Followers

Tuesday, January 10, 2012

சோதிட அனுபவ தொடர் 4




பித்ரு தோஷத்திற்க்கு பரிகாரம் என்ன என்று கடந்த பதிவில் கேட்டு இருந்தேன்.

திரு வேலு அவர்கள் சொன்ன பரிகாரம்

காளஹாஸ்தி சென்று பரிகாரம் செய்யலாம். பூர்வ புண்ணியம் கெட்டு இருப்பதால் ராமேஸ்வரம் காசி மற்றும் கய சென்று வரலாம்.
குலதெய்வ வழிபாடு அமாவாசை அன்று செய்யலாம்.

என்று சொன்னார் .

இந்த 5 ஆம் வீட்டை தொட்டவுடன் பதிவு ஒரே நீண்டு கொண்டு செல்கிறது இருந்தாலும் பார்க்கலாம் பித்ரு தோஷத்தை பொருத்தவரை முற்பிறவி பற்றிதான் அதிகமாக பேச வேண்டியுள்ளது.

ஒருவர் முற்பிறவியில் கெடுதல் செய்தால் இப்பிறவியில் கண்டிப்பாக அனுபவித்து தீரவேண்டும். இந்த தோஷத்திற்க்கு நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் இராமேஸ்வரத்தில் பித்ரு கடனை தீர்ப்பது தான். அல்லது ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருப்பது. முன்னோர்களுக்கு தர்பனம் கொடுக்கலாம்.

தர்பனம் கொடுப்பதில் இரண்டு வகை உண்டு ஒன்று நம் முன்னோர்களுக்கு கொடுப்பது அடுத்தது காருணிய தர்பனம். நம்முடன் வாழ்ந்த உயிர்களுக்கு அதாவது உங்களுக்கு பாடம் சொல்லி தந்த ஆசிரியர்களுக்கு உங்களுடன் வாழ்ந்த அண்டை அயலார் மற்றும் உயிரினங்களுக்கு என அனைத்துக்கும் தர்பனம் தருவது தான் காருணிய தர்பனம் எனப்படும். அனைத்து உயிர்களுக்கும் கொடுப்படவேண்டும் என்பது எவ்வளவு உயர்ந்த செயல் என்று பாருங்கள்.

தர்பனம் செய்வதில் ஒரு சிக்கல் உள்ளது அது என்ன என்றால் ஒருவர் தர்பனம் செய்யவேண்டும் என்றால் அவருக்கு தாய் அல்லது தந்தை ஒருவர் உயிரோடு இருக்ககூடாது. இருவரும் உயிரோடு இருக்கும் பையனுக்கு என்ன செய்வது?

உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் ஒரு ஜாதககத்ததை எடுத்தாலே போதும் உங்கள் வீட்டில் அனைவருக்கும் போதுமான பலன்களை சொல்லிவிடலாம். ஏன் உங்கள் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கும் சொல்லலாம்.

இந்த சமுதாயத்தில் வாழ்பவர்கள் ஒன்றோடு ஒன்றாக பிணைந்து இருப்பதாக ஜாதகங்கள் தெரிவிக்கின்றன. உங்களுடைய ஜாதகத்ததை எடுத்தாலே உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஜாதகங்களில் உள்ள பலன்கள் தெரியவரும். ஏன் அடுத்த வீட்டை பற்றி கூட சொல்லாம். ஜாதகங்கள் தெரிவிப்பது அடுத்தவருக்கு தீமை செய்தால் கண்டிப்பாக பாவங்கள் ஏற்படும்.

ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அடுத்தவருக்கு பலன் சொல்லுவது எப்படி என்று எதிர்காலத்தில் பார்க்கலாம்.

இவருடைய ஜாதகத்தில் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டை பார்க்கிறது.இரத்த காயத்தை வரவழைக்கும். இதனால் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
ஐந்தாம் வீட்டின் பலன்களை இவருடைய ஜாதகத்தை வைத்து போதுமான அளவு பார்த்துவிட்டோம்.


ஆறாம் வீடு சத்ரு ஸ்தானம் என அழைக்கப்படுகிறது.ஆறாம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டில் இருப்பதால் இவருடைய எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இவர் இருக்கவேண்டும். ஆறாம் வீட்டில் குரு நீசமாக இருக்கிறார் அதனால் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தடை ஏற்படுகிறது. பொதுவாக கெட்ட அல்லது மறைவு ஸ்தானத்தில் சுபகிரகங்கள் நிற்பது அவ்வளவு நல்லதல்ல. வேலையாட்களை வைத்து வேலை வாங்கலாம்.

களத்திர ஸ்தானம் என அழைக்கப்படுகிற 7 ஆம் வீட்டு பலன். 7 ஆம் வீட்டு அதிபதி 10 ஆம் வீட்டில் இருக்கிறார். 7 ஆம் வீட்டு அதிபதி சனி. சனியின் வீட்டில் சூரியன் சந்திரன் மற்றும் சுக்கிரன். 7 ஆம் வீட்டில் சூரியன் இருந்தாலே மணவாழ்க்கை பிரச்சினையை தரும் மூன்று கிரகம் ஒரு வீட்டில் இருக்கிறது அதுவும் ஏழாம் வீட்டில் இருக்கிறது இவருக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை. இப்பொழுது இவர் எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறுகிறார்.

**********************************************************************************
திரு மணி அவர்கள் சில கேள்வி கேட்டார்

கேள்வி

தாங்கள் தொழில்முறை ஜோதிடரா? பல ஜாதகங்களில் ஜோதிட விதிகளை நாம் அப்ளை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. விதிகள், விதிவிலக்குகள் என்று எவற்றிற்கும் புலனாகாத ஜாதகங்களும் உண்டு.

உதாரணமாக குழந்தை பாக்கியத்திற்கு நாம் 5ம் வீட்டை கொண்டு கணக்கிடுகிறோம்.

சில ஜாதகங்களில் 5 ம் மிடம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆனாலும் வேறு சில விதிகளால் குழந்தைபாக்கியம் இருக்கும், சில ஜாதகங்களில் இருவருக்கும் யாதொரு பாதிப்பும் இருக்காது. ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும்.

இது போன்ற சமயங்களில் நாம் தடுமாறி ஏழரை சனி, குருபெயர்ச்சி முதலியவற்றை வைத்து சமாளிக்க வேண்டிய நிலை.

உங்கள் அனுபவத்தில் இதை தவிர்க்க எதாவது வழிமுறைகளை கண்டிருக்கிறீர்களா? நண்பரே.

பதில்

நான் தொழில்முறை சோதிடர் தான்.

நீங்கள் சொல்லுவது போல் இருக்கலாம். நானும் இந்த மாதிரி தவறுகளை செய்கிறேன். அந்த நேரத்தில் நான் நினைப்பது நான் இன்னும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எனது தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

அனைத்து விதிகளையும் போட்டு கணித்துபார்க்க எவ்வளவு நேரம் ஆகும் அது வரை சோதிடம் பார்க்க வந்தவர்கள் பொறுமையாக இருப்பார்களா? நீண்ட நேரத்தை செலவிட நாம் தான் தயாராக இருக்கிறோமா? அப்படியே பார்த்தாலும் அதற்கு தேவையான பணத்தை அவர்கள் கொடுப்பதற்க்கு தயாரா இருப்பார்களா ?
இந்த மாதிரியான பிரச்சினைகளும் உள்ளன.

ஆனால் சோதிடத்தில் நமது முன்னோர்கள் கணித்தது அனைத்தும் சரியாகவே இருக்கிறது. இன்று அமாவாசை பௌர்ணமி என்று கூறுகிறார்கள் அனைத்தும் சரியாக அவர்கள் சொல்லும் நேரத்தில் நடைபெறும் போது நமது பலன்கள் மாறுவது ஏன்?

நாம் செய்யும் கணக்கீடு தான் தவறுதலாக இருக்கிறது. ஏதோ ஒரு சில புத்தகங்களை மட்டும் படித்துக்கொண்டு சோதிடம் பார்க்க வந்துவிடுகிறோம்.
சோதிடத்தில் பல பிரிவுகள் உள்ளன அனைத்து பிரிவுகளையும் நாம் படிப்பது இயலாத காரியம் அல்லது மேலோட்டமாகவும் படித்து இருக்க வேண்டும்.அப்பொழுது நாம் கணிக்க முடியும்.

99 % பலன்கள் சரியாக சொல்லமுடியும். ஏன் 100% எழுத வேண்டியது தானே என்று நினைக்கலாம். அந்த 1% கடவுள் நம் மூலம் சொல்ல வைப்பார். சோதிட கலையில் தெய்வபலன் மிக முக்கியம் அது இல்லையேன்றால் சோதிடம் 100 % சொல்லுவது கஷ்டம் தான். நீங்கள் சோதிடம் பார்ப்பதில் புதியவர் என்றால் இந்த பதில் திருப்தி அளிக்காது. அனுபவத்தில் இதை நீங்கள் நன்கு உணரலாம்.

எங்கள் ஊர் பகுதியில் (எங்கள் ஊர் தஞ்சாவூர்). சில சோதிடர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் நீங்கள் இறந்தவரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு காட்டி பலன் கூறுங்கள் என்று காண்பித்தால் அவர்கள் உடனே இவர் இறந்துவிட்டார் என்று ஜாதகத்தை திருப்பிகொடுத்துவிடுவார்கள். இதை நான் ஏன் கூறுகிறேன் என்று சொன்னால் தெய்வபலத்திற்க்கு ஒரு எடுத்துக்காட்டு இது எனது அனுபவ உண்மை.

நானும் இந்த முழுமையான தெய்வ பலனை பெற முயற்சி செய்கிறேன் இன்னும் கிடைக்கவில்லை.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு


3 comments:

MANI said...

தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன் நண்பரே!.

எனது கேள்விகளுக்கு விளக்கம் கூறியமைக்கு நன்றி.

///எங்கள் ஊர் பகுதியில் (எங்கள் ஊர் தஞ்சாவூர்). சில சோதிடர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் நீங்கள் இறந்தவரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு காட்டி பலன் கூறுங்கள் என்று காண்பித்தால் அவர்கள் உடனே இவர் இறந்துவிட்டார் என்று ஜாதகத்தை திருப்பிகொடுத்துவிடுவார்கள். ////

நீங்கள் கூறிய இந்த விஷயம் நெடுநாளாக நான் அறிந்து கொள்ள விரும்பிய விஷயமாகும்.

ஆயுளை கணிக்க யாராலும் முடியாது என்று நம் அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்க தஞ்சை ஜோதிடர்களில் சிலர் மட்டும் எப்படி ஜாதகத்தை பார்த்த உடனே இறந்தவர் ஜாதகம் என்று கண்டுபிடிக்கிறார்கள்.

துருவ கணித குறியீடுகளை வைத்து சொல்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் ஜோதிட விதிகள் இருக்கின்றனவா? என்று தெரியவில்லை.

உங்கள் அனுபவத்தில் இப்படி கண்டறியும் வழிமுறையை கற்றிருக்கிறீர்களா?

உங்கள் ஜோதிட அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள். மிகவும் ஆர்வமாக சுவாரஸ்யமாக செல்கிறது. நன்றி.

rajeshsubbu said...

//* MANI said...
தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன் நண்பரே!.

எனது கேள்விகளுக்கு விளக்கம் கூறியமைக்கு நன்றி.

///எங்கள் ஊர் பகுதியில் (எங்கள் ஊர் தஞ்சாவூர்). சில சோதிடர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் நீங்கள் இறந்தவரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு காட்டி பலன் கூறுங்கள் என்று காண்பித்தால் அவர்கள் உடனே இவர் இறந்துவிட்டார் என்று ஜாதகத்தை திருப்பிகொடுத்துவிடுவார்கள். ////

நீங்கள் கூறிய இந்த விஷயம் நெடுநாளாக நான் அறிந்து கொள்ள விரும்பிய விஷயமாகும்.

ஆயுளை கணிக்க யாராலும் முடியாது என்று நம் அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்க தஞ்சை ஜோதிடர்களில் சிலர் மட்டும் எப்படி ஜாதகத்தை பார்த்த உடனே இறந்தவர் ஜாதகம் என்று கண்டுபிடிக்கிறார்கள்.

துருவ கணித குறியீடுகளை வைத்து சொல்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் ஜோதிட விதிகள் இருக்கின்றனவா? என்று தெரியவில்லை.

உங்கள் அனுபவத்தில் இப்படி கண்டறியும் வழிமுறையை கற்றிருக்கிறீர்களா?

உங்கள் ஜோதிட அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள். மிகவும் ஆர்வமாக சுவாரஸ்யமாக செல்கிறது. நன்றி. */

தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.

அவர்கள் கணக்கு போடுவது கிடையாது. பார்த்த உடனே கூறிவிடுவார்கள்.
கணக்குகள் இருக்கின்றன போக போக பார்க்கலாம்.

Kuppuswamy KR said...

ஐயா, மிதுன லக்னம். 1ல் கேது. 5ல் செவ்வாய். 6ல் புதன், சுக்ரன். 7ல் குரு, ராகு, சூரி. 11ல் சந்திரன். 12ல் சனி. எனது குலதெய்வம் எது என்று தெரியவில்லை. பூர்வீகம் காவேரிபாக்கம். அங்குள்ள சப்தகன்னிதான் குலதெய்வம் என்று கூறுகிறார்கள். எனது ஜாதகப்படி பெண் குலதெய்வமா அல்லது ஆண் குலதெய்வமா. பிறந்த தியதி 16-12-1972. ஊர்- பாண்டிச்செரி. நேரம் - 06.07 பிற்பகல். ( 18.07 பி.ப்) அஸ்வினி நட்சத்திரம். மேஷ ராசி. தயவு செய்து மறுக்காமல் கூறவும்.