Followers

Sunday, March 1, 2015

சனி தசா பகுதி 7


வணக்கம்!
          சனி தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு விருச்சிக லக்கினம். நான்காவது வீட்டு அதிபதியான சனிக்கிரகம் லக்கினத்தில் அமர்ந்து இருந்தது.

சனி தசா ஆரம்பித்த நேரத்தில் நிறைய பிரச்சினைகள் நிலம் வழியாக வந்தன. அவர் வாங்கி வைத்திருந்த நிலம் காரணமாக அவருக்கும் அவர் நிலம் வாங்கிய இடத்தில் உள்ளவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

அவர் வாங்கிய இடத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருந்தனர். தாழ்த்தப்பட்டவர்கள் எங்களுக்கு அந்த இடம் என்று சொன்னார்கள். உண்மையில் நண்பருக்கு சொந்தமான இடம் அது. சனி தசா சுயபுத்தியில் அவருக்கு இந்த பிரச்சினை கொடுத்தது.

கிராமம் என்பதால் அவரின் பிரச்சினையை பஞ்சாயத்து வழியாக தீர்க்கப்பட்டது. சனி என்பது தாழ்த்தப்பட்டவர்களை குறிக்கும் கிரகம். சனிக்கிரகம் சுயபுத்தியில் மட்டும் பிரச்சினையை கொடுத்தது. அதன் பிறகு வந்த அனைத்து புத்திகளும் அவருக்கு நல்லதை கொடுத்தது.

சுயபுத்தி பிறகு வந்த புத்தியில் அந்த பகுதியிலேயே அவருக்கு நிறைய நிலங்களை அமைத்துக்கொடுத்தது. சனிக்கிரகம் நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு இருந்ததால் அவருக்கு நிலம் அமைந்த இடம் தாழ்த்தப்பட்டவர்களின் பகுதியில் அமைந்தது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கிரக பாதிப்பு பரிகாரம்


வணக்கம்!
          கிரகங்களின் பாதிப்பிற்க்கு பரிகாரம் என்ற பகுதியில் ஏற்கனவே ஒரு கருத்தைப்பற்றி பார்த்தோம். அடுத்து ஒரு கருத்தைப்பற்றி பார்க்கலாம். கிரகங்களின் பாதிப்பு என்ற பகுதியில் வரும் கருத்துக்கள் ஒன்றுமே இல்லாமல் வாழ்க்கை வெறுத்து போய் வாழும் மனிதர்களுக்காக எழுதும் ஒரு பகுதி. வெறுப்பு மட்டுமே எஞ்சிய நிலையில் உள்ளவர்களுக்கு இது பயன்படும். நல்ல நிலையில் இருப்பவர்கள் இதனை பயன்படுத்தவேண்டாம். பிரச்சினை என்று வரும்பொழுது இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஆடம்பரமாக வாழ நினைக்காதீர்கள். எளிமையாக இருங்கள். உங்களை ஆடம்பரமாக மாற்றிக்கொண்டால் உங்களுக்கு வரும் நல்ல வாய்ப்பு கூட தவறுவதற்க்கு வாய்ப்பு அதிகம் இருக்கும்.

எனக்கு ஏற்பட்ட கஷ்டமான சூழ்நிலையால் எளிமையாக இருப்பது தான் சிறந்த வழி என்பதை கற்றுக்கொண்டேன். நாம் படித்த படிப்பு மற்றும் சேர்த்த பணம் கற்ற வித்தை அனைத்தும் நம்மிடம் இல்லாமால் இருந்தால் எப்படி இருப்போமோ அந்த நிலையை மனதிற்க்குள் கொண்டு வந்தால் எளிமையாக இருக்கலாம்.

எளிமையாக இருந்தால் நம்மிடம் ஒன்று இல்லை என்று மக்கள் நினைப்பார்கள். அவர்கள் நினைத்தால் நினைக்கட்டும் என்று இருந்துவிடுவது நல்லது.

பொதுவாக நான் எளிமையாக இருப்பதை பார்த்துவிட்டு பல நண்பர்கள் என்னிடம் ஒன்றும் இல்லை கருதுவார்கள். அதாவது இவர் ஆன்மீகத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது என்று  நினைப்பார்கள்.ஆன்மீகத்திற்க்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை என்று கூட நினைப்பார்கள். அதனைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை காரணம் நம்மிடம் இருக்கும் எளிமை  இன்னும் பல மடங்கு உயர்த்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எளிமையாக இருக்கும்பொழுது எந்த கிரகங்களும் உங்களை பாதிப்பதில்லை. எந்த வித சிக்கலும் உங்களுக்கு வரபோவதில்லை.வறுமையாக இருப்பது எளிமையாக இருப்பது அல்ல. எளிமையாக இருப்பது என்பது உங்களிடம் எத்தனை விசயங்கள் இருந்தாலும் அதனை பெரிதாக கருதாமல் இருப்பது. அதனை வெளியில் அப்பட்டம் பாேட்டு காட்டாமல் இருப்பது தான் எளிமை.

நீங்கள் எளிமையாக இருக்கும்பொழுது உங்களுக்கு பலமடங்கு அதிக சக்தியை இறைவன் கொடுப்பார். அந்த சக்தி உங்களின் நிலை பலமடங்கு மாற்றிவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, February 28, 2015

சனி தசா பகுதி 6


வணக்கம்!
          என்னிடம் ஒருவர் வந்து ஜாதகம் பார்க்க வந்திருந்தார். அவரின் தந்தைக்கு ஜாதகம் பார்க்கவேண்டும் என்று சொன்னார். அவரின் ஜாதகத்தையும் என்னிடம் கொடுத்தார்.

தந்தைக்கு சனிதசா நடந்துக்கொண்டிருந்தது. பையனுக்கு ராகு தசா நடந்துக்கொண்டிருந்தது. அவரின் தந்தைக்கு சனி லக்கினத்தில் அமர்ந்து தசாவை நடத்திக்கொண்டிருந்தது. சிம்ம லக்கினத்தில் சனி அமர்ந்து இருக்கிறது. சனி தசா ஆரம்பித்த காலத்தில் இருந்து அவர் நோய்யில் படுத்துவிட்டார். பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுகையாவிட்டார். 

சிம்மத்தில் சனி அமர்ந்தாலே மிகப்பெரிய அளவில் நன்மையை எதிர்பார்க்க முடியாது.சனி லக்கினத்தோடு சம்பந்தப்பட்ட காரணத்தால் அவருக்கு பக்கவாதத்தை ஏற்படுத்திவிட்டது. நான் அவரின் ஜாதகத்தை பார்த்துவிட்டு கொஞ்ச நாளில் இறந்துவிடுவார் என்று சொன்னேன்.

லக்கினத்தில் சனி அமர்ந்து அந்த தசா நடந்த காரணத்தால் அவருக்கு நோயையும் கொடுத்து அவருக்கு மரணத்தை கொடுத்துவிட்டது.லக்கினத்தில் அமர்ந்து ஒரு தசா நடந்தால் அந்த தசா பெரும்பாலும் மரணத்தை தரும். சனி தசா அவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோயையும் கொடுத்து படுத்த படுகையாக மாற்றி கடைசியில் கொன்றும்விட்டது.

லக்கினத்தில் சனி அமர்ந்து தசா நடத்தினால் சம்பந்தப்பட்ட நபர் தினந்தோறும் வழிப்பாட்டை செய்துவரவேண்டும். அதே நேரத்தில் திருகடையூர் சென்று இறைவனை வருடத்திற்க்கு ஒரு முறை தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!
          . கிரகங்களின் தாக்குதல் என்ற பதிவில் நமது பெயரில் இருக்கும் அனைத்தையும்  நமது குடும்ப உறுப்பினர் பெயரில் மாற்றினால் நமக்கு பாதிப்பு இருக்காது என்று சொல்லி இருந்தீர்கள்.

இதில் எனக்கு ஒரு சந்தேகம். 

1. கிரகங்களின் பாதிப்பு என்பது நமது ஜாதகத்தை பொருத்து அமைகிறது. அதாவது நமது முன் ஜென்ம வினைப்பயன் அதை அனுபவித்துதான் ஆகவேண்டும். நமது சொத்துக்களையோ அல்லது வங்கி கணக்கையோ நமது குடும்ப உறுப்பினர் பெயருக்கு மாற்றினால் நாம் எப்படி கிரகங்களின் பாதிப்பில் இருந்து தப்ப முடியும்?

2. அப்படி குடும்ப உறுப்பினர் பெயருக்கு மாற்றிவிட்டால் அவருக்கும் அந்த பாதிப்பு ஏற்படும் அல்லவா?.அதை எவ்வாறு தடுப்பது?



          முன்ஜென்மத்தின் வினையை அனுபவிக்கவேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். முன்ஜென்மத்தின் வினையை குறைப்பதற்க்கு தான் கோவில்கள் இருக்கின்றன. அதனை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

உங்களின் குடும்பத்தினர்களின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ஜாதங்களில் ஏதாவது ஒரு ஜாதகத்தில் நல்ல கிரகங்கள் நிலை தென்படும். அவரின் பெயருக்கு மாற்றினால் அவருக்கு பிரச்சினை ஏற்படாது. எப்படிப்பட்ட மோசமான நிலையிலும் நம்மை காப்பாற்ற கடவுள் செய்யும் மாற்று ஏற்பாடு தான் ஒருவருக்கு நல்ல கிரக நிலையை அமைப்பது.

நாம் ஒரு சந்நியாசி போல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்பொழுது நமக்கு வரும் பாதிப்பு குறையும். நம்மிடம் ஒன்றும் இல்லை எனும்பொழுது வரும் அடியும் குறைவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது.

பொதுவாக நல்ல வாழ்ந்த குடும்பங்கள் எல்லாம் இன்று கடுமையான வறுமையில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு சொத்து இருக்கும் ஆனால் அதனால் வருமானம் இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கூட இப்படிப்பட்ட வேலை செய்துக்கொண்டு வழிபாட்டு முறைகளை பின்பற்றி வரும்பொழுது அந்த குடும்பங்களும் நல்ல முறையில் வாழமுடியும் என்பதற்க்கு தான் இந்த ஒரு வழியை சொன்னேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 27, 2015

கோவில் தரிசனம்


வணக்கம்!
         நண்பர் கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள் நிறைய கேள்விகள் கேட்ருந்தார். முதல் கேள்வியாக அதிகமாக கோவிலுக்கு செல்லுகிறீர்கள் அது எதனால்?

நமது ஜாதககதம்பத்தின் நண்பர்களை அழைத்துக்கொண்டு தான் கோவிலுக்கு செல்லுகிறேன். எத்தனை நாள் தான் பதிவில் மட்டும் சொல்லிக்கொண்டு இருப்பது. நேரடியாக பல கோவில்களுக்கு செல்லும்பொழுது பல நல்ல விசயங்களை அவர்களுக்கு புகுத்த முடிகிறது.

நேற்றுக்கூட கோயம்புத்தூரை சேர்ந்த நண்பர் என்னை அழைத்துக்கொண்டு ஆணைக்கட்டி மலைப்பகுதிக்கு சென்றார். அந்த இடங்களை பார்த்துவிட்டு மீண்டும் திருப்பூர் வந்தேன்.

ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும்பொழுது யாராவது ஒரு நண்பர் ஏற்பாட்டில் தான் சென்றுவருகிறேன். இதன் வழியாக உங்களுக்கும் தெரிவிப்பது என்ன என்றால் நீங்களும் கோவிலுக்கு செல்லும்பொழுது என்னை கூப்பிடுங்கள். அந்த நேரத்தில் ஒய்வாக இருந்தால் நான் வருகிறேன்.

பதிவில் சொல்லமுடியாத விசயங்களை அந்த ஆன்மீகப்பயணத்தில் பகிர்ந்துக்கொள்வதற்க்கு வாய்ப்பாக அமைகிறது. இனி அதிக பயணங்கள் இருக்கும். ஒரு சில நண்பர்களை நான் கூட வாருங்கள் கோவிலுக்கு சென்று வரலாம் என்று கூப்பிடுவேன். அந்த நாளில் மொபைல் போனை சைலண்டில் போட்டுவிட்டு தூங்கிவிடுவார்கள். அப்படியும் இருக்கின்றார்கள்.

ஜாதககதம்பத்தில் தொழில் நண்பர்கள் பெரும்பாலும் கோவில் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு அதிகம் ஏற்பாடு செய்து கூப்பிடுவார்கள். அவர்களோடு சென்று வருவது தான் அதிகம். ஒவ்வொரு பயணத்திலும் பல அற்புதவிசயங்கள் என்னோடு வருபவர்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மூலிகை குளியல்


வணக்கம் !
          ஒவ்வொரு நாளும் நாம் பலரின் கண்ணில் படுகிறோம். அப்படி அவர்களின் கண்ணில் படும்பொழுது அவர்களின் பார்வை நம்மீது விழுகிறது. அவர்களின் பார்வை நல்ல பார்வையாக இருந்தால் நமக்கு நல்லது. பிறரின் பார்வை தீயபார்வையாக நம்மீது பட்டால் நமக்கு பிரச்சினை வரும். நமது சூட்சமசரீரம் கெடுகிறது.

சூட்சமசரீரத்தை பாதுகாக்க நான் பல்வேறு கருத்துகளை நமது ஜாதககதம்பத்தில் சொல்லிவருகிறேன். அதனை எல்லாம் நீங்கள் கடைபிடித்து வருகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். தொடர்ந்து பல்வேறு கருத்துகளை நாம் பார்த்து வருகிறோம். 

சூட்சம சரீரம் கெட்டால் நல்ல உடல்வலி மற்றும் தலைவலி நமக்கு ஏற்படும்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதை பார்க்கலாம். ஒரு பானையில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து அந்த தண்ணீருக்குள் வேப்பிலை ஆடாதொடா இலை நொச்சி இலை ஆர் எஸ் பதி இலை போன்றவற்றை போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை எடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து குளியுங்கள்.

நான் சொன்ன இலைகள் கிடைக்கவில்லை என்றால் ஏதாவது ஒரு இலை கிடைத்தால் கூட போதுமானது. அதனை மட்டும் சுடுதண்ணீரில் போட்டு குளிக்கலாம். வேப்பிலை பரவலாக கிடைக்ககூடிய இலை தான் அதனை கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

நான் வாரம் ஒரு முறை இந்த குளியலை குளிப்பது உண்டு. கிராமத்தில் அனைத்து இலைகளும் கிடைப்பதால் நான் குளிப்பது உண்டு. சுக்கிரனுக்கு மூலிகை குளியலைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிருக்கிறேன். அதற்கு கூட இந்த குளியலை செய்யலாம். இந்த குளியலை குழந்தைகளுக்கு கூட நீங்கள் செய்யலாம். வாரம் ஒரு முறை இந்த குளியலை குடும்பத்தோடு செய்து வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, February 26, 2015

சனி தசா பகுதி 5


வணக்கம் !
          சனிதசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். சனி தசா நடந்தால் பெரும்பாலும் சளி தொல்லையால் அவதிப்படுவது நேரிடும். சனி என்றாலே சளி தான் அதிகம் இருக்கும்.

சனிக்கிரகம் தான் நமது உடலில் உயிரை பிடித்து வைத்திருக்கிறது என்பார்கள். மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்யும்பொழுது கூட ஒருவருக்கு சளித்தொல்லை இருக்கிறதா என்று தான் பார்ப்பார்கள். சளித்தொல்லை இல்லை என்றால் விரைவில் குணமாகுவார் என்று சொல்லுவார்கள்.

சளித்தொல்லை உங்களுக்கு சனிதசாவில் ஏற்படும். சளித்தொல்லை தசா முழுவதும் இருந்துக்கொண்டே இருக்கும். சளித்தொல்லை இருந்தால் உங்களின் உடலைப்போட்டு உருக்கி எடுத்துவிடும். ஒருவருக்கு சனிதசா நடந்தது என்றால் அவரை பார்த்தே தெரிந்துக்கொள்ளமுடியும்.

பொதுவாக அனைவருக்கும் சளித்தொல்லை ஏற்படாது. பெருமான்மையானவருக்கு சளித்தொல்லை சனிதசாவில் ஏற்படும். ஒரு சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட தொந்தரவு இருக்கும்.

உங்களின் ஜாதகத்தில் சனிக்கிரகம் நீர்ராசியில் அமைந்தால் கண்டிப்பாக சளித்தொல்லை ஏற்படும். சளித்தொல்லைக்கு மற்றும் சனித்தொல்லைக்கு சூப் பரிகாரத்தைப்பற்றி பழைய பதிவில் சொல்லியுள்ளேன் அதனை பின்பற்றி வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு