Followers

Thursday, December 14, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          ஒரு நாடு முன்னேற்றம் அடைந்தால் அந்த நாட்டில் சாப்பாடு பற்றாக்குறை ஏற்படாது. நம்ம இந்தியாவில் அன்னதானம் மிகப்பெரிய தர்மம் என்று சொல்லுகின்றனர். நம்ம ஆளுங்க அதனை செய்துக்கொண்டு இருக்கின்றனர்.

அன்னதானம் செய்தால் ஒரு இடத்தில் அனைவரும் அதனை சாப்பிடவேண்டும் என்று தேடி செல்கின்றனர். அன்னதானம் செய்தால் அதனை சாப்பிடவேண்டும் என்று நமக்கு தோன்றுகிறது என்றால் நம்மிடம் போதிய ஊட்டச்சத்து நிறைந்த சாப்பாட்டை ஒருவரும் சாப்பிடவில்லை என்று தோன்றுகிறது.

நாம் சாப்பிட்டு சாப்பிட்டு சளித்துவிட்டால் அதனை நோக்கி அவ்வளவு எளிதில் நாம் சென்றுவிடமாட்டோம். நம்முடைய உடல் போதிய சாப்பாட்டை சாப்பிடவில்லை என்று தான் அர்த்தம். சாப்பிடவேண்டும் என்றால் தான் நாம் அன்னதானத்திற்க்கே செல்வோம்.

நாம் இன்னமும் முன்னேற்றம் அடையவில்லையே என்று தான் தோன்றுகிறது. நாம் அனைவரும் நல்ல ஊட்டசத்தை நிறைந்த உணவை சாப்பிட்டால் நாம் முன்னேற்றம் அடைந்துவிட்டோம் என்று சொல்லலாம்.

ஒவ்வொருவரும் நல்ல ஊட்டசத்து நிறைந்த உணவை சாப்பிட்டால் அதுவாகவே சுக்கிரன் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும். சுக்கிரன் ஆற்றல் வந்துவிட்டால் நம்மிடம் நிறைய பணம் வரும். அனைத்து செல்வமும் கிடைத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 13, 2017

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
         இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன்பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!
           இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரன் கிரகம் ஒருவருக்கு சரியில்லை என்றால் அவர் காதலில் தோல்வியை சந்திப்பார் என்று சொல்லுவார்கள். சுக்கிரன் நன்றாக அமைந்த நபர்களுக்கும் காதல் தோல்வியை சந்திப்பார்கள். இது அவர்களுக்கு நடக்கும் கோச்சாரபலன் மற்றும் தசா பலனை பொறுத்து அமையும்.

பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருக்கின்றது அதனால் காதல் திருமணம் தான் புரிவார் என்று சொல்லமுடியாது. திருமண வயதில் அவர்க்கு நடைபெறும் தசா மற்றும் கோச்சாரபலன் அதனை முடிவு செய்யும்.

ஒருவர் காதலில் தோல்வியை தழுவது அவர்களுக்கு பிற கிரகங்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும்பொழுது அவர்களின் மனநிலை சரியில்லாமல் செய்துவிடும். சண்டை போட்டுக்கொண்டு பிரிவார்கள்.

சுக்கிரன் அந்த நேரத்தில் பலவீனமாக சென்றுக்கொண்டு இருந்தால் நிலைமை அதிக மோசமாக போய்விடும். சுக்கிரன் செல்லும் வீட்டிற்க்கு தகுந்தமாதிரி அவர்களின் பிரிவும் இருக்கும். எந்த காரணத்தால் பிரிவு ஏற்படுகிறது என்பது சுக்கிரன் செல்லும் வீட்டை வைத்து தான் சொல்லமுடியும். காதல் செய்கின்றீர்கள் என்றால் உடனே திருமணம் செய்வது நல்லது.

இன்று அம்மன் பூஜை நடைபெறுகிறது. அம்மனிடம் வேண்டுதல் வைப்பவர்கள் வைக்கலாம். நவஅம்மன் யாகம் நடந்துக்கொண்டு இருக்கின்றது.

பொதுநவஅம்மன் யாகத்திற்க்கு அறிவிப்பு வரும் அனைவரும் அதில் கலந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 12, 2017

அம்மன் பூஜை


வணக்கம்!
                         நாளை அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜை காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.  
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள். 
சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள். 

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.  
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.  
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.  

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.   
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள். 
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.  

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.  
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்
திருப்பூரை சேர்ந்த திரு விமல் அவர்கள்

வழக்கம்போல் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். 

மற்றும் பல நண்பர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தியுள்ளனர். அம்மன் பூஜை நடைபெறுவதால் அம்மனிடம் வேண்டுதலை வைக்கலாம்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

Monday, December 11, 2017

எட்டாவது வீட்டில் சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரன் எட்டாவது வீட்டில் இருந்தால் அவர்களுக்கு பணப்பற்றாக்குறை என்பது இருக்கவே இருக்காது. நான் பார்த்தவரையில் சுக்கிரன் எட்டில் இருக்கும் நபர்களுக்கு எப்படியும் பணம் வந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு வராமல் இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் அதிகமாகவே வரும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.

எட்டாவது வீட்டில் சுக்கிரன் மறைந்து இருக்கின்றது அதனால் பிரச்சினை என்று பார்த்தால் ஒரு சில வேலை காரணமாக அவர்களின் துணையை அடிக்கடி பிரிந்து செல்ல நேரிடும். அதுவும் நிரந்தரமாக இருந்துவிடாது அடிக்கடி வந்து பார்த்து செல்லும் நபர்களாகவே இருப்பார்கள்.

எட்டாவது வீட்டில் பெண்ணிற்க்கு சுக்கிரன் இருந்தால் அவர்கள் தான் அந்த வீட்டின் தலைவர் போல செயல்படுவார். அவர் சொல்லுவதை அவரின் கணவன் கேட்கவேண்டும். வரவு செலவு எல்லாம் அவரின் பார்வையில் தான் இருக்கும்.

மறைவு வீட்டில் இருப்பதால் ஆன்மீகத்திலும் நல்ல ஈடுபாட்டை கொடுப்பார். இவர் செய்யும் எந்த ஒரு ஆன்மீகபணியும் தோல்வி என்ற பேச்சிற்க்கு இடம் இல்லாமல் அனைத்தையும் முடிப்பார்கள். இவர்களை நம்பி ஆன்மீக பணிகளை செய்ய கொடுக்கலாம்.

சுக்கிரன் எட்டாவது வீட்டில் இருப்பதால் வண்டி வாகனங்கள் வாங்குவதில் மட்டும் இழுபறி காட்டுவார். ஒரு சிலருக்கு சொத்துக்கள் பிரச்சினை இருக்கும். இவர்களின் சொத்தை அடுத்தவர்கள் ஆளுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு