கொண்டு நம்மை இந்த பூமியில் உயிரோடு வைக்கமாட்டார்கள். 

பல வழிகளிலும் தொந்தரவு கொடுத்தவர்கள் கடைசியில் என்ன செய்தார் என்றால் அடையார் காவல் துறையினர் மூலம் என்னை மிரட்ட ஆரம்பித்தார்கள். சரி இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற எண்ணினேன். சரி நமது திட்டத்தை கைவிட்டுவிட்டேன். என்னை மிரட்டினாலும் பரவாயில்லை என்னுடைய ஊரில் உள்ள எனது அம்மா அப்பாவையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள். 

அப்பொழுது அம்மாவும் அப்பாவும் மிகுந்த மனகஷ்டத்தை அனுபவித்தார்கள். அன்று இரவு ஒரு நிகழ்வு நடந்தது அது என்ன என்றால் எனது அம்மாவின் கனவில் அம்மன் தோன்றி நீ ஏன் கவலைப்படுகிறாய் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றது.  

இனி அம்மனின் திருவிளையாடல்

மறுநாள் முதல் ஒரு பிரச்சினையும் வரவில்லை எந்த ஒரு ரூபத்திலும் பிரச்சினை வரவில்லை. நான் கம்பெனி ஆரம்பிக்க வேண்டாம் என்று விட்டு விட்டு கம்யூட்டர் தொழிலுக்கு வந்துவிட்டேன். அடுத்த மாதத்திலிருந்து என்னை மிரட்டிய தொழில் அதிபர் வீழ்ச்சி நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தார். அனைத்தும் போனது. அவர்கள் என்ன என்னவோ செய்து பார்த்தார். கேரளாவில் பார்க்காத மாந்தீரிகவாதி கிடையாது. எது செய்தும்  நிற்க முடியவில்லை. கடைசியில் பல ஆன்மீகவாதிகளின் ஆலோசனைப்படி எனது சொந்த ஊரில் இருக்கும்  ஸ்ரீ அங்காளபரமேஸ்வரிக்கு பல்வேறுப்பட்ட பூஜை காணிக்கை எல்லாம் செய்தார். ஒரு படியும் முன்னேற்றம் என்பது கிடையாது. அவரும் எனது உறவினர் மற்றும் எனது பக்கத்து ஊர்க்காரர் தான். 

சென்னையில் நூறு கோடி ரூபாய்க்கு சொத்துமதிப்பை கொண்டவர் சென்னையில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். வாடகை கொடுக்கமுடியவில்லை. ஒரு மனிதன் ஏழையாக இருந்து பணக்காரனாக போகலாம் ஆனால் பணக்காரன் ஏழையாக மாறினான் என்றால் அது போல் ஒரு கொடுமை இந்த உலகத்தில் இருக்கமுடியாது.அப்படி ஒரு கஷ்டத்தை அனுபவித்தார். அந்த தொழில் அதிபரின் மகனும் அயல்நாட்டில் வேலை பார்த்து வந்தார் அவரும் உருப்படவில்லை. அந்த வீட்டில் உள்ள அனைவரும் இன்று மிகவும் கேவலமான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இன்றும் அவரை நான் பார்த்தது இல்லை. நான் ஒரு நாள் அம்மனை தியானத்தில் அமர்ந்து கேட்டேன். அதற்கு அம்மன் என்னுடைய பக்தனுக்கு ஒருவன் தீங்கு செய்தாலோ அவனை இழிப்படுத்தினாலோ ஏமாற்றப்பட்டாலோ அவன் யாராக இருந்தாலும் நான் விட்டுவைப்பதில்லை என்றது. நான் அவனை உன் கண்முன்னே கொண்டு வந்த நிற்கவைப்பேன் அப்பொழுது அவனின் நிலையை நீ பார் என்றது. எனது மனதிற்க்கு கஷ்டமாக தான் இருந்தது. அந்த குடும்பத்தினரின் கடைசி காலம் எப்படி இருக்கும் என்பது தெரிந்த ஒன்று தான்.

என்ன செய்வது ஒன்றும் முடியாத காரியம். ஒருவன் பணத்தை சம்பாதித்தால் அதனை வைத்துக்கொண்டு வாழவேண்டும் அதனை விட்டுவிட்டு அடுத்தவனுக்கு தொந்தரவு கொடுக்ககூடாது. நான் அப்பொழுது அந்தளவுக்கு பக்தி கிடையாது ஏதோ சாமி கும்பிடுவேன் ஆனால் எனது அம்மாவும் அப்பாவும் சிறந்த பக்திமான்கள். அம்மனுக்கு அனைத்தையும் கொடுத்தவர்கள். அம்மன் மேல் பாசம் என்பதை விட அப்படி ஒரு வெறி என்று தான் சொல்லவேண்டும். அவர்களின் பக்தி தான் நான் ஏதோ ஆன்மிகத்தில் வளர்ந்திருக்கிறேன் என்று சொல்லவேண்டும்.

ஒரு பணக்காரனின் பக்திவிட ஒரு ஏழையின் பக்தி அதிக வீரியம் கொண்டது. பணக்காரன் பக்தி சந்தேகத்துடன் இருக்கும் ஆனால் ஏழையின் பக்தி முழுமையானது அதில் ஒரு சந்தேகமும் இருக்காது. ஏழையின் கூப்பிட்ட குரலுக்கு ஒடி வருவாள் அம்மன். தன் கண்ணை இமை காப்பது போல் தன்னை வணங்கும் பக்தர்களை காப்பாள். அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். 

இந்த நிகழ்ச்சியை ஏன் சொல்லுகிறேன் என்றால் எனக்கு ஒருவன் தீங்கு செய்ததால் அவனுக்கு தீங்கு நடந்ததால் நான் மகிழ்ச்சி கொண்டேன் என்று சொல்லவி்ல்லை ஒரு அம்மனின் பக்தனுக்கு தீங்கு செய்தால் அந்த அம்மன் அதனை பார்த்துக்கொண்டு இருப்பதில்லை. அந்த பக்தனை எப்படி காப்பாற்றுகிறது என்பதை சொல்லுவதற்க்காக மட்டுமே இந்த பதிவு. 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்காவில் ஆம்பலாபட்டு என்ற கிராமத்தில் பாலாயிக்குடிக்காடு என்ற தெருவில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் தான் எனது குலதெய்வம். அந்த தெய்வம் தான் உங்களுக்கும் இந்த தளம்வழியாக அருளை வழங்கிக்கொண்டிருக்கிறது. நான் எழுதுவதற்க்கும் உங்களை ஆன்மிகத்தில் உயர்த்துவதற்க்கும் இந்த அம்மன் உங்களுககு அருளை தருகிறது.

இந்த அம்மனின் கோவிலில் சிலை வைக்கவி்ல்லை புற்று தான் அம்மனாக இங்கு இருக்கிறது. ஒரு நாள் என்னிடம் இந்த நிலம் முழுவதும் பூமிக்கு அடியில் அனைத்தும் புற்றுவாகவே இருக்கிறேன் என்றது. நிறைய விசயங்கள் என்னிடம் சொல்லியுள்ளது அதனைப்பற்றி அவ்வப்பொழுது உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். இந்த அம்மனுக்கு பலவித மந்திரங்களை சொல்லி உரு ஏற்றுவதற்க்கென்றே பல பேர் பல நூறு ஆண்டுகளாக இங்கே செய்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்பேர்பட்ட ஆற்றலை கொண்டது அம்மன். அந்த சக்தியை அந்த மண்ணில் நீங்கள் கால் வைக்கும்பொழுதே உங்களுக்கு தோன்றும். நீங்கள் ஆன்மீகவாதியாக இருந்தால் இந்த பிளாக்கை படிக்கும்பொழுதே தெரியும் அதனை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால் இந்த அம்மனின் பூமியில் அடிவைக்கவேண்டும்.

இன்று ஸ்ரீ அங்காளபரமேஸ்வரிக்கு குலதெய்வ பூஜை. நீங்கள் ஒரு நிமிடம் இந்த அம்மனை இன்று நினையுங்கள் அப்பொழுது அம்மனின் அருளை பாருங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Sunday, May 19, 2013

வியாபார நண்பர்களுக்கு



வணக்கம் நண்பர்களே!
                    வியாபார நண்பர்களுக்கு ஆலோசனை என்ற பதிவில் வியாபார செய்பவர்களுக்கு என்று ஒரு வாய்ப்பை கொடுத்திருந்தேன். அதன் மூலம் பல நண்பர்கள் என்னிடம் தொடர்புக்கொண்டு அவர்களின் வியாபாரத்தை நல்ல முறையில் மேம்படுத்திக்கொண்டு வருகிறார்கள். 

இப்பொழுது இதனை பயன்படுத்துபவர்கள் அதிகம் பேர் நமது பிளாக்கில் இருந்து வருவதால் அவர்களுக்கு பதிவு மூலமாக ஒரு சில கருத்துக்களை சொல்லுகிறேன். உங்களின் வியாபாரத்தை படிப்படியாக மட்டுமே உயர்த்தமுடியும். உடனடியாக நீங்கள் உயர முடியாது. உங்களின் கிரக நிலை தடைசெய்யும். உங்களை ஒரு நிலைக்கு உயர்த்திய பிறகு உங்களுக்கு என்று ஒரு சில பூஜைகளை உங்களை வைத்து நாங்கள் செய்வோம். அதன் பிறகு தான் நீங்கள் நினைக்கும் இடத்திற்க்கு உங்களால் செல்ல முடியும். 

இந்த பூஜைகளுக்கு செய்யும் செலவு எல்லாம் உங்களின் வியாபாரத்தில் சம்பாதித்து அந்த பணத்தின் வழியாக தான் செய்வோம். அதனால் முதல் நிலையில் படிப்படியாக உயருங்கள் அதன் பிறகு மிக உயர்ந்த நிலைக்கு செல்லலாம். உங்களிடம் நான் எதையும் மறைப்பதில்லை உங்களை படிப்படியாக உயர்த்தும்பொழுது மட்டுமே நீங்கள் என்னை மறக்கமாட்டீர்கள். உடனடியாக உயர்த்தினால் அடுத்த நிமிடமே என்னை மறந்துவிட்டு சென்றுவிடுவீர்கள்.

வடநாட்டு சேட்டுகளுக்கு மட்டுமே செய்து வந்ததை உங்களுக்கு செய்து தருகிறேன். சேட்டுகள் வியாபாரம் அவ்வளவு துல்லியமாக இருக்கும். அவர்களுக்கு என்னை போல் இருப்பவர்கள் எது வேண்டுமானாலும் செய்து கொடுப்பார்கள். அவர்கள் எங்களுக்கு கொடுக்கும் தொகையும் அதிகம் எந்த வித பிரச்சினையும் எங்களுக்கு கொடுக்கமாட்டார்கள். மாதம் முடிந்தால் பணம் எங்களுக்கு தேடிவரும்.

நமது மதத்தில் நிறைய விசயங்கள் வியாபாரத்திற்க்கு என்று உள்ளது அதனை உங்களுக்கு பயன்படும் விதமாக தருகிறோம். பல பேர் வியாபாரத்தில் ஆன்மிகவாதிகளிடம் ஏமாந்து போய் உள்ளார்கள். நேற்று என்னிடம் பிரான்சில் இருந்து பேசிய நண்பர் ஒருவர் கூட என்னிடம் சொன்னார். இங்கு வந்து மந்திரம் செய்து தருகிறேன். வியாபாரத்தை முன்னேற்றி தருகிறேன் என்று சொல்லி இந்தியாவில் இருந்து இங்கு வந்து ஏமாற்றிஉள்ளார்கள் என்று சொன்னார்.

நாம் அப்படி செய்வதில்லை நீங்கள் பணத்தை ஒரு போதும் முன்னாடியே தரபோவதில்லை நீங்கள் வியாபாரத்தில் வெற்றி பெற்று நல்ல நிலையில் இருக்கின்ற பொழுது மட்டுமே நீங்கள் எனக்கு பணம் தரபோகிறீர்கள் அதனால் உங்களுக்கு பலனை கொடுத்துவிட்டு பிறகு பணத்தை பெற்றுக்கொள்கிறேன். இந்த வழியில் நீங்கள் நினைக்காத முன்னேற்றத்தை அடையமுடியும். சரியாக பயன்படுத்துங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Saturday, May 18, 2013

மந்திரபயிற்சி செய்பவர்களுக்காக


வணக்கம் நண்பர்களே !
                    மந்திர பயிற்சி செய்பவர்கள் அடிக்கடி என்னை தொடர்புக்கொண்டு பல சந்தேகங்களை கேட்டு  வருகிறார்கள். அவர்கள் கேள்வி கேட்கும் பொழுது ஒன்று மட்டும் எனக்கு நன்றாக தெரிகிறது. இது என்ன என்றால் பயம். எதையாவது செய்தால் பிரச்சினை வருமோ என்று தான் அவர்களின் பயம் இருக்கிறது. ஆன்மீகவாதிகள் நன்றாக பயம் கொள்ள செய்திருக்கிறார்கள்.

தேவையற்ற பயம்கொள்ள தேவையில்லை. நீங்கள் கடவுள் தானே கும்பிடுகிறீர்கள் அவரை கும்பிடும்பொழுது எப்படி உங்களை தண்டிப்பார். நான் உங்களுக்கு எந்தவிதத்திலும் கட்டுபாடு என்பதை நான் கொடுக்கவில்லை அதனால் உங்களுக்கு எப்படி இருக்கவேண்டும் என்று தோன்றுகிறதோ அப்படி இருந்துக்கொள்ளுங்கள். ஆன்மிகம் என்றாலே ஏதோ கட்டுபாடு கொண்டது என்பதை நாம் முறியடித்து தான் இந்த பயிற்சியை செய்துக்கொண்டு இருக்கிறோம். அனைவரும் இதனை செய்யவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் உங்களை செய்ய சொல்லுகிறேன்.

பல நண்பர்கள் நான் ஒரு தவறை செய்திருக்கிறேன் நான் இதனை செய்யலாமா என்று கேட்கிறார்கள். உலகத்தில் மனிதனாக பிறந்தால் தவறு செய்யாமல் இருக்கமுடியாது. அது குற்றம் என்று உங்களின் மனதில் நினைத்துக்கொண்டிருக்காமல் இந்த பயிற்சியை செய்யலாம். என்னுடைய நண்பர்கள் பலபேர் நிறைய தவறு செய்திருக்கிறார்கள் அவர்கள் என்னிடம் பயிற்சி செய்து நல்ல நிலையில் இன்று இருக்கிறார்கள். என்னிடம் நான் ஆன்மிகவாதி என்று பேசிய நண்பர்களை இதனை செய்துக்கொடுங்கள் என்று சொன்னால் ஒன்றையும் செய்வதில்லை. சும்மா ஊர் சுற்றி திரிந்துக்கொண்டுருப்பவர்களை இந்த பயிற்சியை செய்யுங்கள் என்று சொன்னேன் இவர்கள் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

நமது மதத்தில் மட்டும் உள்ள மிகப்பெரிய விசயம் என்ன என்றால் அனைத்தையும் ஆன்மீகத்தோடு இணைத்திருப்பார்கள். பிற மதங்களில் காமம் என்றால் அரக்கன் என்று சொல்லுவார்கள் அந்த காமத்திலேயே கடவுளை அடையமுடியும் என்பதையும் நமது மதத்தில் வைத்திருக்கிறார்கள். புகைபிடிப்பது கூட பிராணாயாமம் தான் ஆனால் அதில் உள்ள நஞ்சு உள்ளே செல்வதால் உடலுக்கு தீங்கு விளைக்கிறது.

நமது மதத்தில் அனைத்தும் கடவுள் செயல்போல் காண்பார்கள். நீஙகள் செய்கின்ற வேலை நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலும் கடவுள் தன்மையோடு செய்யும்பொழுது உங்களுக்குள்ளே இருக்கும் கடவுள் தன்மையை அறிந்துக்கொள்ளலாம். நீங்கள் மனதிற்க்குள் குற்ற உணர்ச்சியோடு அனைத்தையும் பார்ப்பதை தவிர்த்துவிட்டு உடனே நீங்கள் பயிற்சியில் ஈடுபடுங்கள்.

ஒவ்வொரு செயலிலும் ஆன்மீகம் கலந்து இருக்கிறது அதனை வெளிக்கொண்டுவருவது கடினமாக இருக்கும். மதுவில் கூட ஆன்மீகத்தில் உச்சத்தை அடையமுடியும் ஆனால் அது அனைவருக்கும் சரிப்பட்டுவராது என்பதால் ஒரு சில வழிமுறைகளை வைத்திருக்கிறார்கள் அந்த வழிமுறைகளை எளிய வழியில் செய்கிறோம்.

நீங்கள் தவறு செய்துவிட்டேன் என்ற குற்றஉணர்ச்சி எல்லாம் அடையதேவையில்லை ஏன் என்றால் ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக்கொண்டு சந்நியாசிகளாக திரிபவர்கள் எல்லாம் செய்கின்ற தவறைவிட நீங்கள் செய்யும் தவறு மிகமிக குறைவான ஒன்று. சந்நியாசிகள் நமக்கு தான் குழந்தைகளும் கிடையாது சொந்தமும் கிடையாது நாம் தவறு செய்தால் யாரையும் அந்த பாவம் கேட்காது என்று சொல்லிக்கொண்டு ஏகாப்பட்ட தவறுகளை செய்கிறார்கள்.

நீங்கள் இல்லறவாழ்க்கையில் இருப்பதால் நாம் தவறு செய்தால் நமது குழந்தைகளுக்கு பாவம் போய்சேரும் என்று நினைத்துக்கொண்டு ஒரு தவறும் செய்வதில்லை. உண்மையை சொல்ல போனால் நீங்கள் தான் வணங்குவதற்க்குரியவர்கள் என்னைப்பொருத்தவரை நீங்கள் தான் கடவுளுக்கு சமமானவர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Thursday, May 16, 2013

ஆன்மீக அனுபவங்கள் 91



வணக்கம் நண்பர்களே!
                    நேற்று ஒரு நண்பர் என்னிடம் பேசினார். பேசிக்கொண்டு இருக்கும்பொழுது ஜாதகத்தைப்பற்றி கேட்டுருந்தார். அப்பொழுது அவரிடம் சொன்னேன் இந்த மாதிரி கிரக அமைப்பு என்பது பெரிய விஷயம் இல்லை அதனை எல்லாம் மாற்றிக்கொள்ளலாம் என்றேன். எப்படி சார் மாற்றமுடியும் என்றார். கர்மாவை எப்படி மாற்றுவது அதுவும் கிரகத்தின் பிடியில் இருந்து எப்படி தப்பிப்பது என்றார். 

நாம் எப்படிபட்ட கர்மாவை சுமந்து வந்தாலும் அதனை போக்கும் வழியை கண்டுபிடித்து வைத்திருப்பவர்கள் நமது சந்நியாசிகள். அவர்களிடம் நீங்கள் தொடர்பு வைத்துக்கொள்ளும்பொழுது உங்களை புனிதராக மாற்றிக்கொள்ளமுடியும் என்றேன். ஜாதகம் சொல்லுவது உண்மை தான் ஆனால் நாம் என்ன தான் சரியாக கணக்கை போட்டாலும் ஒரு சில விசயங்கள் ஜாதகத்தில் இல்லாதது போல் நடந்துவிடும். அப்பொழுது நாம் தலையை பிய்த்துக்கொள்வோம்.

ஒரு நாள் குருவோடு பேசிக்கொண்டு இருக்கும்பொழுது கேட்டேன் ஒருவன் ஏழையாக இருக்கிறான் அவனை கோடிஸ்வரனாக மாற்றமுடியுமா என்று கேட்டேன். அதற்கு குரு சொன்னார் அவனின் பூர்வபுண்ணியத்தில் அவன் செய்த பூர்வபுண்ணியம் சேர்ந்து இருக்கும் அது இந்த பிறவியில் வராமல் போகலாம். அந்த பூர்வபுண்ணியத்தை இந்த பிறவியில் வரும்படி எடுத்து அவனை கோடிஸ்வரனாக மாற்றமுடியும் என்று சொன்னார்.

பல அற்புத விசயங்கள் ஜாதகத்தில் மறைந்து இருக்கிறது அதனை வெளிக்கொண்டுவர அதிக சக்திபடைத்த ஆட்கள் தேவை அந்த ஆட்கள் நினைத்தால் அனைத்தையும் வெளிக்கொண்டுவரமுடியும். சந்நியாசியிடம் உள்ள சக்தி அணுகுண்டைவிட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். அவர்கள் நினைத்தால் அனைத்தும் முடியும்.

நமது கர்மாவின் வினையை குறைப்பதற்க்கு கூட சந்நியாசிகளின் தொடர்பு வைத்துக்கொள்வது நல்லது அவர்கள் நினைத்தால் அனைத்தையும் சரிசெய்து கொடுக்கமுடியும். நீங்கள் சரியான சந்நியாசிகளை சந்திக்கும்பொழுது உங்களுக்கு இதனைப்பற்றி தெரிய ஆரம்பிக்கும்.

நமது பாவப்பட்ட ஆத்மா அவர்களிடம் சொல்லும்பொழுது நமது கர்மவினை வெகுவாகு குறைகிறது. அவர்களின் ஆத்மாவின் வெளிச்சம் நமது ஆத்மாவில் படும்பொழுது மிகுந்த உற்சாகம் நமது ஆத்மா அடையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Wednesday, May 15, 2013

மந்திரபயிற்சி விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                     நமது நண்பர்கள் பலபேர் மந்திரப்பயிற்சி செய்துக்கொண்டு வருகிறீர்கள் அப்படி மந்திரப்பயிற்சி செய்யும் நண்பர்கள் பயிற்சியை மேற்க்கொண்டு மூன்றாவது நாளே என்னிடம்  பேசி எதுவும் நடக்கவில்லை என்று சொல்லுகிறார்கள். மூன்று நாட்களில் அனைத்தும் நடைபெறும் என்று எண்ணினால் எப்படி நடைபெறும். 108 நாட்கள் முடிந்தால் தான் இது முழுமை பெறும் அதுவரை பொறுமை தேவை.

உங்களுக்கு இந்த மந்திரங்கள் உரு ஏறும் பொழுது உங்களின் கர்மா குறையும். கர்மா எந்தளவுக்கு இருக்கிறதோ அந்தளவுக்கு உரு ஏறுவதில் தாமதம் ஏற்படும். ஒரு சிலருக்கு இதனை செய்வதற்க்கே வாய்ப்பு வராது அந்தளவுக்கு அவர்களின் கர்மா தடைச்செய்யும். நீங்கள் பயிற்சி செய்யும் அளவிற்க்கு வந்திருக்கிறீர்கள் என்பது ஒரு புண்ணிய செயல்.

காயத்ரி மந்திரங்கள் செய்பவர்கள் மூச்சுப்பயிற்சியும் செய்துவாருங்கள். மூச்சுப்பயிற்சினை எப்படி செய்வது என்பதை பழைய பதிவுகளில் பாருங்கள். மூச்சுபயிற்சியை செய்ய செய்ய உங்களின் காயத்ரி மந்திரம் அந்தளவுக்கு உங்களுக்கு அதிவேகமாக உருஏறும். மந்திரம் உரு ஏற ஏற நீங்கள் புதிய உலகில் பிரவேசிப்பீர்கள்.

மந்திரப்பயிற்சி செய்யும் நேரத்தை சொன்னேன் அல்லவா கூடுமானவரை பிரம்மமுகூர்த்த நேரமாக இருந்தால் மிகச்சிறப்பு. விடியற்காலையில் பிரம்மமுகூர்த்த நேரத்தில் ஒரு மந்திரம் பல மடங்கு வீரியத்தோடு உரு ஏறும். எனது குரு சொல்வார் ஒரு ஆன்மீகவாதி சரியாக விடியற்காலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்துவிடவேண்டும் என்பார். 

என்னையும் சரியாக நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து பயிற்சி செய்ய சொல்லுவார். எனக்கு விடியற்காலையில் நல்ல தூக்கம் வரும். இவர் தொந்தரவு செய்வார் என்று மொபைலை சுவிட்ஸ் ஆப் செய்வேன். அவர் அவரின் சக்தியால் என்னை விடியற்காலை எழ வைத்துவிடுவார். அதுவே இப்பொழுது பழக்கமாகிவிட்டது. அவர் சொல்வார் விடியற்காலையில் பிரம்மமுகூர்த்தத்தில் தான் தெய்வங்கள் நமக்கு என்று வரும் அப்பொழுது மட்டுமே அனைத்தும் உனக்கு வசப்படும் என்பார். அது உண்மை தான் என்று எனக்கு இப்பொழுது புரிகிறது.

உங்களுக்கு குடுமபத்தில் நிறைய நபர்கள் இருக்கலாம் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்ககூடாது என்பதால் மூன்று நாட்கள் மட்டும் விடியற்காலையில் எழுந்து செய்யசொன்னேன். அடுத்தவர்களுக்கு தொந்தரவு இல்லை என்றால் நீங்கள் விடியற்காலையில் எழுந்து செய்து விரைவில் உன்னதமான நிலையை அடையங்கள்.நல்ல நேரத்தை பயன்படுத்த வேண்டும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

குழந்தை பாக்கியம்: பகுதி 4



வணக்கம் நண்பர்களே !
                     குழந்தை பாக்கியம் பகுதியில் ஒரு பெண்ணின் ஜாதகத்தை பார்க்கலாம்.

மீனம் லக்கினம் கும்ப ராசி. லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். லக்கினாதிபதி தன்னுடைய லக்கினத்தை தன் ஏழாம் பார்வையில் வைத்திருக்கிறார். குரு சனியு்டன் சேர்ந்து அமர்ந்திருக்கிறார். லக்கினத்தை சனியும் பார்வையிடுகிறார். சனி ஏழாம் பார்வையில் தான் பார்க்கிறார். குருவும் சனியும் ஒரே நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்கள். இருவரும் ஹஸ்த நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்கள். ஹஸ்த நட்சத்திரம் சந்திரனின் நட்சத்திரம். இருவரும் ஒரே பாதத்தில் வக்கிரமாக இருக்கிறார்கள்.

ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்கிரத்தில் இருந்தால் பரவாயில்லை. இருகிரகங்கள் வக்கிரமாகியுள்ளது. சனியும் குருவும் வக்கிரமாகியுள்ளது இருவரும் ராஜகிரகங்கள். எண்ணங்கள் வக்கிரமாகிவிடும். குழந்தை பாக்கியத்தை தரும் கிரகமான சந்திரன் பனிரெண்டாம் வீட்டில் போய் அமர்ந்துள்ளது. சந்திரன் மூன்று கிரகங்களோடு அமர்ந்திருக்கிறது. சந்திரன் அங்குபோய் மாட்டிக்கொண்டதால் குழந்தை பாக்கியத்தை தருவதற்க்கு காலம் சென்றது.

திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பாக்கியம் உருவாகியது. குழந்தை பாக்கியம் உருவாகி மூன்று நான்கு மாதங்களில் அழிந்தது. ராகு ஐந்தில் இருக்கிறார் மற்றும் சந்திரன் செவ்வாயோடும் இருக்கிறது அதனால் நடந்தது.

இந்த பெண்ணின் கணவர் வீட்டில் இந்த பெண்ணை திட்டினதால் ஒரு முறை தற்கொலைக்கும் முயன்றார். காப்பாற்றிவிட்டார்கள். ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்றால் எட்டாவது வீட்டு அதிபதி கேதுவுடன் சேர்ந்திருக்கிறார். கேது தற்கொலை எண்ணத்தை தருவார். மனக்காரகன் சந்திரன் பாதிப்படைந்துள்ளதால் அந்த எண்ணத்தை தந்திருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு பிறகு சோதிடத்தை பார்த்து தகுந்த பரிகாரம் செய்து குழந்தை தங்கி நல்லபடியாக குழந்தை பெற்று எடுத்தார் அந்த பெண். பரிகாரத்திற்க்கு அனைத்து கோவில்களுக்கும் சென்று வரவேண்டியதாகிவிட்டது. ஏன் என்றால் அதிகபட்ச கிரகங்கள் பாதிப்படைந்துள்ளதால் அவ்வாறு செல்லவேண்டியதாகிவிட்டது.


பரிகாரம் 

குலதெய்வத்திற்க்கு ஒரு அபிஷேகம்.

சூரியனார் கோவில் சென்று சூரியபெருமானை வழிப்பட்டார்கள். ஏன் சூரியனை வழிபடவேண்டும்

நவக்கிரகங்களுக்கு பரிகாரம் செய்ய தொடங்கினால் சூரியனை முதலில் வழிப்பட்டுவிட்டு பரிகாரம் செய்ய தொடங்க வேண்டும். அதன் பிறகு குரு மற்றும் சனிக்கு பரிகாரம் செய்தார்கள். ராகுவிற்க்காக பாம்பு சிலைக்கு பூஜை செய்தார்கள். திருச்செந்தூர் முருகனை வணங்கிய பிறகு இந்த பெண்ணிற்க்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Tuesday, May 14, 2013

ஆன்மீக அனுபவங்கள் 90


வணக்கம் நண்பர்களே!
                    ஆத்மாவைப்பற்றி எழுதி வெகுநாட்கள் சென்றுவிட்டது இனி ஆத்மாவைப்பற்றி பார்க்கலாம். ஆத்மாவைப்பற்றி எண்ணம் ஒருவருக்கு எப்பொழுது ஏற்படும்?

உலகத்தில் ஒருவனுக்கு ஒரு கட்டம் வரும் அது என்ன என்றால் அவனை சுற்றி ஏதோ ஒரு மரணச் சம்பவம் நடைபெறும். அந்த மரணச்சம்பவம் அவனுள் மாற்றத்தை ஏற்படுத்தும்மானால் அவனுக்கு ஆத்மாவைப்பற்றி எண்ணத்தோன்றும். உலகத்தில் உள்ள ஞானிகளுக்கு இது ஏற்பட்டுருக்கும். விபத்தில் சிக்கி ஒரு நிமிடத்தில் தப்பிப்பவனுக்கு இது வந்திருக்கும். ஆத்மாவைப்பற்றி எண்ணம் வர இது தான் தகுதி என்பதில்லை மரணத்தைப்பற்றி அவனுள் எழும் எண்ணம் தான் ஆத்மாவைப்பற்றி சிந்திக்க தூண்டுகிறது.

எல்லா மனிதருக்கும் ஆரம்பம் பிறப்பு என்றாலும் அவனை மிகவும் சிந்திக்க வைப்பது இறப்பு தான். உலகத்தில் உள்ள அனைவருக்கும் இறப்பு வருகிறது. இறப்பைப்பற்றி அதிகமாக சிந்திப்பவனுக்கு அது பிறப்பின் மறுபக்கம் என தெரிகிறது.

பிறப்பதால் தான் இறப்பு வருகிறது. இறக்காமல் இருக்கவேண்டும் என்றால் பிறக்காமல் இருக்கவேண்டும். இதனை நன்கு சிந்திப்பன் தான் ஆத்மாவைப்பற்றி உணர ஆரம்பிக்கிறான். எவன் ஒருவன் இறப்பைப்பற்றி சிந்திக்கிறானே அவன் ஆத்மாவைப்பற்றி அறிய தகுதியுள்ளவனாகிறான்.

இறப்பைபற்றி அதிகம் சிந்திக்க தூண்டுபவையாக அவனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்த மனிதனின் ஜாதகம் பல வழிகளை காட்டுகிறது. ஜாதகத்தில் லக்கினாதிபதி எட்டாம் வீட்டில்  அமர்ந்தால் அவன் மரணத்தைப்பற்றி அதிகம் சிந்திக்க தூண்டும். 

மூன்றாம் வீடு ஆறாம் வீடு எட்டாம் வீடு பனிரெண்டாம் வீடு ஆகியவை அதிகமாக தூண்டும். ஒருவன் அதிகமாக பாதிக்கப்படும்பொழுது அவன் மரணத்தைப்பற்றி சிந்திக்க தூண்டும். இந்த வீடுகளால் அதிகமாக ஞானியாகிவிடுவார்கள்.

இந்த காலத்தில் இறப்பு வீட்டிற்க்கு சென்றால் செல்லும் அனைவரும் தனக்கு மரணம் வருவதில்லை என்று நினைப்போடு தான் இருக்கிறார்கள். இறப்பு வீட்டிற்க்கு சென்று அங்கு ஜாலியாக இருப்பது தான் அதிகமாக செய்கிறார்கள். மகாபாரதத்தில் யட்சன் தர்மரிடம் இந்த உலகத்தில் வேடிக்கையான விஷயம் என்றால் என்ன கேட்பார். அதற்கு தர்மர் ஒருவன் தன்னுடன் இருப்பவர்கள் அனைவரும் இறக்கும்பொழுது தான் மட்டும் இறக்கமாட்டேன் நான் சாஸ்வதாமாக இருக்கபோகிறேன் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறானே அவர்களை பார்க்கும்பொழுது வேடிக்கையாக இருக்கிறது என்றார். 

தான் இறக்கமாட்டேன் என்று நினைக்காமல் மரணத்தில் என்ன இருக்கிறது என்பதை சிந்திபவனுக்கு ஆத்மாவைப்பற்றி எண்ணதோன்றும்.மரணத்தை பற்றி சிந்திக்கும்பொழுது ஆத்மாவைப்பற்றி எண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.

தொடரும்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.