Followers

Monday, May 6, 2019

மனதுக்கு பரிகாரம்


வணக்கம்!
          என்னிடம் ஒரு பழக்கம் இருக்கின்றது. ஒரு காரியம் எடுத்து செய்யும்பொழுது என்னால் தனிப்பட்ட முறையில் எந்தளவுக்கு செய்யமுடிகின்றது. என்னுடைய தனிப்பட்ட சக்தி எந்தளவுக்கு வேலை செய்கின்றது என்பதை பார்த்து செய்வது உண்டு.

ஒரு வேலை என்பது என்னுடைய உடல் சம்பந்தமாக எந்தளவுக்கு உழைக்கின்றோம் என்பதை பொறுத்து வேலை நடக்கும். என்னுடைய உடல் உழைப்பு மற்றும் மன உழைப்பை போட்டு வேலையை செய்வேன்.

ஒரு சில காரியத்தில் இது எளிமையாக நடந்துவிடுவது உண்டு ஒரு சில காரியத்தில் இது நடக்காமல் போய்விடும். ஒரு ஐம்பது சதவீதம் செல்லும் அதன்பிறகு அந்த வேலை அப்படியே நின்றுவிடுவது உண்டு.

ஒரு கட்டத்திற்க்கு மேல் என்னால் முடியவில்லை என்ற நிலை வரும்பொழுது பூஜையை ஆரம்பித்து அதில் வெற்றியை கொண்டுவருவது உண்டு. ஒரு வேலையை எடுத்தவுடன் பூஜையை செய்யவேண்டும் என்பது கிடையாது. வேலை எப்படி நடக்கின்றது என்பதை பொறுத்து இதனை செய்கிறேன்.

சராசரியாக ஒரு மனிதன் எப்படி செய்கின்றானோ அதன் வழியாகவே முயற்சிக்க வேண்டும் அதன்பிறகு ஆன்மீக பக்கம் வேலையை தொடங்குவது உண்டு. சாதாரணமான மனிதன் போல வேலை செய்யும்பொழுது எனது கர்மா விலகும் என்பதால் அதன் வழியாகவே நடக்க விரும்புகிறேன்.

எப்படி வேலை நடக்கின்றது என்பதையும் சொல்லவேண்டும் 

என்னுடைய மனதால் தான் இதனை எல்லாம் செய்வது உண்டு. நம்முடைய மனதிற்க்கு அதிக சக்தி உண்டு என்பதை அறிந்து செயல்பட்டால் அனைத்தும் சாத்தியமே. எல்லா மனிதர்களுக்கும் மனது இருக்கின்றது ஆனால் அனைவராலும் இது சாத்தியபடுவது கிடையாதே என்று தோன்றும்.

மனதைப்போட்டு அலைகழித்துக்கொண்டே இருக்ககூடாது. அதிகமான சிந்தனையும் மனதின் சக்தியை வீணடிக்கும் ஒரு வழியாகவே இருக்கின்றது. இந்த காலத்தில் ஒரு மனிதன் சும்மா எப்படி இருக்கிறான் நாள் முழுவதும் சும்மா இருப்பதில்லை செல்போனில் ஏதாவது பார்த்துக்கொண்டே தான் இருக்கிறான்.

நானும் செல்போன் பார்க்கிறேன் எப்படி பார்ப்பேன் என்றால் எனக்கு எப்பொழுது தேவையோ அந்த நேரத்தில் அதனை பார்த்துவிட்டு அதன்பிறகு அதனை தூக்கி போட்டுவிடுவது உண்டு. தேவை இருக்கும்பாெழுது அதனை செய்தால் அதனால் பெரிய இழப்பு இருக்காது. 

நான் ஒரு காரியத்தில் மனதை செலுத்திவிட்டால் அது பெரும்பாலும் தோற்பதில்லை அதற்கு காரணம் மனதை சரியான வழியில் கொண்டு செல்வதால் மட்டுமே இது முடியும். மனதை சரியாக இருக்க வைக்கவேண்டும் என்றால் நல்லவனாக இருக்கவேண்டும் கெட்டவனாக இருக்கவேண்டும் என்பது எல்லாம் கிடையாது. நமக்கு தேவை ஏற்பட்டால் மட்டுமே மனதிற்க்கு வேலை கொடுப்பது போல நாம் பார்த்துக்கொண்டால் போதும் அனைத்தும் சாத்தியமே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: