Followers

Wednesday, November 14, 2012

ஆன்மீக அனுபவங்கள் 22


வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவத்தில் சிவனைப்பற்றி பார்த்தோம் அல்லவா அதை நீங்கள் குடியிருக்கும் வீட்டோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டும் என்று சொன்னேன் அதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

உங்களின் வீட்டில் ஈசானிய மூலையில் ஈசன் வந்து நின்று பார்ப்பார் அவர் அப்படி நின்று பார்க்கும் போது எந்த உருவத்தில் வந்து பார்ப்பார்  என்று ஒரு சிலர் சொல்லுவார்கள். இதை வாஸ்துசாஸ்திரத்தில் கண்டுபிடிக்கமுடியாது.

உங்கள் வீட்டில் ஈசானிய மூலையில் ஈசன் ருத்ரன் வடிவாக வந்து நின்றால் நீங்கள் என்ன தான் வாஸ்துப்படி வீட்டை கட்டினாலும் வீடு தீ்க்கு இரையாகும். வீட்டில் ஏதாவது விபத்து வரும்.

உங்கள் வீட்டில் ஈசன் காலபைரவராக வந்து நின்றால் வீட்டில் உள்ளவர்கள் நோய்வாய்ப்பட்டு இறப்பார்கள்.

உங்கள் வீட்டில் ஈசன் சத்சிதானந்தமாக வந்து நின்றால் வீடு சுபிட்ஷமாக இருக்கும், உங்களின் வீட்டிற்க்கு பணவரவு வந்து கொண்டே இருக்கும்.

உங்கள் வீட்டில் ஈசன் சதாசிவமாக வந்து நின்றால் உங்களின் வீடு வசதியாக இருக்கும் அதே நேரத்தில் ஒரு கோவிலை கட்டி வைத்துக்கொண்டு இல்லறவாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பார்கள்.

உங்கள் வீட்டில் ஈசன் பரபிரம்மமாக வந்து நின்றால் எந்த வித முன்னேற்றமும் அந்த வீட்டில் இருக்காது.

இதனை உங்கள் வீட்டு தலைவரின் ஜாதகத்தில் நான்காம் வீட்டைக்கொண்டு கணிக்கலாம் என்று சொல்லுகிறார்கள். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

நண்பர்களே நாம் மக்களின் கண்களுக்கு சோதிடராக தெரியும் நம்மை சோதிடராக தான் பார்ப்பார்கள். நம்முடைய தரத்தை நாம் உயர்த்திக்கொள்ள வேண்டும் சோதிடத்தின் மூலமாகதான் அனைத்தையும் கண்டுபிடித்திருக்க வேண்டும் இந்த கருவி இல்லாமல் எங்கும் செல்லமுடியாது.

ஒரு சோதிடனுக்கு இது தான் தெரியும் என்கிற நிலைமை மாறி சோதிடனுக்கு அனைத்தும் தெரியும் என்ற நிலைக்கு உங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதை நேரத்தில் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாதீர்கள். உங்களை நேரில் சந்தித்தாலும் எதையும் வெளியில் காட்டிக்கொள்ள கூடாது. ஒரு சோதிடனாக இருப்பவனுக்கு அனைத்திலும் ஈடுபட்டு வெளியில் வரமுடியும் என்பதை மனதில் வையுங்கள் அதற்க்கான பயிற்சியை உடனே தொடங்கிக்கொள்ளுங்கள்.

சோதிடத்தை படிப்பவனுக்கு குரு கிரகத்தின் பலம் அதிகமாக இருக்கும் என்பதை மனதில் வையு்ங்கள் இது ஒன்று போதும் அதனை பயன்படுத்திக்கொண்டு மந்திரம், யோகா ,தியானத்தில் வென்று வரலாம்.

எனது நண்பர் சொன்னார் உனக்கு அனைத்திலும் ஈடுபாடு இருக்கும் போது மற்றவர்கள் மாதிரி யோகா தியானத்தை சொல்ல வேண்டியது தானே ஏன் அந்த தெய்வம் இந்த தெய்வம் என்று சொல்லுகிறாய் என்று கேட்டார்.

நண்பர்களே நாம் யோகா தியானம் என்று போகும் போது அதன் உண்மையான செயல்பாட்டை பார்த்தால் நீங்கள் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். ஏன் என்றால் உயிரோடு விளையாடக்கூடிய நிகழ்வு எல்லாம் அதில் இருக்கிறது அப்படி அதில் ஈடுபடும் போது ஒரு தெய்வசக்தியை வைத்துக்கொண்டு செய்தால் நல்லது உங்களின் உயிருக்கு அது உத்தரவாதம்.

இப்பொழுது நடைபெறும் யோகா தியானம் போன்ற வகுப்பில் சும்மா மூச்சு பயிற்சியை சொல்லிதருகிறார்கள் இவர்கள் முதலில் நல்ல சூழ்நிலை உருவாக்கிக்கொண்டு பிரணவ மந்திரத்தை ஆடியோவில் ஒடவிட்டுக்கொண்டு மைக்கில் நீங்கள் இப்பொழுது முதல் சக்கரத்தில் இருந்து அடுத்த சக்கரத்திற்க்கு சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்லுவது உண்மை தெரிந்தவன் அதில் இருந்து ஒடிவிடுகிறான் ஒன்று தெரியாதவன் மாட்டிக்கொண்டு பணத்தை இழக்கிறான் இப்படி தான் பல யோகா வகுப்புகள் போய்கொண்டு இருக்கின்றன்.

சக்கரத்தை ஏற்றுவது என்பது நடைமுறையில் அனைவருக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். அது உண்மை தானா என்றால்  தாம்பத்திய வாழ்க்கையில அதிகமாக ஈடுபட்டு இருப்பனுக்கு சக்கரம் மேலே ஏறாது ஆனால் நம்ம ஆட்கள் 60 வயது முதியவர்க்கு சக்கரத்தை ஏற்றுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சக்கரத்தை மேலே ஏற்றலாம் எப்பொழுது தெரியுமா உங்களிடம் அந்த தெய்வசக்தி நல்ல முறையில் இருக்கும்பட்சத்தில் உங்களின் குரு அதற்கு வழி செய்து கொடுப்பார்.

உண்மையில் குருவின் நேரடி பார்வையில் நீங்கள் பயிலுவது என்பது ஒருவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சக்கரத்தை மேலே ஏற்றும் போது அங்கு நிலவும் சூழ்நிலை மிக மிக முக்கியம் அதனால் தான் இதனை காடுகளில் போய் நமது முன்னோர்கள் செய்தார்கள் ஆனால் இன்றைய நிலைமையை நீங்கள் பாருங்கள் பெரிய ஹலில் சுமார் 1000 பேரை உட்கார வைத்து சக்கரத்தை ஏற்றுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அங்கு நடப்பது மிகப்பெரிய மோசடி. 

யோகாவில் சில கஷ்டமான செய்முறை இருக்கிறது அதனை செய்யும் போது உங்களை பார்ப்பதற்க்கு ஒருவன் செத்தால் எப்படி இருப்பான் அதே போல் இருப்பான் அந்த நேரத்தில் அவனை தொடக்கூடாது. கண்கள் எல்லாம் உள்வாங்கிக் கொண்டு சென்றுவிடும் உடம்பில் உயிர் இருப்பதற்க்கான அடையாளம் எதுவும் தெரியாது. அது திரும்பி அந்த ஆத்மா உள்வரும்போது மட்டுமே உயிர் வரும். இதனை செய்வதாக இருந்தால் அடர்ந்த காட்டில் மட்டுமே முடியும். அந்த நேரத்தில் தெய்வசக்தி இருந்தால் மட்டுமே நம்மால் அனைத்தையும் சமாளிக்கமுடியும்.


நண்பர்களே ஆன்மீகம் என்பது கடல் அதில் இறங்கிவிட்டால் அதன் ஆழம் எதுவரை இருக்கிறது என்பதை போய் பார்த்துவிட்டு வந்துவிடவேண்டும் அப்படி இல்லை என்றால் கடலை மணற்பரப்பில் இருந்து வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பது நல்லது. நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் கடலில் இறங்கலாமா? அல்லது வேடிக்கை பார்க்கலாமா?

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.




அமிர்தயோகம்



வணக்கம் நண்பர்களே!
                                      திருமண நிகழ்ச்சிகள் சில நல்ல யோகங்களில் நடத்தினால் திருமண தம்பதிகள் நீண்ட காலம் வாழ்வார்கள். இந்த யோகங்களில் அமிர்தயோகம் சிறந்த யோகமாக இருக்கும் இதில் நீங்கள் திருமணத்தை நடத்தலாம்.

ஞாயிற்றுக்கிழமையில் உத்திரம்,ஹஸ்தம், மூலம், உத்திராடம், திருவோணம்,  உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரம் வந்தால் அமிர்தயோகம்.

திங்கள்கிழமையில் ரோகினி, உத்திரம், மிருகசீரிஷம், புனர்பூசம், சுவாதி திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் வ்ந்தால் அமிர்தயோகமாகும்.

செவ்வாய்கிழமையில் ரோகினி, உத்திரம், மூலம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரம் வந்தால் அமிர்தயோகமாகும்.

புதன்கிழமையில் கார்த்திகை,பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரம் வந்தால் அமிர்தயோகம.

வியாழக்கிழமையில்அசுவினி, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி ஆகிய நட்சத்திரம் வந்தால் அமிர்த யோகமாகும்.

வெள்ளிக்கிழமையில் அசுவினி, ஹஸ்தம், மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரம் வந்தால் அமிர்த யோகமாகும்.

சனிக்கிழமையில் கார்த்திகை, ரோகிணி, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரம் வந்தால் அமிர்தயோகமாகும்.

இதை நீங்கள் காலாண்டர் மற்றும் பஞ்சாங்கதிலும் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் உங்களின் வசதிக்காக இதை தருகிறேன். அமிர்தயோகமாக பார்த்து திருமண தேதியை குறித்துக்கொடுங்கள். தம்பதிகளில் நீண்ட காலம் வாழ்வார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.




ஆன்மீக அனுபவங்கள் 21



வணக்கம் நண்பர்களே!
                              தீபாவளி பண்டிகையை நல்லபடியாக கொண்டாடி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு தீபாவளிக்கு வாழ்த்துக்களை சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது நண்பர்கள் என்னிடம் நீங்கள் சிவனை பற்றி ஆன்மீக அனுபவத்தில் எங்களுக்காக எழுதுங்கள் என்று கேட்டார்கள் சிவனைப்பற்றி சொல்ல எனக்கு அருகதை இருக்க என்பதை முதலில் யோசித்தேன் நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டதால் அவர்களுக்காக எழுதினேன் குறைகள் இருந்தால் அந்த சிவன் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். பெரிய ஆட்களைப்பற்றி பெரிய ஆட்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்னைப்போல் சோதிடக்காரன் எழுதினால் எந்தளவுக்கு வரும் என்பதை அந்த சிவன் தான் முடிவு செய்ய வேண்டும்.

நண்பர்கள் அனைவரும் கேட்டது இது தான் ஏன் நாங்கள் சிவனை இஷ்டதெய்வமாக எடுக்ககூடாது என்று தான் கேட்டார்கள். எதையும் நீங்கள் வரலாற்றை தான் பார்க்க வேண்டும் அதில் யாராவது சிவனை இஷ்டதெய்வமாக எடுத்துள்ளார்களா என்று பார்த்தால் யாரும் எடுத்து இருக்க மாட்டார்கள். மாந்தீரிகர்கள் கூட எடுக்க மாட்டார்கள் அனைவரும் சக்தியை தான் எடுப்பார்கள் ஏன் எடுக்கவில்லை அவரை எடுக்க முடியாதா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுவது உண்மை தான்.

சிவனைப்பற்றி நன்றாக அறிந்த பிறகு தான் சிவனை எடுக்கலாமா எடுக்க வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும். சிவன் என்பவர் ஐந்து முகத்தில காட்சி அளிப்பவர் அவரின் ஐந்து முகத்தையும் நீங்கள் தெரிந்து இருக்க வேண்டும். சிவன் முதலாவதாக காட்சி தருவது ருத்ரன் இரண்டாவதாக காட்சி தருவது காலபைரவர். மூன்றாவதாக காட்சி தருவது சச்சிதானந்தம் நான்காவதாக காட்சி தருவது சதாசிவம் ஐந்தாவதாக காட்சி தருவது பரபிரம்மம் இந்த ஐந்து நிலையில் தான் காட்சி கொடுப்பார்.

நாம் சிவனை எடுப்பது என்று முடிவு செய்தால் இந்த ஐந்து விதத்தில் தான் காட்சி தருவார். இந்த ஐந்தில் ஒன்றை எடுக்க வேண்டும்.

ருத்ரன்

சிவனுக்கு மிக உகந்த இடம் சுடுகாடு. ருத்ரன் முதல் ரூபம் என்பதால் மிக உயரந்த சக்தி வெளிப்படும். ருத்ரனாக வந்தால் அவன் வந்தவுடனே உங்களின் இரத்தத்தை தான் உறிஞ்சும் அதற்காகவே பல பலிகளை கொடுப்பார்கள். சிவன் பல நிலையில் வெளிப்பட்டாலும் அவன் முதல் முக்கிய தொழில் அழித்தல்.

நமது இரத்ததை உறிஞ்சுபவனை எடுத்துக்கொண்டு நாம் நடைமுறை வாழ்க்கையில் இருக்கமுடியுமா? அதாவது எந்த சக்தியை எடுத்தாலும் அதனை தன் உடம்பில் ஏற்றவேண்டும் அவ்வாறு ஏற்றுவதற்க்கு சிவனின் முக்கிய அம்சமான ருத்ரனை ஏற்றமுடியாது. ஒரு சிலர் அவனை தரிசித்துவிட்டு அப்படி விட்டுவிடுவார்கள் உடம்பில் ஏற்றமாட்டார்கள்.

இது எல்லாம் சுடுகாட்டில் இருந்து செய்தால் தான் அவனை தரிசிக்கமுடியும். சுடுகாட்டிற்க்கு போய் அதனை செய்வதற்க்கு நீங்கள் முறையான பயிற்சி பெற்று இருக்கவேண்டும். சாதாரணமான காரியம் இல்லை. ருத்தரனை எடுப்பவர்கள் உடலில் உள்ள தோல்களை பார்த்தால் பிளந்து இருக்கும் நீங்கள் பார்த்து இருக்கலாம் பல அகோரிகள் பல சந்நியாசிகள் உடம்பில் சாம்பலை பூசிக்கொண்டு செய்வதை நீங்கள் பார்த்து இருக்கலாம் அது ஏன் என்றால் ருத்ரனை எதிர்க்கொள்வது என்பது சாதாரண காரியம் கிடையாது அதைப்போல் சுடுகாட்டிற்க்கு சென்ற நீங்கள் செய்வதாக இருந்தால் நீங்கள் நிர்வாண நிலையில் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். உடலில் எந்த ஒரு தடங்கலும் இருக்ககூடாது.

நீங்களும் சுடுகாட்டில் போய் சிவமந்திரங்களை உரு ஏற்றலாம் அதற்கான வழிமுறைகள் உள்ளன நீங்கள் ஏதாவது இஷ்டதெய்வ பயிற்சி செய்திருந்தால் சொல்லுங்கள் அதற்கான வழிமுறைகளை சொல்லிதருகிறேன். நீங்கள் உரு ஏற்றி சிவனை தரிசனம் செய்யலாம்.

பொதுவாக சிவனுக்கு சொல்லும் மந்திரங்கள் சரியாக உச்சரிக்கபடவேண்டும் அப்படி உச்சரிக்கபடவில்லை என்றால் சிவனின் கோபத்திற்க்கு ஆளாக வேண்டும் அதனால் தான் உங்களுக்கு சொல்லுகிறேன் மந்திரங்கள் தவறாக உச்சரிக்காதீர்கள் தவறான மந்திரத்தை உரு ஏற்றாதீர்கள்.சிவனுக்கு மந்திரத்தை விட வாசிக்கும் இசை கருவி முக்கியமான ஒன்று. இசைக்கருவிக்கு சிவன் நம் வசம் வருவார்.


காலபைரவர்

             காலபைரவர் இவர் காத்தல் தொழில் செய்பவர் என்று அனைவராலும் சொல்லப்படுபவர். இவருக்கும் சுடுகாடு தான் வாசம். இவர் காவல் காப்பவர் இவரை நாம் எடுப்பதும் கஷ்டமான காரியம் தான் ஏன் என்றால் வீட்டை காப்பவரை வீட்டிற்க்குள் விடுவது தவறாக போகும் அதனால் இவரை எடுப்பதையும் விட்டுவிடுங்கள் இவரைப்பற்றி அதிகம் நான் உங்களுக்கு சொல்லவில்லை ஏன் என்றால் என்னை விட உங்களுக்கு தான் நன்றாக தெரியும் இவர் எந்த ஊரில் ரூம் போட்டு இருக்கிறார் அவருக்க என்ன சாப்பாடு கொடுத்தால் உங்களை தேடிவருவார் என்று நன்றாக உங்களுக்கு தெரிவதால் விட்டுவிடுகிறேன்.

நாய் நன்றியுள்ள விலங்கு தான் அதனால் அதனை வீட்டிற்க்குள் அனுமதித்தால் மிகப்பெரிய பிரச்சினையை அது ஏற்படுத்தும் வெளியில் வைத்து வழிபடுவது நல்லது. உங்கள் உடம்பில் ஏற்றினால் அது பிரச்சினையை ஏற்படுத்தும். இதனை வைத்து சில பேர் மந்திரங்களில் ஈடுபடுகிறார்கள் அது கண்டிப்பாக உடம்பில் ஏற்றி செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.


சச்சிதானந்தம்

இது நல்லதை செய்யும் இதனை வைத்து நல்ல செல்வவளங்கள் உங்களுக்கு  வரும். இதனை எடுப்பது கடினம் என்று பல பெரியவர்கள் சொல்லியுள்ளார்கள். நமக்கு யார் பெரியவர்கள் எல்லாம் சாமியார்கள்.நமது நண்பர்கள் அனைவரும் சாமியார்கள் தான் அதிகம் அவர்கள் சொல்லிதை வைத்து சொல்லுகிறேன்.

சதாசிவம்

          சதாசிவம் என்பது எந்த நேரத்திலும் சிந்தனையை சிவன் மேல் வைக்கும் நிலை இந்த நிலையில் வெளிப்படுவது கடினம் என்றும் சொல்லுகிறார்கள் ஆனால் ஒரளவு நல்ல பலனை தருகிறது. தியான நிலையில் இது கைகூடும்.

பரபிரம்மம்

          பரபிரம்மம் என்கின்ற நிலை படைப்பிற்க்காக உருவாக்கப்பட்ட நிலை இந்த நிலை வருவது கிடையாது என்றும் சொல்லுகிறார்கள் எடுக்கமுடியாது என்றும் சொல்லுகிறார்கள். நாம் எங்கே படைததல் செய்யபோகிறோம். அழிக்கிறது தானே நமது முதல் வேலை.

நான் கூறியது அனைத்தும் எளிதாக சொல்லியுள்ளேன். இதனைப்பற்றி சொல்லுவது என்பது தனியாக ஒரு பிளாக்யை ஆரம்பித்து சொல்லவேண்டும் அந்தளவுக்கு கடினமான ஒன்று மொத்தத்தில் சிவனை எடுப்பது கடினம். சிவனின் முதல் படைப்பான ருத்ரனை எடுப்பது பல அகோரிகள் மற்றும் நாகஸ் சன்னியாசிகள் செய்கிறார்கள் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை என்ன என்று நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை. சுடுகாட்டில் நின்றுக்கொண்டு அவர்கள் செய்யும் போது எது உண்மையான தெய்வம் என்பதை அந்த ருத்ரன் காட்டிக்கொடுக்கிறான் அவனிடம் எப்படி சரணடைய வேண்டும் என்பதையும் அவன் செய்கிறான் அந்த நிலை என்பது மிக உயந்த நிலை.

நீங்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்துக்கொண்டே சிவனின் முதல் வடிவமான  ருத்ரனை எடுக்கலாம் அப்படி எடுப்பதற்க்கு சரியான வழிகாட்டி ஒருவன் இருக்க வேண்டும் அப்படி ஒருவன் இருந்தால் நீங்கள் ஓடி அவனை பிடித்துக்கொள்ளுங்கள்.

அடுத்த பதிவில் சிவனின் ஐந்து நிலையிலும் நீங்கள் வாழுகின்ற வீட்டை வைத்து ஒரு பதிவு வரபோகிறது அது சோதிட தாகம் உள்ளவர்களுக்கும் நல்ல பதிவாக இருக்கும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



Monday, November 12, 2012

தீபாவளி நல்வாழ்த்துக்கள்



வணக்கம் நண்பர்களே !

 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்களின் சுற்றத்தாருக்கும் ஜாதக கதம்பம் வலைதளத்தின் மூலம் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, November 11, 2012

நட்சத்திர அமுத காலம்



வணக்கம் நண்பர்களே!
                             இப்பதிவில் அமுத காலத்தின் சிறப்புகள் பல உண்டு அதில் திருமண வாழ்வில் இந்த அமுத காலத்தின் சிறப்பு என்ன என்று இப்பதிவில் பார்க்கலாம்.

நட்சத்திர அமுத நேரம் ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் அமுத காலம் வரும் அதனை நீங்கள் பார்த்து செய்ய வேண்டும்.இதனை பஞ்சாங்கத்திலும் பார்த்துக்கொள்ளலாம்.

மாங்கல்யம் செய்தல்

திருமண நிகழ்ச்சியில் இந்து மத வழக்கப்படி திருமண மாங்கல்யம் செய்வது என்பது ஒரு நல்ல் நாளை பார்த்து செய்ய வேண்டும். பெண்ணுக்கு தாலி ஒரு அழகு தான் .எப்போதும் கணவன் தன்னுடன் இருக்கிறான் என்பதை ஞாபகப்படுத்தி கொண்டே இருப்பது போல இருக்கும்.

மாங்கல்யம் அந்த பெண்ணி்ற்க்கு கடைசி வரை நிலைக்க வேண்டும் என்றால் ஒரு நல்ல நாளை பார்த்து அந்த நாளில் அமுத நேரத்தில் தாலி செய்ய கொடுக்க வேண்டும்.

திருமணத்திற்க்கு மாங்கல்யம் செய்ய உகந்த காலம் அமுதகாலமாகும். இதனால் திருமண வாழ்க்கையில் எந்தவித குறையும் இல்லாமல் தம்பதிகள் சந்தோஷமாக நெடுங்காலம் வாழ்ந்திருப்பார்கள்.

சாந்தி முகூர்த்தம்

திருமணம் நடத்தும் தேதியை விட சாந்தி முகூர்த்தம் நடத்துவதற்க்கு நாள் குறிப்பது திருமண நிகழ்ச்சியில் முக்கியமான ஒன்று இந்த நிகழ்வு மூலம் தான் இருவருக்கும் இடையில் உடல் ரீதியாக உறவு ஏற்படுகிறது அதனால் நமது முன்னோர்கள் இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து இதனை சொன்னார்கள். இதனை நீங்கள் கண்டறிவது இருவருடைய ஜாதகத்தையும் வைத்து கண்டறியலாம்.

உங்களுக்கு நல்ல குழந்தைகள் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த அமுத காலத்தில் இணைந்தால் உடல் நலக் குறைகள் இல்லாமல் அறிவு உள்ள குழந்தைகள் பிறக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



ஆன்மீக அனுபவங்கள் 20



வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவங்கள் தொடரில் இப்பதிவில் நமது உடலில் நடைபெறும் மூச்சைப்பற்றி பார்க்கலாம்.

நமது உடலை நோக்கும் போது இந்த மூச்சு எப்படி உள்ளே சென்று வெளியில் வருகிறது என்று ஒரு நாள் யோசித்தால் போதும் நீங்கள் அரைவாசி ஞானியாக மாறிவிடுவீர்கள் அதில் அவ்வளவு அற்புதம் நிறைந்துள்ளது.

இதை எல்லாம் நாம் கவனித்து வந்தால் தான் நாம் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம் இதை எல்லாம் கவனிக்காமல் ஆன்மீகத்தில் நான் செல்லுகிறேன் என்று சொல்லிக்கொண்டு செல்லக்கூடாது.

இந்த மூச்சைப்பற்றி அதிகமாக சிந்திந்தவர்கள் இந்த உலகிலேயே சித்தர்கள் தான்  அவர்கள் ஆராய்ந்து பல விசயங்களை இதைப்பற்றி சொல்லியுள்ளார்கள். 

உடம்புக்குள் 72000 நாடி நரம்புகள் இருப்பதாக சொல்லியுள்ளார்கள். இந்த நாடிகளில் முக்கியமாக சில நாடிகளை சொல்லியுள்ளார்கள். இந்த நாடி நரம்புகளில் 24 நாடி நரம்புகள் மிகமுக்கியமானது என்றும் சொல்லியுள்ளார்கள். இதையும் 10 நாடி நரம்புகள் தனியாகவும் அடுத்த 10 நாடி நரம்புகள் தனியாகவும் பிரித்து வைத்துள்ளார்கள். மீதம் 4 நாடி நரம்புகளை இரண்டாகவும் பிரித்து வைத்திருக்கிறார்கள் முதல் பத்து நாடிகள் மேல் நோக்கியும் மீதி பத்து நாடிகள் கீழ் நோக்கியும் இருக்கும் இதை சுற்றி பாம்பு போல் நான்கு நாடிகள் சுற்றிக்கொண்டு இருக்கிறது என்றும் சொல்லியுள்ளார்கள்.

பத்து நாடியில் 3 நாடிகள் தான் முக்கியமானது என்றும் சொல்லியுள்ளார்கள் அந்த 3 நாடிகள் தான் நமது உயிர் அடங்கி இருக்கிறது என்றும் சொல்லியுள்ளார்கள் இதனைப்பற்றி அதிகம் சொல்ல வேண்டாம் ஏன் என்றால் ஏற்கனவே நமது தளத்திற்க்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைவு இதில் இது எல்லாம் எழுதினால் ஒருவரும் வர மாட்டார்கள் நான் மட்டும் எழுதிக்கொண்டு இருக்க வேண்டியது தான் இருந்தாலும் பரவாயில்லை யாருக்காவது இது பயன்படும் அல்லது உண்மையான ஒருவன் இதை பார்த்து என்னை தேடிவருவான். 

இப்பொழுது மூச்சைப்பற்றி பார்க்கலாம்.சூரிய நாடி, சந்திர நாடி என்று சுவாசத்தில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும் அதைப்பற்றி  எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்.

இந்த மூச்சு மூக்கின் இருதுவாரங்களிலும் நடைபெறுவதை சூரியகலை சந்திரகலை என்று பிரிப்பார்கள். மூச்சு சூரியகலையிலும் சந்திரகலையிலும் மாறி மாறி மூச்சு உடலுக்கு செல்கிறது இது வழக்கமாக ஏழரை நாளிகைக்கு ஒரு முறை மாறும்.

இந்த மூச்சு மட்டும் இப்படி சரியாக மாறி நடந்துகொண்டு இருந்தால் உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று நீங்கள் நம்பலாம். இதை எல்லாம் கவனிக்க நமக்கு நேரம் இருக்குமா என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது.கவனித்தால் ஆன்மீகத்தில் வெற்றி அடையலாம்.

இந்த மூச்சை நமக்கு தகுந்தவாறு மாற்றி்க்கொள்ளலாம். என்ன கதை விடுகிறாய் என்று கேட்கலாம் ஆனால் சித்தர்கள் இந்த கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் அவர்கள் விருப்பம் போல் மாற்றிக்கொள்ளுவது எப்படி என்று தெரிந்தவர்கள்.

பொதுவாக சூரியகலையில் நடைபெறும் போது அனைத்தும் வெற்றியை தரும். நீங்கள் மந்திரங்களை உரு ஏற்றும் போது சூரியகலையில் மூச்சு வந்தால் நீங்கள் உரு ஏற்றும் மந்திரம் எளிதில் உரு ஏறும். நீங்கள் சொல்லும் மந்திரம் வெற்றி அடையும்.

சூரியகலையில் மூச்சு நடைபெறும் போது மந்திரங்களை சொல்ல வேண்டும். இதையே நீங்கள் நடைமுறை வாழ்க்கையிலும் இதனை செய்து நீங்கள் வெற்றி அடையமுடியும். 

நீங்கள் ஒரு நபரை சந்தி்த்து ஏதோ ஒரு வேலையை உங்களுக்கு அவர் மூலம் நடைபெற வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த நபரை சந்திக்க செல்லும் போது சந்திர நாடியில் மூச்சு வருமாறு வைத்துக்கொண்டு செல்லுங்கள் அவரை பார்க்கும் போது சூரிய நாடியில் மூச்சை மாற்றிவிட வேண்டும் அவ்வாறு செய்யும் போது அந்த நபர் உங்களுக்கு சாதகமாக செய்வார். இதற்கு நீங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் அப்பொழுது மட்டுமே அது சாத்தியப்படும்.

கடும் குளிர் பிரதேசங்களில் நீங்கள் செல்லுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது நீங்கள் மூச்சை சூரிய நாடியில் மாற்றிக்கொண்டால் உங்கள் உடல் குளிரை தாங்கும் வண்ணம் மாற்றிக்கொள்ளும் இமயமலையில் உள்ள ரிஜிகள் எல்லாம் இதை செய்து கொண்டு தான் தியானத்தில் அமருவார்கள் அப்பொழுது மட்டுமே அங்கு அவர்களால் தியானம் செய்யமுடியும். இதைப்போல் நீங்கள் பாலைவனத்தில் இருந்தால் சந்திரகலையில் மாற்றிக்கொண்டால் உங்கள் உடல் வெப்பத்தை தாங்கும் வண்ணம் மாற்றிக்கொள்ளும்.

பொதுவாக நீங்கள் மந்திரங்களை உரு ஏற்றும் போது நீங்கள் சூரியகலையில் மாற்றிக்கொண்டு செய்யுங்கள் அப்பொழுது மட்டுமே அது உங்களுக்கு அந்த மந்திரம் பயன்படும் அப்படி இல்லை என்றால் அந்த மந்திரம் உங்களுக்கு எதிராக வேலை செய்ய ஆரம்பித்துவிடும். மாந்தீரிகம் செய்யும் போது மட்டுமே சந்திரகலையை பயன்படுத்துவார்கள் அப்பொழுது மட்டுமே மாந்தீரிகம் வெற்றி அடையும்.

நம் ஆட்கள் மந்திரங்களை சொல்லும் போது சந்திரகலையில் சொல்லிக்கொண்டு இருப்பார்கள் அந்த மந்திரம் அவருக்கு நன்மை செய்வதற்க்கு பதிலாக தீமை செய்யும் இதனை முதலில் நீங்கள் புரிந்து கொண்டாலே பல தளங்களில் நடத்திக்கொண்டு இருக்கும் கூத்து என்ன என்று உங்களுக்கு தெரியவரும். உங்களுக்கு ஆன்மீகத்தில் செல்லுவதற்க்கு அடிப்படை அனா ஆவான தெரி்ந்து இருக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே உங்களுக்கு எதனை செய்தால் வெற்றி அடையலாம் என்று தெரியும். 

அனா ஆவான கற்று கொடு்ப்பவன் தான் உங்களுக்கு மிக உயர்ந்த குரு. நீங்கள் இன்றைக்கு மிக உயர்ந்த படிப்பை படித்துவிட்டு பெரிய வேலையில் இருந்தாலும் உங்களுக்கு அனா ஆவான கற்று கொடுத்த முதல் வகுப்பு ஆசிரியருக்கு தான் நீங்கள் நன்றி கடன் படவேண்டும் ஏன் என்றால் உங்களுக்கு முதலில் கற்றுகொடுத்த எழுத்தை வைத்து தான் இன்றைக்கு இவ்வளவு படிப்பு படிக்கமுடிந்தது அதை அவர் கற்றுக்கொடுக்கவில்லை என்றால் நீங்கள் இந்தளவுக்கு உயரமுடியுமா? . 

முதல் வகுப்பு ஆசிரியர் அனா ஆவான கற்றுக்கொடுக்கும் போது கொஞ்ச எழுத்தை கற்று கொடுத்து இருப்பார் அதையே நீங்கள் மாஸ்டர் டிகிரியில் கூடுதலாக நிறைய எழுத்தை கற்று இருப்பீர்கள் ஆனால் எழுத்து என்பது ஒன்று தான் அந்த எழுத்தை தந்தவன் முதல் வகுப்பு ஆசிரியர் அதை வைத்து இன்றைக்கு கூடுதல் எழுத்தை படித்து இருக்கிறோம் இதை மட்டும் நீங்கள் மனதில் வைத்தால் உங்களால் உலகத்தில் பல ஞானிகளை நீங்கள் உருவாக்குமுடியும். எந்த கர்வமும் தலைக்கு ஏறாது.

உங்களுக்கு மூச்சை எப்படி மாற்றுவது என்பதை உங்கள் குரு உங்களுக்கு சொல்லிதருவார்.அதனை செய்து வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Saturday, November 10, 2012

திருமணமும் ராகு கேதுவும்



வணக்கம் நண்பர்களே திருமண நிகழ்ச்சியில் ராகு கேதுகள் ஏற்படுத்தும் தோஷத்தைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

திருமண வாழ்வில் இதுவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் லக்கனத்தில் ராகு அமர்ந்தால் ஏழாவது வீட்டில் கேது அமருவார். லக்கனத்தில் கேது அமர்ந்தால் ஏழாவது வீட்டில் நான் இருக்கிறேன் என்று ராகு அமருவார். இருவரும் சேர்ந்து திருமணத்தில் பிரச்சினையை ஏற்படுத்துவார்கள்.

இருவரும் திருமணத்தில் எப்பொழுதும் பிரச்சினையை ஏற்படுத்தமாட்டார்கள். அந்த தசா நடக்கும் போது பிரச்சினையை ஏற்படுத்துவார்கள். ராகுவும் கேதுவும் அமரும் வீட்டில் உள்ள பலனை கொடுப்பதால் அந்த வீட்டின் தசா நடந்தாலும் உஷாராக இருக்க வேண்டும்.

அனைத்து லக்கனத்திலும் ஒரு மாதிரி பலனை தராது லக்கனத்திற்க்கு தகுந்த மாதிரி பலனை தரும். ரிஷப லக்கனம்,கடக லக்கனம்,சிம்ம லக்கனம்,கும்ப லக்கனம் ஆகிய லக்கனத்தை கொண்டவர்களுக்கு நல்லது செய்யும். 

இருகிரகங்களும் பொதுவாக சந்தேகங்களை ஏற்படுத்தும் அதில் இருந்து பிரச்சினையை உருவாக்கி இருவரையும் பிரிய வைக்கும்.  இதில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

சோதிடர்களிடம் திருமணத்திற்க்கு ஜாதகத்தை எடுத்து காட்டினால் உங்களுக்கு ராகு கேது தோஷம் இருக்கிறது இப்பொழுது திருமணம் செய்யாதீர்கள் வயது கூடட்டும் அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிடுவார்கள். நீங்கள் அதனைப்பற்றி பயப்பட வேண்டாம். நீங்களாவே பரிகாரம் செய்துக்கொண்டு திருமணத்தை நடத்தலாம். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது எளிது.

ராகு கேதுவை பரிகாரம் செய்துவிட்டு திருமணத்தை நடத்தினாலும் நமக்கு தான் திருமணம் முடிந்துவிட்டதே இனிமேல் நமக்கு பிரச்சினையில்லை என்று அப்படியே அதனைப்பற்றி மறந்தாலும் இருவரும் சும்மா இருக்கமாட்டார்கள். திருமணவாழ்விலும் பிரச்சினையை உருவாக்குவார்கள் அதனால் அவ்வப்போது இருவரையும் வணங்கிவருவது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.