Followers

Thursday, December 29, 2011

செவ்வாய் நிறைவு பகுதி




செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருந்தால் 7 ஆம் பார்வையாக லக்கினத்தை பார்ப்பதால் தலையில் அடிபடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும். செவ்வாய்க்கு நட்பு வீடாக இருந்தாலும் சொந்த வீடாக அல்லது உச்ச வீட்டில் இருந்தால் பிரச்சினைகள் இருக்காது. பெண்களால் பிரச்சினை உண்டாகும். இவரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் முன்கோபக்காரர்களாக இருக்ககூடும்.

8 ஆம் இடத்து செவ்வாயினால் கண் பார்வை கெடும். ஜெயிலுக்கு செல்ல நேரிடும். இரத்த சம்பந்தமாக பிரச்சினை ஏற்படும்.கடன் பளு ஏற்படும். ஆயுள் குறையும். கோபம் அதிகம் வரும். சகோதர்களின் நலம் கெடும். பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படும்.

9 ஆம் இடத்தில் உள்ள செவ்வாய்யால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். 9 ஆம் இடத்தில் உள்ள செவ்வாய்யால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். நற்பணிகள் செய்யமாட்டார். கொடிய செயல்கள் செய்ய வைப்பார். 9 ஆம் வீட்டு செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் நல்ல நிலைக்கு உயர்த்துவார்.

10 ஆம் இடத்தில் உள்ள செவ்வாய்யால் கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் உயர்ந்த பதவியில் அமர வைப்பார். பதவியில் தலைமை இடம் தேடி வரும். நெருப்பு மூலமாகவும் வருமானம் பெருகும். பெரிய மனிதர்களிடம் இருந்து பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

11 ஆம் இடத்து செவ்வாய் பெரும் பணக்காராக மாற்றுவார். மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பெரும் செலவு செய்து தொழிலில் முன்னேற்றம் காண வைப்பார். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மூத்த சகோதர சகோதரிகளிடம் சண்டை சச்சரவு ஏற்படும்.

12 ஆம் வீட்டு செவ்வாயினால் கெடுதல் அதிகம் இருக்கும். சிறை செல்ல நேரிடும். பெண்கள் மூலம் பொருளாதார இழப்பு ஏற்படும். மர்ம விலங்கினால் ஆபத்து ஏற்படும்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு


Thursday, November 24, 2011

திருவண்ணாமலை



திருவண்ணாமலைக்கு நேற்று 23-11-2011 குபேர கிரிவலம் சென்று வந்தேன். . நான் வழக்கமபோல் ஒவ்வொரு பௌர்ணமியும் சென்று வருகிறேன்.குபேர கிரிவலத்தைப்பற்றி படித்ததால் சென்றேன். என்னுடன் 3 பேர் வந்தார்கள். நான் நினைத்தது குறைந்த எண்ணிக்கையில் தான் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நல்ல கூட்டம வந்தது. பல மாவட்டங்களில் இருந்தும் வந்து இருந்தார்கள்.

பிரதோஷ அபிஷேகம் முடிந்து சாமி தரிசனம் பார்க்க கடுமையான நெரிசல் ஏற்பட்டது. ஒரு வழியாக சாமி தரிசனம் முடிந்து. 6 மணிக்கு கிரிவலம் புறப்பட்டு சென்றோம்.

நீங்களும் கலந்துகொண்டிருந்தீர்கள் என்றால் மிக்க நல்லது. அப்படி வரவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களுக்கு அனைத்து வசதியும் கிடைக்க ஒரு பொன்னான வாய்ப்பு வர இருக்கிறது. அதில் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் நினைப்பது நடக்கும். வருகின்ற கார்த்திகை தீபத்தில் கலந்து கொள்ளுங்கள். வருகின்ற கார்த்தீகை தீபம். பிறவியின் கருமத்தை அழிக்க பொன்னான வாய்ப்பு. அனைவரும் செல்வோம். இதை உங்கள் நண்பர்களிடமும் சொல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, October 25, 2011


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.



அன்புடன்

ராஜேஷ்சுப்பு

Friday, October 21, 2011

இரட்டை பிறப்பு ஜாதகம்



இரட்டை பிறப்பு ஜாதகம் பற்றி இன்று பார்ப்போம். இரட்டை பிறப்பு ஜாதகத்தில் பிறந்த இருவரும் ஜாதகம் ஒன்று போல் இருந்தாலும். இரண்டு ஜாதகமும் வேறுபடும். இரட்டை ராசிகளில் பிறக்கும் குழந்தைகள் ஒரு ஆண் ஒரு பெண்ணாகவும் பிறக்கின்றன. அல்லது ஒரே இனமாகவும் இருக்கின்றன.

நீங்கள் ஜாதகத்தை கணித்தால் இரண்டும் ஒரே மாதிரியான ஜாதகம் கிடைக்கும். அவர்கள் வாழ்க்கையில் பார்த்தீர்கள் என்றால் இரண்டு பேருக்கும் நடக்கும் நிகழ்ச்சிகள் வேறு மாதிரியாக நடக்கும். ஒருவருக்கு கல்வி நன்றாக வரும். மற்றோருவருக்கு கல்வியில் நாட்டம் செல்லாது. ஒருவருக்கு திருமணம் நடைபெறும் மற்றோருவருக்கு திருமணம் தள்ளி போகும்.

கணிக்கும் ஜாதகத்தில் ராசி Chart நவாம்சா Chart ஒன்றுபோல் இருக்கும். ஆனால் இரண்டு chart மட்டும் கிடையாது நிறைய chart கள் உள்ளன அதில் பார்த்தீர்கள் என்றால் கிரக நிலைகள் மாறி இருக்கும். அதைபோல் கிரகங்கள் செல்லும் நட்சத்திரங்களும் மாறி இருக்கும். என்னிடம் நிறைய இரட்டை பிறப்பு ஜாதகங்கள் உள்ளன வேறு ஒரு நாள் அந்த ஜாதகத்தைப் பற்றி பார்க்கலாம். இப்பொழுது இந்த இரட்டைபிறப்பு எவ்வாறு ஏற்படுகிறது. இவ்வாறு எதனால் ஏற்படுகிறது என்று மட்டும் பார்க்கலாம்.

இந்த இரட்டை பிறப்பை பற்றி வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் ஜாதகத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

சூரியன் நாற்கால் ராசியில் இருந்தால் அதாவது மேஷம் ரிஷபம் மகரம் இவைகளில் சூரியன் இருந்தால் மற்ற எல்லா கிரகங்களும் பலமாக உபய ராசிகளில் இருந்தால் இரட்டை குழந்தைகள் உண்டாகும் என்று கூறியுள்ளார். உபய ராசி எது என்றால் மிதுனம்,கன்னி,தனுசு மற்றும் மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். இந்த மாதிரி கிரக நிலைகள் இருக்கும் போது இரட்டை குழந்தைகள் உண்டாகும் என்று கூறியுள்ளார்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு


Friday, September 30, 2011

அனுபவம்



வணக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு இதை பதிவு ஏற்றுகிறேன். நீங்கள் எல்லாரும் தினமும் வந்து சென்று இருப்பீர்கள் அதற்க்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது பணி காரணமாகத்தான் எழுதமுடியவில்லை.

நான் சோதிடம் சம்பந்தமாக எழுத ஆரம்பித்ததே பல சோதிட பதிவுகளை படித்ததால் நாமும் இந்த சோதிடம் சம்பந்தமாக தெரிந்ததே எழுதவேண்டும் என்று தோன்றியதால் இந்த பதிவை ஆரம்பித்தேன். ஏன் என்றால் இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குட்டி சோதிடர்களாகவே ஒரு நபர் இருக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒவ்வொரு நாள்களிலும் இன்று என்ன நாள் என்ன நட்சத்திரம் என்ன திதி இந்த ராசிக்கு என்ன பலன் என்று ஒவ்வொருவருக்கும் தெரிய ஆரம்பித்தவிட்டது. இது மிகவும் சந்தோஷபடவேண்டிய விசயம். என்னுடைய ஆசையும் அதுவே.

உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கு என்ன ராசி என்ன நட்சத்திரம் என்ன தசை நடக்கிறது என்று தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று உங்களால் முன்கூட்டியே தெரியபடத்தலாம். தேவையற்ற நஷ்டத்தையோ விரயத்தையோ தவிர்க்க முடியும்.

பல மக்கள் வியாபாரத்தில் தோல்வியை சந்திப்பது கெட்ட நேரத்தில் தொழில்களை ஆரம்பிப்பது தான். கெட்ட நேரத்திலோ அல்லது கெட்ட தசையில் ஆரம்பிப்பததால் தான் அதனால் நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் அல்லது நல்ல விசயங்கள் எவை இருந்தாலும் நேரம் பார்த்து செய்யுங்கள். நேரம் என்று சொல்லுவது சோதிடத்தைதான். சில பேர் வாழ்க்கை முழுவதும் செய்யும் தொழில் அனைத்தும் தோல்வி அடைவது. கெட்ட நேரத்தில் ஆரம்பிப்பதுதான்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 22, 2011

செவ்வாய் பகுதி 2



தென்னிந்திய மக்கள் செவ்வாய்கிழமையில் எந்த நல்ல காரியங்களும் தொடங்குவது இல்லை ஆனால் இந்தியாவின் வடமாநில மக்கள் இந்த கிழமைக்கு மங்களவார் என்று பெயர் வைத்து நல்ல காரியங்களை தொடங்குகிறார்கள் என்று தினமலர் நாளிதழில் படித்தேன். அதனால் தான் செவ்வாய்யைப் பற்றி எழுதலாம் என்று எண்ணினேன் அதனுடன் நமது பாடமும் செவ்வாய் பற்றி வந்துகொண்டுருப்பதால் எழுதுகிறேன்.

நமது வீட்டில் எல்லாம் திருமண காலங்களில் பெண் பார்க்கும் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தவறாது அடிபடும் வார்த்தை செவ்வாய் தோஷம் இருக்கிறதா அல்லது இல்லையா என்றுதான். இந்த தோஷம் ஒவ்வொரு ஜோதிடரிடமும் வேறுபடும். ஒருவர் தோஷம் இருக்கும்பார் இன்னொருவர் தோஷம் இல்லை என்பார். செவ்வாய் உச்சவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பர் அல்லது செவ்வாய் நீசவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பார்கள். இதனைப்பற்றி ஆராய்வதற்கே பல வழிகள் இருக்கிறது.

நான் சொல்ல வந்தது. ஒன்பது கிரகங்களில் நீங்கள் கேட்டவுடன் அள்ளி வழங்குபவர் செவ்வாய் மட்டும் தான். ஏனென்றால் செவ்வாய்கிரகம் ஒரு அக்னி கிரகம் அது மிகவும் வீரியத் தன்மை வாய்ந்த கிரகம் இருக்கும்.

நெருப்பு உடனே பற்றிக்கொள்ளும் தன்மையினால் செவ்வாய் மட்டும் உடனே தருபவர். வேறு எந்த கிரகத்திடம் கேட்டாலும் பலன் உடனே நடக்காது. ஆனால் செவ்வாயிடம் மட்டும் கேட்டால் உடனே நிறைவேறும். நீங்கள் இதனை ஒரு ஆய்வாகவே எடுத்துக்கொள்ளலாம். செவ்வாயின் கடவுளாகிய முருகனிடம் ஏதோ ஒரு வேண்டுதலுடன் கேளுங்கள் அந்த காரியம் நிச்சயம் நடந்தேறும். உங்கள் வேலை உடனே நடக்க வேண்டும் என்றால் செவ்வாய்கிழமை பயன்படுத்துங்கள்.

உங்களுக்கு செவ்வாய்தோஷம் இருந்தால் ஒன்பது வாரம் செவ்வாய்கிழமை விரதம் இருந்து பாருங்கள். விரதத்தின் தன்மை பொறுத்து தோஷம் நீங்கி நல்லது நடக்கும். செவ்வாய் கிழமை நாம் பயன்படுத்தலாம். முருகனை முழு மனதுடன் வழிபட்டு அனைத்தையும் பெறுவோம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு





Wednesday, August 3, 2011

ஜோதிட அனுபவம்



எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார். இவருக்கு அயல்நாட்டில் வேலை செய்யவேண்டும் என்று ஆசை. இவரின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது அந்த மாவட்டத்தில் பெரும்பாலோர் அயல்நாடுகளில் வேலை செய்பவர்கள். அதனால் இவரும் சிங்கபூர் சென்றார்.

இவர் சென்றது சுற்றுலா விசாவில் சென்று அங்கேயே நீண்ட நாட்களாக தங்கிவிட்டார். பிறகு ஒரு நாள் அங்கு காவல்துறையில் மாட்டிக்கொண்டார். அங்கு தண்டனை பெற்று இந்தியா வந்துவிட்டார். வந்தவர் இங்கு 4 மாதங்கள் இருந்தார்.

அயல்நாட்டு ஆசை விடவில்லை மீண்டும் சிங்கபூர் செல்ல முடிவு எடுத்து மறுபடியும் சுற்றுலா விசாவில் செல்வது என்று முடிவு எடுத்து சென்றார். ஏன் என்றால் ஒருமுறை சிங்கபூரில் தவறாக தங்கினால் மீண்டும் அந்த நாட்டிற்க்கு செல்லமுடியாது என்று சட்டம் அதனால் இவர் சுற்றுலா விசாவில் மீண்டும் செல்வது என்று முடிவு எடுத்தார். அதன்படி சென்று குறுகிய காலத்தில் திரும்பி வருவார். இந்த முறைப்படி அவர் நான்கு முறை சென்று வந்துள்ளார். இவர் 5 வது முறையாக செல்லும் போது விமான நிலையத்தில் மாட்டிக்கொண்டார். இவரை அந்த நாட்டு விமான நிலைய அதிகாரிகள் இந்தியாவிற்க்கு திருப்பி அனுப்பினார்கள். இவர் இப்பொழுது இந்தியாவில் இருக்கிறார்.

இவருக்கு அயல்நாட்டின் மீது ஆசை ஏற்பட்டது எதற்க்காக?

அயல்நாட்டின் இவர் இருக்கும்போது இவர் அங்கு காவல்துறையில் மாட்டிக்கொண்டது எப்படி ?

இப்பொழுது நாம் ஜாதக ரீதியாக என்ன காரணம் என்று பார்க்கலாம்.

இவருடைய ஜாதகத்தை கீழே தந்துள்ளேன் பாருங்கள்.





இவருடைய ராசி கும்பம். கடக லக்கனம். ஒருவருடை ஜாதகத்தில்
தொலைதூர பயணங்களை குறிப்பது 9 ஆம் வீடு இந்த ஜாதகத்தில் 9 ஆம் வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு. குரு கிரகம் மூன்றாம் வீட்டில் சனி உடன் அமர்ந்துள்ளது. இவருக்கு அயல்நாட்டின் மீது ஆசையை கொடுத்தது இவருக்கு 9 ஆம் வீட்டின் அதிபதியின் தசாவில் தான்.

குரு தசை நடக்கிறது குரு அயல்நாடு செல்ல வேண்டும் என்று அயல்நாட்டிற்க்கு அழைத்து செல்கிறது. அங்கு குருவிடம் இருக்கும் சனி இவரை நன்றாக மாட்டிவிடுகிறது. அதனால் இவர் அயல்நாட்டில் இருந்து திரும்புகிறார். சனியிடம் குரு இருப்பதால் குரு கெடுகிறது.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு