Followers

Saturday, February 25, 2012

பலகரை ஆருடம் தொடர்ச்சி 2



ஐந்து பலகரை நிமிர்ந்திருந்தால்

அவர் என்ன நினைத்தாரோ அவரையை தேடிவந்து விடும். நடுநிலை வகிப்பவராக இருப்பார். நல்ல அறிவாளியாக இருப்பார். திடிர் திடிர் என்று நல்ல யோசனைகள் இவருக்கு வரும். வீட்டில் களவுபோன பொருள் வந்து சேரும். நண்பர்களிடத்தில் இவர் நல்ல மாதிரியாக பழகுவார். அதனாலே இவருக்கு நிறைய நண்பர்கள இருப்பார்கள்.

நாம செல்போன் நம்பரை கொடுத்தால் அவருடை செல்போனையில் ஏற்றுவதற்க்கு பதில் அவருடைய மூளையிலையே ஏற்றிவிடுவார் அந்தளவுக்கு நினைவாற்றல் இருக்கும். இவர் காதலில் விழுவதற்க்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. வயதை பார்த்து சொல்லுங்கள் வயதானவராக இருந்தால் காதல் மணமுடித்திருப்பீர்கள் என்று சொல்லுங்கள். நரம்பு சம்பந்தமாக நோய் வரும் என்று சொல்லுங்கள் ஏன் என்றால் அதிகமாக சிந்திப்பார்.

ஆறு பலகரை நிமிர்ந்திருந்தால்

எப்படியாவது நினைத்தது நடைபெறவேண்டும் என்று நினைப்பவர். எவனை காலி செய்தாலும் பணம் கைக்கும் வர வேண்டும் என்று நினைப்பார். சாப்பிடுவதில் பெரும் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்வார். காமசுகத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டியது தான்.

கடவுள் பக்தி என்றால் என்ன என்று கேட்பார். இளமையில் வறுமையில் வாடுபவர் 30 வயதிற்க்கு பிறகு நன்றாக இருப்பார். திருமணம் ஆகாதவராக இருந்தால் திருமணத்தின் மூலம் வாழ்க்கையை ஒட்டி விடலாம் என்ற நினைப்பார் அதாவது திருமணத்தில் வரதட்சிணை என்ற பெயரில் பணத்தை கறந்துவிடுவார்கள். பிறப்புறுப்புகளில் நோய் தொற்று ஏற்படும்.

ஏழு பலகரை நிமிர்ந்திருந்தால்

கண்டிப்பாக தெய்வ அனுகிரகத்துடன் நடைபெறும். மக்களால் மகிழ்ச்சி உண்டு. இவர் செய்யும் தொழிலால் நன்மை அடைவார்கள். சொந்த மதத்தின் மீது தீவிர பற்று இருக்கும். சில நேரங்களில் மிக பெரிய வெற்றிகளை வெகு சாதாரணமாக செய்துவிட்டு அதை பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார். நல்ல ஆன்மீக சிந்தனை உள்ளவர். தனிமையை அதிகம் விரும்புவர். ஆன்மீக தலங்களுக்கு அடிக்கடி சென்று வருவார்.

காதலில் தோல்வியை தழுவுவார். திருமணத்தில் அதிக ஈடுபாடு இருக்காது. திருமணம் முடிந்தாலும் கணவன் மனைவியுடன் சண்டை சச்சரவுடன் வாழ்க்கைளை நடத்துவார். சன்யாசி யோகம் வாய்க்கும்.

எட்டு பலகரை நிமிர்ந்திருந்தால்

நினைத்த காரியம் நடைபெறாது உடம்பில் நோய் நொடி இருக்கும். சொத்துக்கள் விரையம் ஆகும். ஏதாவது ஒரு குறைபாடு இருந்துக்கொண்டே இருக்கும். கடவுள் பக்தி இருக்காது மனதில் ஏதாவது ஒரு சோகம் இருந்துக்கொண்டே இருக்கும் .

திருமண வாழ்வு நன்றாக இருக்காது திருமணத்தின் மீது வெறுப்பு இருக்கும். திருமணம் நடைபெற்றால் சண்டை தான் இருவருக்கும். விவாகரத்து வரை கொண்டு செல்லும். மொத்தத்தில் 8 ஆம் பலகரை விழகூடாது. சிலபேர் இருப்பார்கள் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் அது 1000 பேர்களில் ஒருவராக இருக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



No comments: