Followers

Saturday, May 7, 2016

பரிகாரம்


வணக்கம்!
          ராகு சந்திரன் எழுதியவுடன் இதுவரை பத்து நண்பர்கள் தொடர்புக்கொண்டு இதற்கு பரிகாரம் என்ன என்று கேட்டார்கள். அவர்களின் வாழ்வில் நடந்து வரும் பிரச்சினைப்பற்றியும் சொல்லி வந்தார்கள்.

பரிகாரம் என்ற ஒன்று அவர் அவர்களின் ஜாதகப்படி தான் அமையும். பொதுவான பரிகாரம் என்பது அனைவருக்கும் சரிப்பட்டு வராது என்பது ஒரு கருத்து. நிறைய பரிகாரம் இருக்கின்றது அது அனைத்தும் எப்படி வேலை செய்யும் என்பதும் தற்பொழுது நிறைய கேள்விகள் இருக்கின்றன.

இன்றைக்கு இருக்கும் கோவில்கள் அனைத்தும் புதியதாக கட்டுகிறேன் என்று இடித்துவிட்டு புதிதாக கட்டுகிறார்கள். அதில் உள்ள சக்தியின் நிலையும் கேள்விக்குறியாக தான் இருக்கின்றது.

சின்ன சின்ன பரிகாரம் அதாவது நீங்களே செய்துக்கொள்ளும் பரிகாரமும் இருக்கின்றன. அந்த பரிகாரத்தை எல்லாம் ஜாதக கதம்பத்தில் எழுதும்பொழுது அடுத்த நொடியில் பல பதிவுகளில் அது வந்துவிடுகிறது.

சோதிடத்தை தொழிலாக செய்யும் என்னை போன்றவர்கள் அவர்களே பரிகாரம் செய்வார்கள். இவர்களிடமும் செய்துக்கொள்ளலாம். தற்பொழுது ஒரு பரிகாரத்திற்க்கு என்று சோதிடர்களிடம் சென்றால் அவர்கள் கேட்கும் தொகை குறைந்தது நாற்பது ஆயிரமாக இருக்கும். நன்றாக செய்பவர்களாக இருந்தால் இந்த தொகை கேட்பார்கள்.

நான் பல பேர்களுக்கு செய்துக்கொடுத்து இருக்கிறேன். இதனை எப்படி செய்கிறேன் என்றால் ஒரு முறை என்னிடம் பரிகாரம் செய்பவர்களுக்கு அடுத்த முறை பரிகாரம் செய்யும்பொழுது அவர்கள் ஒரு நபரை என்னிடம் பரிந்துரைப்பார்கள் அவர்களுக்கு செய்யும்பொழுது அந்த நாளில் அவர்களின் ஊருக்கு செல்லும்பொழுது அவர்களுக்கு பரிகாரத்தை இலவசமாக அல்லது குறைந்த செலவில் செய்துவிடுவது உண்டு.

ஜாதககதம்பத்தில் தொடர்ந்து பல கிரகத்தைப்பற்றி பல தகவல்கள் வர இருக்கின்றது. ஒவ்வொரு கிரகத்திற்க்கும் நீங்கள் பரிகாரம் செய்வது என்றால் வருடத்திற்க்கு நீங்கள் பல லட்சம் செலவு செய்யவேண்டும். அதனை தவிர்ப்பதற்க்கு ஒரு முறை நீங்கள் பரிகாரம் செய்தால் போதும் அடுத்த பிரச்சினை வரும்பொழுது உங்களால் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு அல்லது உங்களின் ஊருக்கு ஏதாவது ஒரு வேலை என்று வரும்பொழுது உங்களுக்கு குறைந்த செலவில் அல்லது இலவசமாக செய்துக்கொடுத்துவிடுகிறேன். 

ஒரளவு நீங்களே செய்யும் பரிகாரத்திற்க்கு நமது கட்டண சேவை தளத்திற்க்கு வந்துவிடுங்கள். ஜாதக கதம்பத்தில் எழுதும் கிரக பிரச்சினைக்கு அவ்வப்பொழுது உடனே கட்டணசேவையில் நீங்களே செய்துக்கொள்ளும் பரிகாரம் தரப்படும். 

முடிந்தளவு குறைந்த செலவில் பல பரிகாரம் நமது நண்பர்களுக்கு செய்துக்கொடுத்து இருக்கிறேன். பணம் என்பது முக்கியம் தான் அதனை விட நண்பர்களுக்கு செய்யும் சேவையும் முக்கியம் என்பதால் தகுந்தமாதிரி செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: