Followers

Monday, December 11, 2017

எட்டாவது வீட்டில் சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரன் எட்டாவது வீட்டில் இருந்தால் அவர்களுக்கு பணப்பற்றாக்குறை என்பது இருக்கவே இருக்காது. நான் பார்த்தவரையில் சுக்கிரன் எட்டில் இருக்கும் நபர்களுக்கு எப்படியும் பணம் வந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு வராமல் இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் அதிகமாகவே வரும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.

எட்டாவது வீட்டில் சுக்கிரன் மறைந்து இருக்கின்றது அதனால் பிரச்சினை என்று பார்த்தால் ஒரு சில வேலை காரணமாக அவர்களின் துணையை அடிக்கடி பிரிந்து செல்ல நேரிடும். அதுவும் நிரந்தரமாக இருந்துவிடாது அடிக்கடி வந்து பார்த்து செல்லும் நபர்களாகவே இருப்பார்கள்.

எட்டாவது வீட்டில் பெண்ணிற்க்கு சுக்கிரன் இருந்தால் அவர்கள் தான் அந்த வீட்டின் தலைவர் போல செயல்படுவார். அவர் சொல்லுவதை அவரின் கணவன் கேட்கவேண்டும். வரவு செலவு எல்லாம் அவரின் பார்வையில் தான் இருக்கும்.

மறைவு வீட்டில் இருப்பதால் ஆன்மீகத்திலும் நல்ல ஈடுபாட்டை கொடுப்பார். இவர் செய்யும் எந்த ஒரு ஆன்மீகபணியும் தோல்வி என்ற பேச்சிற்க்கு இடம் இல்லாமல் அனைத்தையும் முடிப்பார்கள். இவர்களை நம்பி ஆன்மீக பணிகளை செய்ய கொடுக்கலாம்.

சுக்கிரன் எட்டாவது வீட்டில் இருப்பதால் வண்டி வாகனங்கள் வாங்குவதில் மட்டும் இழுபறி காட்டுவார். ஒரு சிலருக்கு சொத்துக்கள் பிரச்சினை இருக்கும். இவர்களின் சொத்தை அடுத்தவர்கள் ஆளுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: