Followers

Saturday, February 28, 2015

கேள்வி & பதில்


வணக்கம்!
          . கிரகங்களின் தாக்குதல் என்ற பதிவில் நமது பெயரில் இருக்கும் அனைத்தையும்  நமது குடும்ப உறுப்பினர் பெயரில் மாற்றினால் நமக்கு பாதிப்பு இருக்காது என்று சொல்லி இருந்தீர்கள்.

இதில் எனக்கு ஒரு சந்தேகம். 

1. கிரகங்களின் பாதிப்பு என்பது நமது ஜாதகத்தை பொருத்து அமைகிறது. அதாவது நமது முன் ஜென்ம வினைப்பயன் அதை அனுபவித்துதான் ஆகவேண்டும். நமது சொத்துக்களையோ அல்லது வங்கி கணக்கையோ நமது குடும்ப உறுப்பினர் பெயருக்கு மாற்றினால் நாம் எப்படி கிரகங்களின் பாதிப்பில் இருந்து தப்ப முடியும்?

2. அப்படி குடும்ப உறுப்பினர் பெயருக்கு மாற்றிவிட்டால் அவருக்கும் அந்த பாதிப்பு ஏற்படும் அல்லவா?.அதை எவ்வாறு தடுப்பது?



          முன்ஜென்மத்தின் வினையை அனுபவிக்கவேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். முன்ஜென்மத்தின் வினையை குறைப்பதற்க்கு தான் கோவில்கள் இருக்கின்றன. அதனை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

உங்களின் குடும்பத்தினர்களின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ஜாதங்களில் ஏதாவது ஒரு ஜாதகத்தில் நல்ல கிரகங்கள் நிலை தென்படும். அவரின் பெயருக்கு மாற்றினால் அவருக்கு பிரச்சினை ஏற்படாது. எப்படிப்பட்ட மோசமான நிலையிலும் நம்மை காப்பாற்ற கடவுள் செய்யும் மாற்று ஏற்பாடு தான் ஒருவருக்கு நல்ல கிரக நிலையை அமைப்பது.

நாம் ஒரு சந்நியாசி போல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்பொழுது நமக்கு வரும் பாதிப்பு குறையும். நம்மிடம் ஒன்றும் இல்லை எனும்பொழுது வரும் அடியும் குறைவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது.

பொதுவாக நல்ல வாழ்ந்த குடும்பங்கள் எல்லாம் இன்று கடுமையான வறுமையில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு சொத்து இருக்கும் ஆனால் அதனால் வருமானம் இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கூட இப்படிப்பட்ட வேலை செய்துக்கொண்டு வழிபாட்டு முறைகளை பின்பற்றி வரும்பொழுது அந்த குடும்பங்களும் நல்ல முறையில் வாழமுடியும் என்பதற்க்கு தான் இந்த ஒரு வழியை சொன்னேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: