Followers

Thursday, October 22, 2020

ஐப்பசி பெளர்ணமி



 வணக்கம்!

                   வருகின்ற 31 ஆம் தேதி ஐப்பசி பெளர்ணமி வருகின்றது. உலகத்திற்க்கு இறைவன் உணவை படியளந்த நாள். ,இந்த ஐப்பசி பெளர்ணமி அன்று நாம் நமது அம்மனுக்கு மாத பூஜையை நடத்த திட்டமிட்டுள்ளோம். நவம்பர் மாதம் நடைபெற இருந்த பூஜையை ஐப்பசி பெளர்ணமி இந்த மாத கடைசியில் வருவதால் அந்த நாளில் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.

ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று நீங்கள் உங்களின் அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்க்கு அன்னாபிஷேகம் நடைபெறுவதற்க்கு அரிசி மற்றும் காய்கறிகளை தானம் அளியுங்கள். வருடம் முழுவதும் உங்களுக்கு அன்னம் தட்டுபாடு ஏற்படாது. அன்னத்தால் ஏற்படும் தோஷமும் விலகி உங்களுக்கு நல்லது நடக்கும். 

30 ஆம் தேதியே பெளர்ணமி வருகின்றது. பெரும்பாலும் கோவில்களில் 31 ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற இருக்கின்றது. உங்களுக்கு அருகில் உள்ள சிவலாயங்களில் எந்த நாளில் அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் நீங்கள் செயல்பட்டுக்கொள்ளுங்கள்.

பெளர்ணமி அன்று பெரும்பாலும் அனைவரும் வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாலும் ஐப்பசி பெளர்ணமி அன்று நிலவு முழு சக்தியோடு தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். அதிகமான ஒளிகளை தரும் என்பதால் அந்த நாளை நீங்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன் 

ராஜேஷ்சுப்பு






No comments: