Followers

Wednesday, September 25, 2013

குடும்பம்


வணக்கம் நண்பர்களே!
                    இது கலியுகம். என்னிடம் ஒன்றும் இல்லாத நேரத்தில் என்னிடம் இருந்தவர்கள் ஒரு சில நண்பர்கள் மட்டுமே. இன்று பல பேர்கள் அதாவது உறவினர்கள் என்னை தேடி வருகின்றார்கள். 

ஒன்றும் இல்லாத நேரத்தில் எந்த உறவினர்களும் என்னை கண்டுக்கொண்டது கிடையாது. ஆனால் இன்று பல பேர்கள் நெருங்கி வரதுவங்கிவிட்டனர். அவ்வளவு எளிதில் அவர்களிடம் நான் மாட்டிக்கொள்வது கிடையாது. ஏன் நெருங்கி வருகின்றனர் என்றால் அவர்களுக்கு இருக்கும் பிரச்சினையை தீர்ப்பதற்க்கு வருகிறார்கள். தினமும் என்னை தொடர்புக்கொண்டு நலம் விசாரிப்பது இப்படி தான் தொடர்கிறது. 

எனது குருவிடம் கேட்டேன் என்ன சாமி இப்படி என்னை நெருங்கி வருகிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் அவர்களுக்கு என்ன வேணுமோ அதனை செய்துக்கொடுத்துவிடு என்றார்.

எனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதாவது உறவினர்களுக்கு குரு தான் உதவி செய்கிறார். அவர்களின் பிரச்சினையை ஒவ்வொன்றாக அவர் தான் தீர்த்துவருகிறார். எனது குரு எனக்கு அறிமுகமானதே எனது குடும்பத்தில் உள்ள நபர்கள் வழியாக தான். அதனால் நான் எதனையும் கண்டுக்கொள்வதில்லை. 

குடும்ப உறவினர்கள் குருவோடு தொடர்பு உண்டு.இப்பொழுது நீங்கள் நினைக்கலாம். எல்லாம் சுயநலமாகவே இருக்கின்றனர் என்று நினைக்கலாம். இதில் ஒரு விசயம் இருக்கின்றது அதனை சொல்லுகிறேன் பாருங்கள். குரு சந்நியாசம் வாங்கியுள்ளார் அவரின் குடும்பத்தோடு தொடர்பு கிடையாது. எனக்கு குரு அமைந்ததே குடும்ப உறுப்பினர் வழியாக தான் அமைந்தது. அதனால் குடும்ப உறுப்பினர்க்கு முன்னுரிமை தரப்படுகிறது.

குரு சொல்லுவார். நீ ஒருவன் ஆன்மீகவாதியாக வருகின்றாய் என்றால் உன் குடும்பத்தில் முன்பரம்பரையில் ஒருவர் உன்னைப்போல் இருந்திருப்பார். உனக்கு பிறகு பல சந்ததினர்க்கு பிறகு உன்னைப்போல் ஒருவர் பிறப்பார். இது ஒரு சுழற்சி என்றும் சொல்லியுள்ளார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Tuesday, September 24, 2013

சிவன் என்றாலே வலி


வணக்கம் நண்பர்களே!
                     வெளிநாடுக்களுக்கு செய்யும் வேலையை நமது அம்மனை வைத்து மட்டும் செய்தால் போதாது அம்மனோடு பல பேரை அனுப்ப வேண்டியுள்ளது. அப்படி அனுப்பும் பொழுது அதிகமாக சிவனின் ரூபங்களை வைத்து இந்த வேலையை செய்வோம். 

சிவனை வைத்து செய்யும்பொழுது நாம் சந்நியாசிகளாக இருந்தால் நல்லது. நான் சந்நியாசி தீட்சை வாங்கவில்லை. சிவனை வைத்து செய்வதால் சிவன் பல வழிகளில் தொந்தரவை தருவார். பல அடிகளை நான் வாங்கியுள்ளேன். இப்பொழுது பல வெளிநாட்டு கம்பெனிகள் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு செய்ய வேண்டியுள்ளதால் சிவனை அழைக்க வேண்டியுள்ளது. 

சிவனிடம் அடிவாங்கிக்கொண்டு செய்கிறேன். பல பேர் சிவனை வணங்கிக்கொண்டே இருக்கிறார்கள். பல மந்திரங்களை கற்று தருகிறார்கள் ஆனால் நம்மால் அடிவாங்காமல் செய்ய முடியவில்லையே என்று நினைப்பது உண்டு. 

இதனைப்பற்றி குருவிடம் கேட்டேன். சந்நியாசி தீடசை வாங்கினால் தாண்ட சிவன் நிற்பார் இல்லை என்றால் பிரச்சினை தான் என்பார். நான் அவரிடம் அவர் மட்டும் குடும்பத்தோடு வாழலாம். நாங்கள் வாழ்ந்தால் அவருக்கு பிடிக்காதா என்பேன். 

அதற்கு குரு சிவனை சதாசிவமாக நினைத்து வணங்கினால் உனக்கு பிரச்சினை இல்லை அதனை விட்டு மேலே சென்றால் உனக்கு பிரச்சினை தான் என்று சொல்லுவார். 

என்னமோ அவர் நியாயமாக நடந்துக்கொள்ளவில்லை என்று சொல்லுவேன். என்ன செய்வது பணத்திற்க்காக அடிவாங்கிதான் ஆகவேண்டும். சிவன் என்றாலே வலிக்குது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா பலன்கள் பகுதி 38


வணக்கம் நண்பர்களே !
                    ராகு தசாவில் புதன் புத்திப்பற்றி பார்த்து வந்தோம். இடையில் கொஞ்சம் வேறு கருத்தையும் பார்த்தோம். தொடர்ந்து ராகு தசாவில் புதன் புத்தியை நாம் பார்க்கலாம்.
ராகு தசாவில் புதபுத்தியின் காலம் 2 வருஷம் 6 மாதம் 18 நாட்கள் ஆகும்.

புத்தி நாதனான புதன் லக்கினத்திற்க்கு கேந்திரம் திரிகோணம் உச்ச வீடு சொந்த வீடு சுபகிரங்களோடு சேர்ந்து இருந்தால்

ராஜயோகம் என்று சொல்வார்கள் அல்லவா அந்தளவுக்கு அவர்க்கு புதன் புத்தியில் செய்யும். ராஜாங்க பதவியில் உள்ளவர்களை பார்க்கும் வாய்ப்பு உருவாகும். நாட்டின் பிரதமரை கூட சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். இங்கிலாந்து இளவரசியை கூட சந்திக்கலாம். அது அவர் அவர் இருக்கும் நிலையை பொருத்து அமையும்.

இதுவரை திருமணம் நடைபெறாமல் இருந்தால் உங்களுக்கு பெண் தேடிவரும். திருமணம் நடைபெறும். வரும் வரனும் நல்ல நகரத்தில் இருந்து வருவார்கள்.மிகப்பெரிய பணக்கார வீட்டு வரன் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

நீங்கள் வியாபாரம் செய்துக்கொண்டு இருந்தால் உங்களின் வியாபாரம் இந்த புத்தியில் நன்றாக செல்லும். பணவரவும் நன்றாக இருக்கும். வியாபாரம் வளர்ச்சி பெறும்.

நீங்கள் படித்துக்கொண்டு இருந்தால் இந்த காலத்தில் கல்வி வாய்ப்பு நன்றாக அமையும். மிகப்பெரிய தேர்வுகளை இந்த காலத்தில் எளிதில் வெல்லலாம். எப்படிபட்ட தேர்வாக இருந்தாலும் இந்த நேரத்தில் எளிதில் வென்றுவிடலாம்.

வீடு வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். ஒரு வீடு வாங்க போனாலும் இரண்டு வீடுகள் அமைந்துவிடும். ஒரு வாகனம் வாங்க போனாலும் இரு வாகனங்கள் வாங்கும் யோகம் வந்துவிடும். 

ராகு தசாவில் புதன் புத்தி நல்லதை செய்கின்றது. புதன் கிரகமும் நன்றாக அமையும் பட்சத்தில் நல்ல வளர்ச்சியை காணமுடியும். வாழ்க்கையில் கோபுரம் போல் உயரவேண்டிய காலக்கட்டம் இந்த காலக்கட்டம்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மனின் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    எனது ஊரில் பல எதிர்ப்புகள் எனது குடும்பத்திற்க்கு ஒரு சில காலங்களில் கிளம்பியது. அப்பொழுது தனிகுடும்பமாக நின்று அந்த ஊரை எதிர்த்து போராடி வென்றார்கள் எனது குடும்பத்தில் உள்ள மூத்தோர்கள் அவர்களுடன் நின்றது நமது அம்மன் மட்டுமே.

எனது ஊரில் அதிகமாக வசிக்கும் மக்கள் ஒரே சமூகத்தினர் தான். அந்த சமூகத்தில் தான் நானும் பிறந்தேன். அந்த சமூகத்தினர் சண்டைக்கு என்றே பிறந்தவர்கள் என்று சினிமா படங்கள் எல்லாம் பார்ததாலே தெரியும். இந்த ஊரில் பல பிரச்சினைகள் எங்கள் குடும்பத்தினருக்கும் அந்த ஊருக்கும் வரும்.

அந்த பிரச்சினைகளை எல்லாம் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இருந்து அந்த ஊரை சமாளித்தார்கள் என்றால் அதற்கு காரணம் அம்மனின் துணை தான். எங்கள் குடும்பத்தினர் அம்மனின் மீது அதிக ஈடுபாடு இருக்கும். அந்த காரணத்தால் மட்டுமே அவ்வளவு பெரிய ஊரை சமாளித்து வெற்றி பெற்றனர். 

ஒரு ஊருக்கு இரண்டு பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன என்றால் அது எங்கள் ஊர் தான். மிகப்பெரிய ஊர் அந்த ஊரை தனிக்குடும்பம் நின்று பல காரியங்களில் ஜெயித்து இருக்கின்றது. அது எல்லாம் அம்மனின் அருள் மட்டு்ம் இருந்ததால் ஜெயித்தது.

அந்த நம்பிக்கையால் தான் நான் இன்று பல பிரச்சினைகளை எந்தவித பயம் இன்றி சந்திக்கின்றேன். ஒரு சிலர் என்னிடம் பேசும் பொழுது உங்களிடம் அம்மன் இருக்கின்றது என்ற கர்வம் இருக்கின்றது என்பார்கள். என்னிடம் கர்வம் இல்லை. நம்பிக்கை இருக்கின்றது அம்மனை முழுமையாக நம்புகின்றேன். 

எனது நம்பிக்கை எப்படி தெரியுமா புலிகள் தன்னுடைய இரையை தன் பற்களால் தேடுகிறது. மிகப்பெரிய கோரவிலங்குகளை தன் பற்களால் வேட்டையாடி உணவாக கொள்கிறது. அதே புலி தன் குட்டியை அதே பற்களால் தூக்கிக்கொண்டு காப்பாற்றுகிறது. அந்த புலிக்குட்டிக்கு தெரியும் தன் தாய் மிகப்பெரிய விலங்குகளை இந்த பற்களால் தான் வேட்டையாடுகிறது. இருந்தாலும் தாய் என்னை காப்பாற்றுவதற்க்கு தன் பற்களால் தூக்கிக்கொண்டு செல்கிறது என்று நம்பிக்கை வைக்கிறது பாருங்கள். அந்த நம்பிக்கையை அம்மன் மீது நான் வைத்துள்ளேன்.

இதேப்போல் அம்மன் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தால் உங்களுக்கும் அம்மன் தன் குழந்தைப்போல் காப்பாற்றுவாள்.உங்களை காப்பாற்றுவாள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, September 23, 2013

படங்கள்


வணக்கம் நண்பர்களே!
                     ஜாதககதம்பத்தில் வெளிவரும் ஒவ்வொரு பதிவிலும் அதில் இடப்படும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது நண்பர் ஒருவர் இன்று கேட்டுருந்தார்.

பதிவுக்கு வருபவர்களின் கண்களில் வழியாக அவர்களின் மனதிற்க்கு அமைதி மற்றும் திருப்தி ஏற்படுத்த வேண்டும் என்பதற்க்காக நெட்டில் தேடிபிடித்து படங்களை ஒவ்வொரு பதிவிலும் போடுகிறேன். இந்த படங்கள் யாருக்கும் சொந்தம் என்று சொன்னால் அந்த படத்தை நீக்குவதற்க்கு தயாராக இருக்கின்றேன்.

நெட்டில் தேடிபிடித்து போடுவதால் அந்த படத்திற்க்கு உரிமை யாருக்காவது இருக்கலாம். நெட்டில் தேடும்பொழுது நல்ல படங்களாக எனக்கு கிடைத்துவிடுகிறது. அந்த படத்தின் உரிமையுடன் நீங்கள் கேட்டால் படத்தை எடுத்துவிடுகிறேன். ஒரு சில நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு நீங்கள் போடும் பதிவில் எங்களுக்கு நீங்கள் போடும் படமும் நன்றாக பிடித்து இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்க்காக படத்தை தேர்ந்தெடுத்து போடுகிறேன்.

வயதில் மூத்தவர்கள் நான் போடும் படத்தை பார்த்துவிட்டு மெய் சிலிர்த்து ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்வதாகவும் சொல்லுகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்க்காகவும் நல்ல படங்களை தேர்ந்தெடுக்கிறேன்.

நான் ஜாதககதம்பத்திற்க்கு என்று புதிய தளம் உருவாக்காமல் இருப்பதற்க்கு காரணமும் இந்த படங்கள் தான். ஏன் என்றால் பதிவில் வரும் படங்கள் அனைத்தும் உயர் தரமான தரத்தோடு தரும்பொழுது அதன் சேமிப்பு அதிகமாக இருக்கின்றது. வெப்தளத்திற்க்கு அதிகமான தொகை கொடுக்கப்படவேண்டும். எதிர்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம். இப்பொழுது இதிலேயே படித்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா பலன்கள் பகுதி 37


வணக்கம் நண்பர்களே!
                     ராகு தசாவில் மாந்தீரிக பாதிப்பை பற்றி சொன்னேன். இந்த மாந்தீரிகம் எந்த நேரத்திலும் செய்துவிடமுடியாது. ஒருத்தரை பார்த்து உன்னை உடனே மாந்தீரிகம் செய்து கொன்றுவிடுகிறேன் என்று சொன்னால் உண்மையில் அப்படி எல்லாம் செய்துவிடமுடியாது.

மாந்தீரிக பாதிப்பு எப்பொழுது நடைபெறும் என்றால் குருவின் பலம் குறையும்பொழுது செயல்படும். நமது பூர்வபுண்ணியத்தின் பலன் எல்லாம் குரு கிரகத்தின் கீழ் தான் இருக்கும். இந்த குரு கிரகம் எப்பொழுது பலம் குறைக்கின்றதோ அப்பொழுது மாந்தீரிக பாதிப்பு தலைநிமிர செய்யும். ராகுக்கும் குருவுக்கும் அதனால் தான் சண்டை. ராகு மாந்தீரிகத்தால் தாக்க நினைப்பார். குரு அதனை விடமாட்டார். 

ஒருவருடைய பூர்வபுண்ணிய பலம் குறையும்பொழுது ராகுவின் வேலை எளிதில் நடைபெறும். அதற்கு தான் அனைத்திற்க்கும் குருவின் பலன் மிக அதிகமாக வேண்டும் என்று சொல்லுவது. 

ராகு தசாவில் குருவின் பலம் குறைவாக இருக்கும். குரு சொந்த மதத்தை குறிப்பவர். ராகு பிற மதங்களை குறிப்பவர். பிறமதத்தை குறிப்பவரின் தசா நடைபெறும்பொழுது குரு தன் பலத்தை இழக்கிறார். அப்பொழுது அவருக்கு மாந்தீரிக பாதிப்பு ஏற்படும்.

மாந்தீரிகத்தை நிருப்பிக்க கூட முடியாத நிலை ஏற்படுவதற்க்கு காரணம் குருவினால் தான். குரு பலம் குறைந்த நபரை வைத்து மாந்தீரிகத்தை நிருபித்துவிடலாம்.நல்ல சக்தியை கூட நிருபணம் செயயாமல் இருக்கும்பொழுது தீயசக்தியை ஏன் நிருப்பிக்க வேண்டும்.

இந்த காலத்தில் மாந்தீரிகம் எல்லாம் தேவையில்லை அவன் அவன் கெட்டு குட்டி சுவராக அவனே போய்விடுகிறான். தமிழ்நாட்டில் மதுபானகடையை திறந்து விட்டு அவன் அவன் குடித்தே கெட்டுவிடுகிறான். இதில் எதற்கு மாந்தீரிகவாதி வேறு செய்யவேண்டும். ஆயிரம் மாந்தீரிகவாதிக்கு ஒரு மதுபானக்கடை சமம். நான் ஏற்கனவே பதிவில் சொன்னது மாதிரி பெரும்பாலான மக்கள் ராகுவின் பிடியில் இருக்கின்றனர்.

பல கெடுதல் தரும் விசயங்களை ராகு அள்ளிக்கொடுத்து கொண்டிருக்கும்பொழுது மாந்தீரிகவாதி தேவையில்லை. அவன் அவன் அவனே குழியை வெட்டிக்கொள்கிறான்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா கெட்ட எண்ணங்கள்


வணக்கம் நண்பர்களே!
                     ராகு தசாவில் உட்பிரிவாக மாந்தீரிகம் பற்றி வந்ததால் அதனைப்பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம். மாந்தீரிகம் என்று சொன்னவுடன் நாம் நினைவுக்கு வருவது கேரளா தான் ஆனால் மாந்தீரிக உலகின் முதல் இடத்தை பிடிப்பவர்கள் கல்கத்தா தான் நமக்கு அண்டை மாநிலம் கேரளா என்றவுடன் அதனைப்பற்றி மட்டும் தெரிகிறது.

மாந்தீரிகத்தில் நாம் நல்ல தெய்வங்களை எடுப்பது போல் அவர்களும் தேவதைகளை எடுப்பார்கள். அந்த தேவதை உதவியுடன் தான் மாந்தீரிகம் செய்வார்கள். அனைத்து வேலைக்கும் தேவதை துணை வேண்டும். நாம் எடுப்பது நல்ல தேவதைகள் என்றால் மாந்தீரிகத்திற்க்கு கெடுதல் தேவதைகளை எடுப்பார்கள்.

மாந்தீரிகம் எல்லாம் இந்த காலத்தில் இல்லை என்று சொன்னாலும் அதிகமாக இந்த காலத்தில் இந்த வேலைகள் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றது. வெளியில் சொல்லாமல் செய்கின்றனர். கல்கத்தாவில் ஏன் இந்த தொழில் முதலிடத்தில் இருக்கின்றது என்றால் கல்கத்தா காளியின் சக்தியால் மட்டுமே இந்த தொழில் நடத்துகின்றனர். மிகவும் கோபமான ஒரு தெய்வம் கல்கத்தா காளி. அதன் துணைக்கொண்டு இதனை அங்கு செய்கின்றனர். கல்கத்தா காளியின் உக்கிரத்தை தணிக்கவில்லை அந்த உக்கிரத்தை கொண்டு செய்கின்றனர். 

கேரளாவில் பல உபதேவதைகள் வைத்துக்கொண்டும் செய்கின்றனர். மற்றும் கெடுதல் தரும் ஆத்மாக்களை கொண்டும் செய்கின்றனர். ஆத்மாவின் உதவியோடு செய்வதால் அவர்களின் வேலை சொன்ன நேரத்தில் நடத்திக்கொடுக்கிறார்கள்.நம் மதத்தில் மட்டும் இல்லை அனைத்து மதத்திலும் இது இருக்கின்றது.

முஸ்லீம் மதத்தில் நூர்ஜாக ஜீன் என்ற ஒன்றை வைத்து செய்கிறார்கள்.. உருவமற்ற ஒன்று. கெடுதல் தரும் ஆவிகள் என்ற கூட சொல்வார்கள்.

இந்த வேலைகள் அனைத்திற்க்குமே காரணம் ராகு தான். நேர்மறையாக ராகு சுற்றாமல் எதிர்மறையாக சுற்றுவதால் இந்த எண்ணம் ஏற்படுவதற்க்கு காரணமாக இருக்கலாம். நல்ல எண்ணத்திற்க்கு பதிலாக தீய எண்ணங்கள் உருவாகின்றது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.