Followers

Thursday, March 1, 2012

பலகரை ஆருடம் நிறைவு பகுதி



ஒன்பது பலகரை நிமிர்ந்திருந்தால்

ஓடிவிட்டது உன் தொல்லை. தந்தை வழியில் நல்லது நடக்கும். நினைத்த காரியம் நடைபெறும். தந்தை வழி உறவினர்கள் உதவி உண்டு. வழக்கில் வெற்றி வாய்ப்பு உண்டு. பணம் வருவதால் உறவினர்கள் ஓடி வருவார்கள். குலதெய்வ அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உயர் படிப்பு கிடைக்க வழி ஏற்பட போகிறது. அயல்நாட்டு மூலம் பணவரவு கிடைக்கும். மொத்தத்தில் பொன்னான வாய்ப்பு கிடைக்கபோகிறது.

பத்து பலகரை நிமிர்ந்திருந்தால்

நினைத்த காரியம் அதிக பொருள் கொண்டு அதாவது செலவு செய்து கிடைக்கும். பணமும் சமயத்தில் கிடைக்காது அதற்க்காகவே அதிக செலவு செய்யவேண்டும். தந்தைக்கு பணப்பிரச்சினை ஏற்படும். அண்டை அயலாரின் தொந்தரவுக்கு ஆளாகலாம். தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும் அப்பொழுதுதான் பிரச்சனைகள் முடிவடையும்.

பதினோறு பலகரை நிமிர்ந்திருந்தால்

நினைத்த காரியம் நடைபெறும். நல்ல லாபம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உயர்பதவிகள் தேடிவரும். சகோதர சகோதரி வழியில் முழு உதவி கிடைக்கும். வெளிதேச பயணங்கள் செல்லலாம். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். நிம்மதியான வாழ்க்கை வாழ வழி பிறந்துவிட்டது என்று சொல்ல வேண்டும். அம்மன் அருள் உண்டு.

பன்னிரண்டு பலகரை நிமிர்ந்திருந்தால்

நினைத்த காரியம் நடைபெறாது. வீட்டில் உள்ள பொருளோ அல்லது கையில் உள்ள பொருளோ களவு போகும். பெண்கள் மூலம் செலவுகள் ஏற்படும். அடிக்கடி மருத்துவனை செல்ல நேரிடும். அண்டை அயலார் உடன் சண்டை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் செல்ல நேரிடும். மொத்தத்தில் பன்னிரண்டு பலகரை விழுவது நல்லதல்ல. நடக்கமுடியாமல் அவஸ்திபட நேரிடும்.

இத்துடன் பலகரை ஆருடம் முடிவடைகிறது பொறுமையாக படித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் ஆருடம் கூறுவது நல்ல தெய்வ பக்தி தேவை அப்பொழுதுதான் நீங்கள் சொல்லும் பலன் நிச்சயமாக நடைபெறும். நானும் ஆருடம் கூறுகிறேன் என்று மாட்டிக்கொள்ளாதீர்கள்.

ஆருடத்தில் பல வகையான ஆருடம் இருக்கிறது. ஆருடத்தின் மூலம் மிகத்துல்லியமாக பலன் கூறிவிடமுடியும் பிரச்சினைகளுக்கு தீர்வும் கிடைக்க வழி செய்யமுடியும். அனைத்து ஆருடத்தைப் பற்றியும் எனக்கு நேரம் கிடைக்கும் போது கற்று கொடுக்கிறேன். அதுவரை பொறுமை தேவை. அடுத்த பதிவில் வேறு ஒரு பாடத்துடன் பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: