Followers

Friday, May 11, 2018

மலமாதம்


வணக்கம்!
          வைகாசி மாதத்தில் இரண்டு அமாவாசை வருவதால் அதில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யவேண்டாம் என்று சொல்லுவார்கள். அதாவது ஒரு தமிழ்மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் அது மலமாதம் என்பார்கள்.

இரண்டு அமாவாசை வரும்பொழுது அதில் பரிகாரங்கள் வழிபாடுகள் மற்றும் வழக்கமாக நடைபெறும் கோவில் பூஜைகள் எது எல்லாம் செய்யலாம். சுபகாரியங்கள் என்று சொல்லப்படும் திருமணம் காதுகுத்து சடங்கள் போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது.

வைகாசி மாதத்தில் ஒரு சிலர் திருமணமும் வைத்திருக்கின்றனர். எனக்கு தெரிந்தவர் ஒருவர் திருமணம் வைகாசி மாதத்தில் வைத்திருந்தார். நான் அவரிடம் கேட்டதற்க்கு திருமண மண்டபம் அப்பொழுது கிடைத்தது அதனால் வைத்தேன் என்றார். இவர்க்காக திருமணம் செய்யவில்லை மண்டபம் கிடைத்தற்க்காக திருமணம் செய்துஇருக்கிறார்.

வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம் என்ற ஒரு விஷேசமான நாள் இருக்கின்றது. இது கோவில் சம்பந்தப்பட்ட ஒன்றாக இருப்பதால் அதனை செய்யலாம் ஆனால் கோவிலில் காதுகுத்துவது அல்லது கோவிலில் ஏதாவது ஒரு விஷேசத்தை உங்களின் குடும்பம் சம்பந்தமாக வைப்பது எல்லாம் வேண்டாம்.

பரிகாரம் இந்த மாதத்தில் செய்வதற்க்கு பரிந்துரை செய்வது உண்டு. பரிகாரம் என்பது சுபநிகழ்வு கிடையாது. அது ஒரு களிப்புபோல இருப்பதால் அதனை எல்லாம் நீங்கள் செய்யலாம். ஒரு சிலர் வைகாசி மாதத்தில் தோஷம் கிடையாது. தமிழ்நாட்டிற்க்கு இந்த தோஷம் கிடையாது என்பார்கள். 

ஒன்று தெரிந்த பிறகு அதில் ஏன் நாம் சந்தேகப்பட்டுக்கொண்டு நிகழ்ச்சியை வைக்கவேண்டும். ஒரு மாதகாலத்திற்க்கு பிறகு வைத்துக்கொள்ளுங்கள். தெரிந்தே தவறு என்பதை செய்யக்கூடாது. என்னுடைய கணிப்பு படி இந்த மாதத்தில் சுபகாரியங்கள் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன். அதற்கு பிறகு உங்களின் இஷ்டம் போல் செய்யுங்கள்.

சோதிடர்களை பொருத்தவரை செய்யுங்கள் ஒன்று பாதிப்பு வராது என்று சொல்லிவிடுவார்கள். கஷ்டபடுவது நீங்களாக இருக்கும். என்னிடம் கேட்டவர்களுக்கு நான் இந்த மாதத்தில் குறித்துக்கொடுக்கவில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 9, 2018

சோதிடர்கள் சொல்லும் பொய்


வணக்கம்!
          நான் பல ஊர்களுக்கு செல்லும்பொழுது ஒன்றைச்சொல்லுவதை கேள்விப்பட்டு இருக்கிறேன். ஒரு ஜவுளிக்கடையை பெயரைச்சொல்லி அவர்கள் இப்படிப்பட்ட பூஜை செய்து தான் முன்னேற்றம் அடைந்து இருக்கின்றார்கள் என்று சொல்லுவார்கள். அதாவது ஜாதகம் பார்க்க வரும் நபர்களே அப்படி சொல்லிருக்கின்றனர்.

ஜவுளிக்கடையின் பெயரைச்சொல்லி பல சோதிடர்களும் காலம் தள்ளிக்கொண்டு இருக்கின்றனர். அந்த ஜவுளிக்கடைக்கு நான் தான் மோதிரம் செய்துக்கொடுத்தேன். நான் தான் பூஜை செய்துக்கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டும் இருக்கின்றனர்.

நீங்களே இதனை கவனித்து பார்த்தால் இந்த தகவலை சோதிடர்கள் சொல்லுவார்கள். ஒரு ஊரில் உள்ள பத்து சோதிடர்களிடம் சென்றால் எட்டு பேர் இந்த தகவலை சொல்லிவிடுவார்கள். ஊரு முழுவதும் தேடினால் எத்தனை பேர் சொல்லுவார்கள் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒரு சோதிடர் தன்னை பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள இப்படி பொய் சொல்லுவது உண்டு. ஜவுளிக்கடை முன்னேற்றம் காண்பதற்க்கு அவர்கள் என்ன செய்தனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. வேறு மாதிரியும் சொல்லுவார்கள். அவர்கள் கேரளாவில் இதற்க்கு என்று ஆட்களை வைத்து செய்துக்கொண்டு இருக்கின்றனர் என்பார்கள். கேரளா போய் பார்த்தால் தான் தெரியும் அங்கு இருப்பவர்கள் எவ்வளவு பெரிய டூபாக்கூர் என்பது புரியும்.

என்னை தேடி பல கம்பெனிகள் வந்திருக்கின்றன. அதனை எல்லாம் செய்வதை விட ஒரு சாதாரணமான நபர்களுக்கு நாம் சோதிடம் பார்த்து அவர்களை முன்னேற்றம் செய்வதில் தான் அதிகமான ஆத்ம திருப்தி கிடைக்கின்றது. ஜாதககதம்பம் ஆரம்பித்த காலத்தில் பார்த்தால் தொழில் செய்பவர்களுக்கு மட்டுமே செய்துக்கொண்டு இருந்தேன்.

இறைவன் கொடுத்த ஒரு அற்புதகலையை எளிய மக்களுக்கும் கொண்டு சென்று சேர்க்கவேண்டும் என்பது ஒரு காலத்திற்க்கு பிறகு முடிவு செய்து அதனை செய்துக்கொண்டு இருக்கிறேன். எதிர்காலத்தில் நீங்கள் சோதிடர்களாக வர வாய்ப்பு இருந்தால் எளிய மனிதர்களுக்கு பாருங்கள். எவ்வளவு சம்பாதித்தோம் என்பதை விட எத்தனை ஆத்மாக்களுக்கு வழிகாட்டினோம் என்பதில் தான் நமது திறமை இருக்கும். அது தான் புண்ணியமும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 8, 2018

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு



அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

ணக்கம்!
         இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம் !
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜைப்படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சக்தி


வணக்கம்!
          ஒரு ஆண்டு கட்டண சேவை என்ற ஒன்றை பதிவிட்டேன். பல நண்பர்கள் அதற்கு தொடர்புக்கொண்டனர். அவர்களை அனைவரிடத்திலும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன. இதற்கு காரணம் அவர்கள் அனைவரும் ஒரளவு நன்றாக இருக்கும் நபர்களாவே இருக்கின்றனர்.

ஒரு ஆண்டு கட்டண சேவையில் இணையவேண்டும் என்றால் அதற்கு அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களாக இருந்தால் அது சரிபட்டு வரும். நன்றாக இருக்கும் நபர்கள் இதில் இணையவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.


ஒரு லெவலில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்றால் அந்த லெவலில் இருந்து நீங்கள் மாற்றம் அடைய அல்லது மேலே செல்ல ஒரு சக்தி உங்களுக்கு தேவைப்படும். இயற்பியல் படியும் இது உண்மையான ஒன்று. ஒரு மட்டத்தில் இருந்து அடுத்த மட்டத்திற்க்கு செல்வதற்க்கு சக்தி வேண்டும் என்பார்கள்.

நம்மை பொறுத்தவரை ஒருவர் வந்தால் அவரின் வாழ்க்கையை நாம் மேம்படுத்த என்ன செய்யவேண்டும் என்பதை பார்த்து செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். இவர்கள் கொடுக்கும் கட்டணத்தை வைத்து தான் அதனை நான் செய்கிறேன்.

நீங்கள் என்னிடம் வராமல் நீங்களே இதனை எடுத்து செல்லவேண்டும் என்றால் நிறைய வழிபாடுகள் மற்றும் கோவில்கள் எல்லாம் சுற்றிவரவேண்டும். ஜாதகத்தில் நீங்களே நல்ல வேலை செய்ய கற்று இருக்கவேண்டும். இப்படி செய்யும் பட்சத்தில் நீங்கள் மேலே வந்துவிடலாம்.

உங்களின் ஜாதகம் நன்றாக இருந்தாலும் ஒரு சக்தி படைத்த நபர்களின் தொடர்பு உங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரே நிலையில் இருப்பவர்கள் இதனை புரிந்துக்கொண்டு செயல்படுங்கள். நன்றாக வாழலாம்.

இன்று அம்மன்பூஜை நடைபெறுகின்றது. அனைவரும் நன்றாக பிராத்தனை செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 7, 2018

அம்மன் பூஜை


வணக்கம்!
          நாளை அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள். 
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள். 
சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள்.   

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.   
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.   

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.     
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.   
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.     

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.     
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள் 
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள் 

வழக்கம்போல்                                 
       திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். 

மற்றும் பல நண்பர்கள் தங்களின் பங்களிப்பை செலுத்தியுள்ளனர். அம்மன் பூஜை நடைபெறும் நாளில் உங்களின் வேண்டுதலை வையுங்கள்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு