Followers

Wednesday, November 14, 2012

ஆன்மீக அனுபவங்கள் 22


வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவத்தில் சிவனைப்பற்றி பார்த்தோம் அல்லவா அதை நீங்கள் குடியிருக்கும் வீட்டோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டும் என்று சொன்னேன் அதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

உங்களின் வீட்டில் ஈசானிய மூலையில் ஈசன் வந்து நின்று பார்ப்பார் அவர் அப்படி நின்று பார்க்கும் போது எந்த உருவத்தில் வந்து பார்ப்பார்  என்று ஒரு சிலர் சொல்லுவார்கள். இதை வாஸ்துசாஸ்திரத்தில் கண்டுபிடிக்கமுடியாது.

உங்கள் வீட்டில் ஈசானிய மூலையில் ஈசன் ருத்ரன் வடிவாக வந்து நின்றால் நீங்கள் என்ன தான் வாஸ்துப்படி வீட்டை கட்டினாலும் வீடு தீ்க்கு இரையாகும். வீட்டில் ஏதாவது விபத்து வரும்.

உங்கள் வீட்டில் ஈசன் காலபைரவராக வந்து நின்றால் வீட்டில் உள்ளவர்கள் நோய்வாய்ப்பட்டு இறப்பார்கள்.

உங்கள் வீட்டில் ஈசன் சத்சிதானந்தமாக வந்து நின்றால் வீடு சுபிட்ஷமாக இருக்கும், உங்களின் வீட்டிற்க்கு பணவரவு வந்து கொண்டே இருக்கும்.

உங்கள் வீட்டில் ஈசன் சதாசிவமாக வந்து நின்றால் உங்களின் வீடு வசதியாக இருக்கும் அதே நேரத்தில் ஒரு கோவிலை கட்டி வைத்துக்கொண்டு இல்லறவாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பார்கள்.

உங்கள் வீட்டில் ஈசன் பரபிரம்மமாக வந்து நின்றால் எந்த வித முன்னேற்றமும் அந்த வீட்டில் இருக்காது.

இதனை உங்கள் வீட்டு தலைவரின் ஜாதகத்தில் நான்காம் வீட்டைக்கொண்டு கணிக்கலாம் என்று சொல்லுகிறார்கள். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

நண்பர்களே நாம் மக்களின் கண்களுக்கு சோதிடராக தெரியும் நம்மை சோதிடராக தான் பார்ப்பார்கள். நம்முடைய தரத்தை நாம் உயர்த்திக்கொள்ள வேண்டும் சோதிடத்தின் மூலமாகதான் அனைத்தையும் கண்டுபிடித்திருக்க வேண்டும் இந்த கருவி இல்லாமல் எங்கும் செல்லமுடியாது.

ஒரு சோதிடனுக்கு இது தான் தெரியும் என்கிற நிலைமை மாறி சோதிடனுக்கு அனைத்தும் தெரியும் என்ற நிலைக்கு உங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதை நேரத்தில் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாதீர்கள். உங்களை நேரில் சந்தித்தாலும் எதையும் வெளியில் காட்டிக்கொள்ள கூடாது. ஒரு சோதிடனாக இருப்பவனுக்கு அனைத்திலும் ஈடுபட்டு வெளியில் வரமுடியும் என்பதை மனதில் வையுங்கள் அதற்க்கான பயிற்சியை உடனே தொடங்கிக்கொள்ளுங்கள்.

சோதிடத்தை படிப்பவனுக்கு குரு கிரகத்தின் பலம் அதிகமாக இருக்கும் என்பதை மனதில் வையு்ங்கள் இது ஒன்று போதும் அதனை பயன்படுத்திக்கொண்டு மந்திரம், யோகா ,தியானத்தில் வென்று வரலாம்.

எனது நண்பர் சொன்னார் உனக்கு அனைத்திலும் ஈடுபாடு இருக்கும் போது மற்றவர்கள் மாதிரி யோகா தியானத்தை சொல்ல வேண்டியது தானே ஏன் அந்த தெய்வம் இந்த தெய்வம் என்று சொல்லுகிறாய் என்று கேட்டார்.

நண்பர்களே நாம் யோகா தியானம் என்று போகும் போது அதன் உண்மையான செயல்பாட்டை பார்த்தால் நீங்கள் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். ஏன் என்றால் உயிரோடு விளையாடக்கூடிய நிகழ்வு எல்லாம் அதில் இருக்கிறது அப்படி அதில் ஈடுபடும் போது ஒரு தெய்வசக்தியை வைத்துக்கொண்டு செய்தால் நல்லது உங்களின் உயிருக்கு அது உத்தரவாதம்.

இப்பொழுது நடைபெறும் யோகா தியானம் போன்ற வகுப்பில் சும்மா மூச்சு பயிற்சியை சொல்லிதருகிறார்கள் இவர்கள் முதலில் நல்ல சூழ்நிலை உருவாக்கிக்கொண்டு பிரணவ மந்திரத்தை ஆடியோவில் ஒடவிட்டுக்கொண்டு மைக்கில் நீங்கள் இப்பொழுது முதல் சக்கரத்தில் இருந்து அடுத்த சக்கரத்திற்க்கு சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்லுவது உண்மை தெரிந்தவன் அதில் இருந்து ஒடிவிடுகிறான் ஒன்று தெரியாதவன் மாட்டிக்கொண்டு பணத்தை இழக்கிறான் இப்படி தான் பல யோகா வகுப்புகள் போய்கொண்டு இருக்கின்றன்.

சக்கரத்தை ஏற்றுவது என்பது நடைமுறையில் அனைவருக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். அது உண்மை தானா என்றால்  தாம்பத்திய வாழ்க்கையில அதிகமாக ஈடுபட்டு இருப்பனுக்கு சக்கரம் மேலே ஏறாது ஆனால் நம்ம ஆட்கள் 60 வயது முதியவர்க்கு சக்கரத்தை ஏற்றுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சக்கரத்தை மேலே ஏற்றலாம் எப்பொழுது தெரியுமா உங்களிடம் அந்த தெய்வசக்தி நல்ல முறையில் இருக்கும்பட்சத்தில் உங்களின் குரு அதற்கு வழி செய்து கொடுப்பார்.

உண்மையில் குருவின் நேரடி பார்வையில் நீங்கள் பயிலுவது என்பது ஒருவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சக்கரத்தை மேலே ஏற்றும் போது அங்கு நிலவும் சூழ்நிலை மிக மிக முக்கியம் அதனால் தான் இதனை காடுகளில் போய் நமது முன்னோர்கள் செய்தார்கள் ஆனால் இன்றைய நிலைமையை நீங்கள் பாருங்கள் பெரிய ஹலில் சுமார் 1000 பேரை உட்கார வைத்து சக்கரத்தை ஏற்றுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அங்கு நடப்பது மிகப்பெரிய மோசடி. 

யோகாவில் சில கஷ்டமான செய்முறை இருக்கிறது அதனை செய்யும் போது உங்களை பார்ப்பதற்க்கு ஒருவன் செத்தால் எப்படி இருப்பான் அதே போல் இருப்பான் அந்த நேரத்தில் அவனை தொடக்கூடாது. கண்கள் எல்லாம் உள்வாங்கிக் கொண்டு சென்றுவிடும் உடம்பில் உயிர் இருப்பதற்க்கான அடையாளம் எதுவும் தெரியாது. அது திரும்பி அந்த ஆத்மா உள்வரும்போது மட்டுமே உயிர் வரும். இதனை செய்வதாக இருந்தால் அடர்ந்த காட்டில் மட்டுமே முடியும். அந்த நேரத்தில் தெய்வசக்தி இருந்தால் மட்டுமே நம்மால் அனைத்தையும் சமாளிக்கமுடியும்.


நண்பர்களே ஆன்மீகம் என்பது கடல் அதில் இறங்கிவிட்டால் அதன் ஆழம் எதுவரை இருக்கிறது என்பதை போய் பார்த்துவிட்டு வந்துவிடவேண்டும் அப்படி இல்லை என்றால் கடலை மணற்பரப்பில் இருந்து வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பது நல்லது. நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் கடலில் இறங்கலாமா? அல்லது வேடிக்கை பார்க்கலாமா?

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.




2 comments:

கார்த்திக் சரவணன் said...

நல்ல பகிர்வு... நன்றி...

rajeshsubbu said...

//* ஸ்கூல் பையன் said...
நல்ல பகிர்வு... நன்றி... */

தங்கள் கருத்துக்கு நன்றி.