Followers

Sunday, May 5, 2019

அவமானங்களில் இருந்து எப்பொழுது தப்பிக்கலாம்?


வணக்கம்!
          ஒரு குடும்பத்தில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் ஒன்றுமே சரியில்லாமல் இருப்பார். அவரை அந்த குடும்பத்தில் உள்ள நபர்கள் அனைவரும் சேர்ந்து திட்டிக்கொண்டே இருப்பார்கள். என்ன தான் திட்டினாலும் என்ன தான் முயற்சி செய்தாலும் அவரால் ஒரு முன்னேற்றம் என்பதே அவரிடம் இருக்காது. அவர் யார் என்றால் அவர் தான் லக்கனாதிபதி மறைவுஸ்தானத்தில் ஏறிய நபராக இருப்பார்.

லக்கனாதிபதி மறைவுஸ்தானத்தில் ஏறிய நபர்கள் குடும்பத்தினர்களின் திட்டுதலுக்கு ஆளாக நேரிடும். நிறைய வசப்பாடல் நிறைய அவமானங்களை எல்லாம் சந்தித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் முயற்சி எடுக்காமல் இல்லை ஆனால் இவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகவே போய்விடுகின்றது அது தான் பிரச்சினை.

ஒரு ஊரில் உள்ள பத்து லக்கினாதிபதி மறைவுஸ்தானத்தில் உள்ளவர்களை எடுத்து பார்த்தால் இந்த பத்து பேரும் மேலே சொன்ன ரகத்திலேயே இருப்பார்கள். வாழ்க்கை முழுவதுமே மிகுந்த ஒரு போராட்டத்தை காண்பவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் முன்னேற்றம் அடையமுடியாத பிறர்கள் ஏளனம் செய்வதில் இருந்து தப்பிக்க முடியாத என்று கேட்கலாம் அல்லது ஏதோ ஒரு காலக்கட்டத்தில் இவர்கள் முன்னேற்றபாதைக்கு செல்லமாட்டார்களா என்று கேட்கலாம்.

இவர்கள் ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு முன்னேற்றத்தை அடைவார்கள் ஆனால் அதற்கு அவர்கள் பெரும்பாடுபட்டு ஒன்றை உருவாக்கி அதன்பிறகு வெற்றி காண்பவர்களாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு நல்ல தசா வந்தால் முன்னேற்றத்தை காண்பவர்களாக இருப்பார்கள்.

உங்களின் ஜாதகத்தில் லக்கனாதிபதி மறைவு பெற்று அதில் நீங்கள் சிக்கி இருக்கின்றீர்கள் இதனை என்ன செய்தால் இதில் இருந்து மீண்டு வரலாம் என்று நீங்கள் ஆலோசனை கேட்க நினைத்தால் என்னை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Kodai said...

Yes sir.. lagna lord in 3rd house for meena lagna.. facibg lot of humiliation

rajeshsubbu said...

வணக்கம் Kodai தங்களின் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் தீர்வு காணலாம்.
நன்றி