Followers
Monday, January 12, 2015
Friday, January 9, 2015
முட்டுக்கட்டை போடும் பித்ருக்கள்
வணக்கம் நண்பர்களே!
பல நண்பர்கள் தொழில் செய்யவேண்டும் அல்லது ஏதாவது ஒரு நல்ல வேலை வேண்டும் என்று அழைபவர்களாக இருக்கின்றனர. உங்களின் ஜாதகத்தில் ஜாதகத்தை எடுத்து பித்ரு தோஷம் இருக்கின்றதா என்று முதலில் பார்த்து விடுங்கள். அதன்பிறகு உங்களின் இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்.
பல பேர்கள் தங்களின் ஜாதகத்தில் பித்ருதோஷம் இருக்கின்றது என்பதை கூட தெரியாமல் அல்லல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். பல சோதிடர்களிடம் அவர்கள் ஜாதகத்தை காட்டியும் சோதிடர்கள் இவர்களுக்கு இருக்கும் தோஷத்தை சொல்லுவதில்லை.
பித்ருதோஷம் இருந்தால் அவர்களால் வாழ்க்கையில் ஒரு நிலையை அடையமுடியாது. பல பேர்கள் தங்களின் வாழ்வை தொலைத்துவிட்டவர்களாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு திருமண வாழ்வு அமைவதில்லை. இளம்வயதில் திருமணம் நடைபெற்றாலும் திருமண வாழ்வு பிரச்சினையை சந்திப்பதாகவே இருக்கின்றது.
ஒரு சிலர் பித்ருதோஷத்தை நீக்குகிறேன் என்று போய் தவறாக பல விசயங்களை செய்துவிட்டு வந்துவிடுகிறார்கள். பித்ருக்களுக்கு ஒழுங்கான சாந்தியை யாரும் செய்வதில்லை. சரியான முறையில் சாந்தி செய்யும் நபர்களிடம் சென்று பித்ருக்களுக்கு சாந்தி செய்தால் எல்லா பிரச்சினையிலும் இருந்து விடுபடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
ஆன்மீக அனுபவங்கள் 175
வணக்கம் நண்பர்களே!
ஆன்மீக அனுபவங்களில் ஒரு வித்தியாசமான ஒரு தகவலை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொருவிதமான பலியை அந்த கோவிலில் உள்ள தெய்வத்திற்க்கு கொடுப்பார்கள். அது தொன்றுதொட்டு வரும் நடைமுறையில் உள்ள பழக்கமாக இருக்கும்.
ஒரு சில கோவிலில் ஆடு கோழி இப்படி பலி கொடுப்பார்கள். மனிதர்கள் வளர்க்கும் உயிரினங்களை தனக்கு பிடித்தமான தெய்வத்திற்க்கும் கொடுத்து அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். இதில் நாம் தலையிடகூடாது என்று பல ஞானிகளே சொல்லியுள்ளனர்.
பல கோவில்களில் பன்றியை பலியிட்டு வணங்குவார்கள். நமது அம்மன் கோவிலில் இருக்கும் ஒரு தெய்வத்திற்க்கு வருடத்திற்க்கு ஒரு முறை பன்றியை வெட்டி பலிக்கொடுப்பார்கள். அந்த தெய்வத்தின் பெயர் பாவாடைராயன் என்று பெயர் சொல்லுவார்கள்.
ஒரு சில இடங்களில் மாடன் தெய்வத்திற்க்கு இப்படி பலிக்கொடுப்பதை நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். மாடன் வழிப்பாடு தென்தமிழகத்தில் இருக்கும். இது எல்லாம் செவிவழி செய்தி மட்டுமே.
ஒரு சில கிராமங்களில் பன்றியை வீட்டில் வைத்து வளர்ப்பார்கள். அப்படி ஒரு வீட்டில் ஒரு பன்றியை வளர்த்தால் அந்த வீட்டில் எந்த வித தீயசக்திகளும் நெருங்கமுடியாது. பிடிக்க வருகின்ற எமன் கூட அதனிடம் அனுமதி கேட்டு தான் வரமுடியும்.
இன்றைய காலத்தில் பன்றியை எல்லாம் வளர்க்கமுடியாது ஒரு தகவலுக்காக உங்களிடம் இதனை பகிர்ந்துக்கொண்டேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
கண்டுபிடிக்க முடியாத வியாதி
ஒருவருக்கு உடல்நிலை நன்றாக இருந்தாலே போதும் என்று நோய் வரும்பொழுது நமக்கு தோன்றும். நோய் தீர்ந்தவுடன் அதனை அப்படியே மறந்துவிட்டு ஆட்டம் போட ஆரம்பித்துவிடுவோம்.
மனிதனுக்கு வரும் நோயைப்பற்றி சோதிடத்தை பார்த்து நாம் முன்கூட்டியே அறிந்துக்கொள்ளலாம். ஏதாவது பரிகாரம் செய்துக்கொண்டு பெரிதாக வருவதை சிறிதாக குறைத்துக்கொள்ளலாம்.
சோதிடத்தில் ஆறாவது வீட்டை வைத்து நமக்கு வரும் நோயைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் இந்த நோய் தான் வரும் என்பதையும் சொல்லிவிடலாம். ஒரு சில நோயை மட்டும் நாம் கண்டுக்கொள்ளமுடியாது.
ஒருத்தருக்கு நோய் வந்து அதனை பரிசாேதனை செய்து இவருக்கு வந்திருக்கிற நோய் என்ன என்றே தெரியாமல் இருந்தால் அது மறைவு ஸ்தான தசாவில் இருந்து வந்தது என்று அறிந்துக்கொள்ளலாம். மறைவு வீட்டு தசா நடந்தது என்றால் வருகின்ற நோய் என்ன என்று அறிந்துக்கொள்ள முடியாது.
நோய் உடலில் இருக்கின்றது என்று கூட நமக்கு தெரியாது. அது நாள் ஆக ஆக பிரச்சினையை கிளப்பிவிட்டுவிடும். அதனால் உங்களுக்கு மறைவு ஸ்தான தசா நடந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Thursday, January 8, 2015
அம்மன் அருள்
வணக்கம் நண்பர்களே!
அம்மன் செய்யும் செயலை பார்த்து நானே ஒரு சில நேரங்களில் ஆச்சரிப்படுவேன். ஒரு சில நேரங்களில் நமது தொழில் அதிபர்களின் வேண்டுதலுக்கு இணங்க இவ்வளவு தான் அவர்க்கு பணம் கிடைக்க வேண்டும் என்று நான் அம்மனிடம் வேண்டுவேன். சரியாக அந்தளவுக்கு தான் அம்மன் அவர்களுக்கு கொடுக்கும்.
தொழிலுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தப்பொழுது அதனை எப்படி செய்வது என்றே எனக்கு பலவிதத்தில் குழப்பம் ஏற்பட்டது. ஏன் என்றால் நமக்கு வரவேண்டிய பணத்தை எடுத்துக்கொள்வார்களோ அல்லது ஏமாற்றிவிட்டு சென்றுவிடுவார்களோ என்று நான் நினைத்தது உண்டு
இன்றைக்கு அந்தமாதிரி யாரும் கிடையாது. அனைவரும் நண்பர்களாக மாறிவிட்டார்கள். அதே நேரத்தில் அம்மன் மிகச்சரியாக அவர்களுக்கு வேலை செய்கிறது. ஒவ்வொருவரும் மேலை வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சரியாக என்னை கவனித்துவிடுகிறார்கள்.
ஒவ்வொருவரும் அம்மனின் அருளை நன்றாக உணர்ந்தவர்கள். அம்மனின் அருள் என்ன என்று அவர்களுக்கு உணர்த்திவிடுகிறேன். அப்புறம் ஏமாற்றுவதற்க்கே வழி இல்லாமல் போய்விடுகிறது. ஒரு வேலை நடந்துக்கொண்டு இருந்தால் அந்த வேலை உடனே நிற்க வேண்டும் என்று நான் நினைத்த அடுத்த நொடி அப்படியே அந்த வேலை நிற்க்கும்.
இதனை எதற்கு உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் ஒரு அம்மனை நீங்கள் கும்பிட்டு வந்தால் எனக்கு நடப்பது போல் உங்களுக்கு நடக்கவேண்டும். அதனை உணர்த்துவதற்க்கு தான் இதனை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
வீடு
வணக்கம் நண்பர்களே !
பொதுவாக ஒரு வாஸ்து நிபுணரை கூப்பிட்டு உங்களின் வீட்டை காண்பித்தால் அவர் ஏதாவது ஒரு குறையாவது சொல்லிவிட்டு சென்றுவிடுவார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்தை சொல்லி உங்களின் வீட்டை இடிக்க சொல்லிவிடுவார்கள்.
உங்களின் வீட்டில் என்ன பிரச்சினை என்பதை இரண்டு வாஸ்து புத்தகங்களை வாங்கி நீங்கள் படித்தாலே தெரிந்துக்கொள்ளமுடியும். என்னுடைய கருத்து எல்லாம் கோவில் போல் உங்களின் வீடு இருக்கவேண்டும் என்றால் அதற்கு தான் செய்துதருவேன். கண்டிப்பாக அது வாஸ்து கிடையாது.
பொதுவாக இந்த மாதிரி வீடுகளை ஆன்மீகவாதிகள் மிகவும் விரும்பி கட்டி அதில் குடியிருப்பார்கள். இப்பொழுது கூட என்னை தொடர்புக்கொண்டவர்கள் அதிகம் பேர் ஆன்மீகத்தில் நல்ல நிலைமையில் இருப்பவர்கள் தான் தொடர்புக்கொண்டார்கள்.
அனைவரும் இதனை விரும்பி கட்டிக்கொண்டாலும் நல்லது தான். உங்களின் வீட்டை நான் சொல்லுவது போல் அமைத்துக்கொண்டு நீங்கள் ஆன்மீகப்பயிற்சி செய்தால் மிகப்பெரிய அளவில் நீங்கள் வருவீர்கள் என்பது மட்டுமே உண்மை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Subscribe to:
Posts (Atom)




