Followers

Thursday, May 24, 2012

தசாபலன்கள்



வணக்கம் நண்பர்களே இப்பதிவில் நாம் பார்க்கபோவது தசாபலன்களைப் பற்றி தான். இதனை நான் நீண்ட நாட்களாகவே தசா பலன்களை எழுதவேண்டும் அதற்கு நேரம் எப்பொழுது வரும் என்று நினைத்து இருந்தேன் கடவுளின் புண்ணியத்தினால் இப்பொழுது அதற்கு நேரம் வந்துவிட்டது.

தசாபலன்களை நீங்கள் தெரிந்து கொண்டுவிட்டால் ஒரளவுக்கு நீங்கள் சோதிட பலனை நீங்களே பார்த்துக்கொள்ளலாம். நாம் பிறக்கும் நேரத்தில் ஒவ்வொரு ஜாதகருக்கும் ஜன்மநட்சத்திரம் என்று ஒன்று வரும்.  அந்த நட்சத்திரத்தில் செல் இருப்பை நீக்கி வரும் வருடம்,மாதம்,நாள் என்று வரும். உங்கள் ஜாதகத்தில் ராசி கட்டத்திற்க்கு கீழே பார்த்திர்கள் என்றால் அதன் விபரம் தெரியவரும்.

உதாரணமாக தசா இருப்பு= சந்திரன் 5 வருடம்,8 மாதம், 12 தேதி என்று வரும் இது தான் தசா புத்திகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள உதவும் வழி. இதில் இருக்கும் தசா இருப்புயை வைத்துதான் நாம் தசா கணக்கை காண வேண்டும். 

ஒரு மனிதனுக்கு பலன்களை வழங்குவதில் முதன்மை இடத்தில் இருப்பது தசா நாதர்கள் தான். ஒருவனுக்கு ஒரு விஷயம் நடக்குவேண்டிய காலத்தை தெரிவிப்பது தசா பலன்கள் நிலை வைத்துதான் சொல்லமுடியும். 


ஜன்ம நட்சத்திரத்தை கொண்டுதான் தசாபலன்கள் கண்டறியமுடியும். முதலில் ஒவ்வொரு நட்சத்திரன் அதிபதி யார் என்று பார்க்கவேண்டும் அவருடைய தசாபலன்கள் எத்தனை வருடங்கள் என்று தெரிந்தால் நீங்கள் எளிதில் கண்டறிந்துவிடலாம். அதைப்பற்றி பார்க்கலாம்.

நட்சத்திரங்கள் : கார்த்திகை,உத்திரம், உத்திராடம் 
நட்சத்திர அதிபதி :       சூரியன் 
தசா வருடங்கள் :  6

நட்சத்திரங்கள் : ரோஹிணீ, ஹஸ்தம், திருவோணம்
நட்சத்திர அதிபதி : சந்திரன்
தசா வருடங்கள் :  10

நட்சத்திரங்கள் : மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம்
நட்சத்திர அதிபதி : செவ்வாய்
தசா வருடங்கள் :   7

நட்சத்திரங்கள் : திருவாதிரை, சுவாதி, சதயம்
நட்சத்திர அதிபதி : ராகு
தசா வருடங்கள் :  18

நட்சத்திரங்கள் : புனர்பூசம், விசாகம் ,பூரட்டாதி
நட்சத்திர அதிபதி : குரு
தசா வருடங்கள் : 16

நட்சத்திரங்கள் : பூசம், அனுஷம், உத்திரட்டாதி
நட்சத்திர அதிபதி : சனி
தசா வருடங்கள் : 19

நட்சத்திரங்கள் : ஆயில்யம், கேட்டை, ரேவதி
நட்சத்திர அதிபதி : புதன்
தசா வருடங்கள் : 17

நட்சத்திரங்கள் :  அசுவதி, மகம், மூலம்
நட்சத்திர அதிபதி : கேது
தசா வருடங்கள் : 7

நட்சத்திரங்கள் : பரணீ, பூரம், பூராடம்
நட்சத்திர அதிபதி : சுக்கிரன்
தசா வருடங்கள் : 20


ஆக மொத்த வருடங்கள் 120 என பிரித்துள்ளார்கள். 

இதை வைத்துதான் தசாபலன்களை முடிவு செய்யவேண்டும்.

நம் பதிவுக்கு வருபவர்கள் எண்ணிக்கை மிககுறைவு இப்பொழுது தான் நம் பதிவுகளை பல நண்பர்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் சோதிட துறைக்கு புதியவராகவும் இருக்கலாம். அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு தசாபலன்களை எளியமுறையில் தருகிறேன். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

No comments: