Followers

Friday, February 13, 2015

வேண்டுகோள்


வணக்கம் நண்பர்களே!
                      தற்பொழுது எல்லாம் தொடர்ச்சியாக வேலை இருப்பதால் நண்பர்கள் என்னை போனில் தொடர்புக்கொள்ளும்பொழுது உடனே பேசமுடிவதில்லை. வரும் போன்கால்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மிஸ்ட்கால்களை தேடிபிடித்து அவர்களுக்கு போன் செய்வதில் பெரும் பிரச்சினையாக எனக்கு இருக்கிறது.

பழைய நண்பர்களின் பெயர்கள் எனது போனில் சேமித்து இருப்பதால் அவர்களை உடனே தொடர்புக்கொள்ள முடிகிறது. புதியதாக வரும் நண்பர்கள் எனக்கு போனில் தொடர்புக்கொண்டு நான் பேசவில்லை என்றால் நீங்கள் ஒரு மெசேஷ் செய்துவிடுங்கள். உங்களின் பெயர் மற்றும் ஊர் பெயரை மட்டும் குறுந்தகவலாக எனக்கு அனுப்பிவிடுங்கள்.

என்னுடைய வேலையை முடித்துவிட்டு உங்களை தொடர்புக்கொள்ள எனக்கு எளிதாக இருக்கும். நீங்கள் போன் செய்த நாளிலேயே உங்களை நான் தொடர்புக்கொண்டுவிடுவேன். 

மொபைல் எண் 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, February 12, 2015

யோக விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்றும் இன்றும் யோகம் சம்பந்தப்பட்ட பூஜையில் இருக்கிறேன்.  காலையிலேயே பூஜையை முடித்துவிட்டு உங்களுக்கு பதிவை தருகிறேன். மாலை ஆலங்குடி குரு கோவிலுக்கு செல்வதாக திட்டம் இருக்கிறது. 

புத ஆதித்யா யோகத்தைப்பற்றி பல நண்பர்கள் கேட்டனர். நெட்டில் தேடிப்பார்த்தாலே இந்த விபரம் உங்களுக்கு கிடைக்கும். படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் ஏட்டை கெடுத்தான் என்று சொல்லுவார்கள் அதுபோல் பல நண்பர்களுக்கு நல்ல சோதிடம் தெரிந்து இருந்தும் இப்படிப்பட்ட வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள்.

சோதிடம் ஆன்மீகம் இது எல்லாம் இருக்கட்டும் அதனை நம் வாழ்க்கைக்கு எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நமது வெற்றி இருக்கிறது. சோதிடத்தை படித்துவிட்டு பலனை சொல்வதில் வெற்றி கிடையாது. நமக்கு எப்படி அதனை பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதில் தான் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.

தொழில் அதிபர்களுக்கு தான் இவர் சொல்லுகிறார் என்று பல பேர்கள் சும்மா இருந்துவிட்டோம் என்று நான் போன் செய்த சில நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். தொழிலுக்கு நாம் செய்துக்கொடுத்துக்கொண்டிருப்பதால் அவர்களுக்கு முதலில் தெரிவிப்போம். அதனை பதிவில் நான் குறிப்பிட்டவுடன் நீங்களும் செய்துக்கொள்ளுங்கள்.

எனக்கு ஒரு சில நாட்களில் என்ன நட்சத்திரம் நடந்துக்கொண்டிருக்கிறது. என்ன திதி என்பதை கூட நான் மறந்துவிடுவது உண்டு. அம்மன் இருப்பதால் அதனை அவ்வப்பொழுது நினைவுப்படுத்தும். நான் அந்தளவுக்கு சோதிடத்திற்க்கு முக்கியம் கொடுப்பதில்லை அம்மனை வைத்து பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடுவது உண்டு.

நீங்கள் அப்படி இருக்ககூடாது அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். சமயம் வரும்பொழுது அதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 11, 2015

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3







அன்புடன்
ராஜேஷ்சுப்பு


அம்மன் பூஜை படங்கள் பகுதி 2






அன்புடன்
ராஜேஷ்சுப்பு




அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம் 
                      நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 9, 2015

யோகம் வந்த நேரம்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று ஒரு வேலையில் இருந்தபொழுது திடீர் என்று ஒரு சிந்தனையை அம்மன் எனக்கு கொடுத்தது. அதுவரை நான் அதனைப்பற்றி சிந்திக்கவில்லை அம்மன் நினைவுப்படுத்தியதால் அதனை நான் புரிந்துக்கொண்டேன். முதலில் எதனை செய்வதாக இருந்தாலும் எனது தொழில் நண்பர்களுக்கு தெரியப்படுத்திவிடுவேன். நேற்று ஞாயிறுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு எனக்கு தெரிந்த காரணத்தால் அந்த நேரத்தில் ஒவ்வொருவராக போனில் தொடர்புக்கொண்டேன். முக்கால்வாசி நம்பர் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டு இருந்தது. 

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அந்த நாள் இந்த உலக வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்ட நாளாகவே மக்கள் கருதுகின்றனர். ஒருவன் உருப்படவேண்டும் என்றால் ஞாயிற்றுகிழமை அதிகாலையில் எழுந்துவிடவேண்டும். நான் தொடர்புக்கொண்டப்பொழுது இரண்டு நண்பர்கள் மட்டும் செய்வதற்க்கு தயாராக இருந்தனர். அவர்களின் வழியாக அம்மனை வைத்து செய்யவேண்டும். அடுத்த அரைமணி நேரத்தில் அவர்களுக்கான வேலையை முடித்தேன்.

ஒவ்வொரு மனிதனும் யோகம் வேண்டும் என்று அலைகிறான். ஒரு யோகம் அமைந்துவிட்டால் அதுபோதும் அதுவே நம்மை எங்கோ கொண்டு சென்றுவிடும் என்று சோதிடம் படித்த அனைவருக்கும் தெரியும். ஒரு சிலருக்கு யோகஜாதகமாக அமைந்தாலும் அவர்களுக்கு யோகம் வேலை செய்வதில்லை.

யோகமே இல்லாதவர்களுக்கு யோகத்தை பெறுவதற்க்கான முயற்சி தான் நேற்று நான் செய்த வேலை. இப்பொழுது மகரத்தில் சூரியன் புதன் சேர்க்கை நடைபெற்று புதஆதித்யா யோகத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது. இது அடிக்கடி நடைபெறுகின்ற ஒரு நிலை தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு யோகத்தை குரு பார்ப்பது தான் மிக விஷேசம். குருவும் உச்சவீட்டில் இருந்து பார்ப்பது கிடைக்காத ஒரு அற்புதம் என்றே சொல்லலாம்.

மகரத்தில் ஒரு கிரகம் அமைந்தால் அப்பொழுது அந்த கிரகத்திற்க்கு நாம் பரிகாரம் செய்தால் வாழ்நாள் முழுவதும் நமக்கு நல்ல பலனை கொடுக்கும் என்று எனது குரு சொல்லிக்கொடுத்து இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்பது சூரியனுக்கு மிக விஷேசமான ஒரு நாள் என்பதால் நேற்றே அதனை செய்யவேண்டும். நல்லபடியாக இரண்டு நபர்களுக்கு நான் நேற்று செய்துக்கொடுத்தேன்.

மறுபடியும் இந்த மாதிரியான கிரக நிலை வருவதற்க்கு பல வருடங்கள் ஆகலாம். யாருக்கு கிடைக்கவேண்டுமோ அவர்களுக்கு கிடைத்து இருக்கும்.தை மாதம் முடியும் நிலையில் இருக்கிறது. அடுத்த ஞாயிற்றுகிழமை அந்த வாய்ப்பு இருக்காது என்பதால் அம்மன் நேற்று எனக்கு இந்த தகவலை சிந்திக்க வாய்ப்பை கொடுத்தது.

சூரியன் புதன் மற்றும் குரு கிரகம் இந்த மூன்று கிரகத்தையும் வைத்து பரிகாரம் செய்யப்படவேண்டும். மிக அதிகமான நல்ல பலனை நாம் இந்த யோகத்தால் பெறமுடியும். யோகம் இல்லாதவர்களும் இந்த யோகத்தை பெறமுடியும்.

இப்பொழுது இரண்டு நாள் கிடைத்து இருக்கிறது. புதன் வியாழன் இதனை வைத்தும் நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும். உங்களுக்கு தெரிந்த வழிபாட்டை வைத்து இந்த யோகத்தை பெற்றுக்கொள்ளுங்கள். மறுபடியும் இப்படிப்பட்ட கிரக நிலைகள் உடனே அமையுமா என்பதை பரிசோதனை செய்து பாருங்கள்.

எப்படி வழிப்பாட்டை செய்வது என்பதை உடனே எனக்கு போன் செய்து கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். அம்மனை வைத்து இதனை உங்களுக்கு செய்யவதற்க்கு எனது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு எனக்கு போன் செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 8, 2015

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      கோயம்புத்தூர் சென்று வந்ததில் இருந்து தொடர்ந்து சொந்த வேலை இருந்த காரணத்தால் உங்களுக்கு பதிவு தரமுடியவில்லை. இனி தொடர்ந்து பதிவை பார்க்கலாம்.

அம்மன் பூஜை வரும் 10/02/2015 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும். அம்மன் பூஜைக்கு இந்த மாதம் காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
சென்னை சேர்ந்த திரு இராஜ்கண்ணா அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு சுப்பிரமணியன் அவர்கள்
மஸ்கட் சேர்ந்த திரு கரிகாலன் அவர்கள்
இராசிபுரத்தை சேர்ந்த இராஜ்குமார் அவர்கள்
திரு சத்திய சீதாராமன் அவர்கள்

வழக்கம்போல் கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

நேரில் வந்து பங்குபெறும் திரு கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் பணம் அனுப்பியுள்ளனர்.

அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதல்களை அம்மனிடம் வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு