Followers

Friday, January 9, 2015

ஆன்மீக அனுபவங்கள் 175


வணக்கம் நண்பர்களே!
                      ஆன்மீக அனுபவங்களில் ஒரு வித்தியாசமான ஒரு தகவலை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொருவிதமான பலியை அந்த கோவிலில் உள்ள தெய்வத்திற்க்கு கொடுப்பார்கள். அது தொன்றுதொட்டு வரும் நடைமுறையில் உள்ள பழக்கமாக இருக்கும்.

ஒரு சில கோவிலில் ஆடு கோழி இப்படி பலி கொடுப்பார்கள். மனிதர்கள் வளர்க்கும் உயிரினங்களை தனக்கு பிடித்தமான தெய்வத்திற்க்கும் கொடுத்து அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். இதில் நாம் தலையிடகூடாது என்று பல ஞானிகளே சொல்லியுள்ளனர்.

பல கோவில்களில் பன்றியை பலியிட்டு வணங்குவார்கள். நமது அம்மன் கோவிலில் இருக்கும் ஒரு தெய்வத்திற்க்கு வருடத்திற்க்கு ஒரு முறை பன்றியை வெட்டி பலிக்கொடுப்பார்கள். அந்த தெய்வத்தின் பெயர் பாவாடைராயன் என்று பெயர் சொல்லுவார்கள்.

ஒரு சில இடங்களில் மாடன் தெய்வத்திற்க்கு இப்படி பலிக்கொடுப்பதை நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். மாடன் வழிப்பாடு தென்தமிழகத்தில் இருக்கும். இது எல்லாம் செவிவழி செய்தி மட்டுமே.

ஒரு சில கிராமங்களில் பன்றியை வீட்டில் வைத்து வளர்ப்பார்கள். அப்படி ஒரு வீட்டில் ஒரு பன்றியை வளர்த்தால் அந்த வீட்டில் எந்த வித தீயசக்திகளும் நெருங்கமுடியாது. பிடிக்க வருகின்ற எமன் கூட அதனிடம் அனுமதி கேட்டு தான் வரமுடியும்.

இன்றைய காலத்தில் பன்றியை எல்லாம் வளர்க்கமுடியாது ஒரு தகவலுக்காக உங்களிடம் இதனை பகிர்ந்துக்கொண்டேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: