Followers

Thursday, February 23, 2012

பலகரை ஆருடம்



ஆருடம் அந்த காலத்தில் கடிகாரம் எல்லாம் இருக்காது மனிதர்களின் நிழல் வைத்து மணி என்ன என்று கூறுவார்கள் அந்த மாதிரி உள்ள காலத்தில் பிறக்கும் குழந்தையின் ஜனன நேரத்தை எடுப்பது மிகவும் கடினம் ஜனன நேரம் இருந்தால் தான் ஜாதகம் எழுதலாம். அப்பொழுது மக்கள் அனைவரும் எப்படி ஜாதக பலன் தெரிந்துக்கொண்டார்கள். அப்பொழுது ஊருக்கு ஊர் சோதிடர்கள் இருந்தார்கள் நீங்கள் எதுவும் எடுத்துக்கொண்டு செல்லதேவையில்லை நீங்கள் சென்றாலே உங்கள் பலன்களை அவர்கள் கூறிவிடுவார்கள் .

அவர்கள் எவ்வாறு பலன்கள் கூறினார்கள் என்று பார்த்தால் அவர்கள் கூறுவது ஆருடம். ஆருடம் என்பது ஒரு முறை நீங்கள் சென்ற நேரம் அல்லது வாங்கி சென்ற வெற்றிலைகளை வைத்து அவர்கள் பலன்கள் கூறுவார்கள் அப்படியை இல்லை என்றாலும் உங்களை சோழி உருட்ட சொல்லி பலன்கள் கூறுவார்கள்.

அந்த வகையில் வந்ததுதான் பலகரை ஆருடம் இதனைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம் ஆருடம் சொல்லுவது நல்ல பக்தியுடன் இருந்தால் தான் ஆருடம் பலிக்கும். சோதிடம் பார்க்க வருபவர்களை அவர்களின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தை நினைத்துக் கொண்டு சோழியை உருட்டசொல்லுங்கள் வரும் எண்ணிக்கையை வைத்து ஆருடம் கூறலாம். ஆருடம் பார்க்க வருபவர்கள் ஏதாவது ஒரு செயல் நடைபெறுமா அல்லது நடைபெறாதா என்று தான் கேட்பார்கள். அந்த செயலையும் மனதில் நினைத்து கொண்டு உருட்ட சொல்லுங்கள்.

பலகரையில் 1 என்று வந்தால் அதாவது அந்த காய் ஒன்று மட்டும் நிமிர்ந்திருந்தால் மனதில் நினைக்கும் காரியம் நடைபெறும். உற்றார் உறவினர்கள் விருந்துக்கு வருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்
கடின உழைப்பினால் முன்னேறுவார்கள். சோம்பேறி தனம் இவரிடம் இருக்காது. நீதி நேர்மையாக இருப்பார் அதனாலே விரோதிகளை சம்பாதிப்பார். இவர் அரசாங்க வேலையில் பணிபுரிய ஏற்றவர். இவர் தவறு செய்யமாட்டார் செய்தால் மாட்டிக்கொண்டுவிடுவார். மருத்துவராகவும் இருக்க வாய்ப்புள்ளது. கண் தலை சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.
இப்படி சொல்லுங்கள்.
என்ன நீங்களும் ஆருடத்தில் கலக்க போகிறீர்களா கலக்குங்கள் வாழ்த்துக்கள் மீதி அடுத்த பதிவில் எழுதுகிறேன் அதுவரை பொறுமை.

அடுத்ததாக நாம் இந்த பதிவுகள் பக்கம் வந்ததே நாமும் எல்லாம் பதிவுகளையும் படிப்பதற்க்காகதான் ஒவ்வொரு பதிவையும் பார்த்து படித்ததிலிருந்து நாமும் பதிவுகளை எழுதவேண்டும் என்று எண்ணி பதிவுகளை எழுத தொடங்கினேன்.

இன்று பல பேர் அதாவது 50 பேர்கள் என்னுடைய பதிவுகளை படிக்க தினமும் வருகிறார்கள் அதனை கணக்கில் கொண்டு நானும் தினமும் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் வேலை பளு காரணமாக தினமும் எழுத முடியவில்லை. முடிந்தவரை எழுதுகிறேன்.

இலவச சோதிட ஆலோசனையும் தொடர்ந்து தந்துக்கொண்டு உள்ளேன் நிறைய பேர் என்னுடைய முகவரிக்கு அனுப்புகிறார்கள். வரட்டும் அதில் நான் அனுப்பும் பலன் மிக குறைவுதான். அப்பொழுதுதான் நான் எல்லாருக்கும் பதில் அனுப்ப முடியும். பதில் கிடைக்கவில்லை என்று ஒரு சிலர் எனக்கு 4 அல்லது 5 email க்கு மேல் எழுதி கேட்கிறார்கள் பலன் வரவில்லை என்று கொஞ்சம் பொறுமை காத்திருங்கள். அனைவருக்கும் பலன்களை அனுப்புகிறேன்.

சிலபேர் என்னிடம் தொடர்பு கொண்டு கட்டண சோதிட ஆலோசனை உண்டா என்று கேட்கிறார்கள். கட்டண சோதிட ஆலோசனை உண்டு அதனைப்பற்றி விபரங்களை வேறு சமயத்தில் பார்க்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

2 comments:

Unknown said...

very good and looking forward to further posts.
keep the goodwork.
Surya

rajeshsubbu said...

//* Surya said...
very good and looking forward to further posts.
keep the goodwork.
Surya *//

வாருங்கள் நண்பரே தங்கள் நண்பர்களிடமும் இந்த பிளாக்கை பற்றி கூறுங்கள்