வணக்கம்!
ஒரு வீட்டில் உள்ள அறைகளிலேயே மிகவும் முக்கியமான ஒன்றாக எதனை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதைப்பற்றி சொல்லுகிறேன். ஒரு வீட்டில் பூஜையறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா இல்லையோ ஒரு வீட்டில் சமையறைக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
வீட்டில் முதலாக இடம் பிடிக்கும் அறை என்பது சமையல் அறை மட்டுமே. சமையல் அறை எந்தளவுக்கு பராமரித்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றமோ அந்தளவுக்கு வீட்டில் உள்ளவர்கள் நன்றாக இருப்பார்கள்.
மனிதனுக்கு சக்தி கொடுக்கும் உணவு மட்டும் அல்லாமல் பல வழிகளிலும் மனிதனின் முன்னேற்றத்திற்க்கு வழி செய்வது சமையல் அறை. சமையல் அறைக்கு செல்லும் பெண்கள் மலர்ந்த முகத்தோடு செல்லவேண்டும். மலர்ந்த முகத்தோடு செல்லும்பொழுது தான் சிறப்பான ஒரு வாழ்க்கை அந்த வீட்டிற்க்கு கிடைக்கும்.
சமையறை சரியில்லை என்றால் பெரும்பாலும் அந்த வீட்டிற்க்கு கடன் வந்து சேர்ந்துவிடும். தற்பொழுது அனைவரும் கடனாக இருக்கவேண்டிய சூழ்நிலை இருப்பதால் அதில் கூடுதலாக வட்டிக்கு பணம் வாங்கி அதனை கட்டமுடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்குவது சமையறலை சரியில்லாத காரணத்தால் வருவது உண்டு.
பெரும்பாலும் சமையறையை அக்னி மூலையில் அமைத்து இருப்பார்கள். அக்னி மூலைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. சமையறை என்றாலே அது சுக்கிரனின் கட்டுபாட்டிற்க்கு வரும். சுக்கிரன் நன்றாக இருந்தால் அது மிகப்பெரிய அளவில் உங்களுக்கு பணவசதியை கொடுக்கும். உங்களின் வீட்டில் சமையறை நன்றாக இருந்தால் உங்களுக்கு நல்ல செல்வவளம் வரும்.
ஒரு வீட்டின் ஆண் சம்பாதிக்கும் பணத்தில் முதல் இடமாக கொடுப்பது அவர்களின் உணவிற்க்காக இருக்கும். ஒரு பெண் அதில் எந்தளவுக்கு திறமையாக இருந்து சமைக்கின்றார் என்பதை பொறுத்து அந்த ஆண் சம்பாதிக்கும் திறமை வெளிப்படும்.
ஒரு வீட்டில் ஒரு சமையலுக்கு சமையற்காரியை வைத்திருந்தாலும் அந்த சமையல்காரி என்பவரும் முக்கியத்துவம் பெறுகிறார். வீட்டின் முதலாளியின் சம்பாதிக்கும் திறமைக்கு முழுபொறுப்பும் அந்த சமையல்காரியின் கையில் இருக்கின்றது என்பதை நினைவில் வைத்து அந்த சமையல்காரி சமைக்கவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment