Followers

Saturday, February 4, 2012

சனிஸ்வரன்



இந்த பதிவில் நாம் பார்க்க போவது எல்லாம் இடத்திலும் பிரபலமானவர். இவரின் பேரை கேட்டாளே அனைத்து மனிதனும் நடுங்கிவிடுவான். வாழ்க்கை என்ன என்றால் என்று கற்றுகொடுப்பவரைப் பற்றி பார்க்கபோகிறோம். ஒருவன் எவ்வளவு தான் ஆடம்பரத்தில் இருந்தாலும் அவனை துன்பம் என்ன என்றால் என்று உணரவைப்பவனை தான் பார்க்க போகிறோம். அவன் யாரும் அல்ல அவன் தான் ஈஸ்வரன் பட்டம் வாங்கிய சனிஸ்வரன்.

இவர் அரசனை ஆண்டியாகவும் ஆண்டியை அரசனாகவும் மாற்றுபவர். மனிதனுக்கு துன்பம் என்றால் என்ன என்று புரியவைப்பார். மனிதர்கள் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் ஒரு நேரத்தில் ஜாதகத்தை கையில் எடுப்பதற்க்கும் இவர்தான் காரணம்.

நீங்களே பார்த்து இருப்பீர்கள் பல நாட்டு மன்னர்கள் தன் மக்களிடத்தில் அரசனாக வலம் வந்தவர்கள் அந்த மக்களால் அடித்து கொன்றுபோட்டு இருப்பார்கள் அல்லது வேறு ஏதாவது விதத்தில் துர்மரணம் அடைந்து இருப்பார்கள் அதற்கு எல்லாம் காரணம் வகிப்பவர் சனி பகவான் தான்.

ஒரு மன்னர் எவ்வளவு வசதி வாய்ப்பு உடன் இருந்திருப்பார்கள். எத்தனை வேலை ஆட்கள் எத்தனை பணவசதி பலம் அனைத்து பொருட்களும் தங்கத்தில் இருக்கும் இவ்வளவு வசதி வாய்ப்பு உள்ளவரையும் தெருவில் கொண்டுவந்து விடுபவர் சனிபகவான் தான்.

இவர் அரசனை மட்டும் இல்லை அனைத்து மனிதனையும் தண்டிப்பவர். இவரிடம் எந்த மந்திரியின் சிபாரிசும் எடுப்படாது. மனிதன் பிறப்பு எடுப்பதே கர்மத்தை தொலைப்பதற்க்குதான் அதனால் இவரின் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது. இந்த உலகமே இவரின் பிடியில் தான் உள்ளது.

ஜாதகத்தில் காய்களை நகர்த்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர் சனிபகவான் தான். ஜாதகத்தில் ராஜகிரகம் என்று அழைப்பவர்களில் ஒருவர் இவர். இவரைப்பற்றி நீங்கள் தெரிந்தாலே 50 சதவீத பலன் முடிந்துவிடும்.

இவரைப்பற்றி இந்த முன்னுரை போதும் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் இவரை பற்றி தான் பல பதிவில் பார்க்க போகிறோம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.


No comments: