இது கலியுகம். என்னிடம் ஒன்றும் இல்லாத நேரத்தில் என்னிடம் இருந்தவர்கள் ஒரு சில நண்பர்கள் மட்டுமே. இன்று பல பேர்கள் அதாவது உறவினர்கள் என்னை தேடி வருகின்றார்கள்.
ஒன்றும் இல்லாத நேரத்தில் எந்த உறவினர்களும் என்னை கண்டுக்கொண்டது கிடையாது. ஆனால் இன்று பல பேர்கள் நெருங்கி வரதுவங்கிவிட்டனர். அவ்வளவு எளிதில் அவர்களிடம் நான் மாட்டிக்கொள்வது கிடையாது. ஏன் நெருங்கி வருகின்றனர் என்றால் அவர்களுக்கு இருக்கும் பிரச்சினையை தீர்ப்பதற்க்கு வருகிறார்கள். தினமும் என்னை தொடர்புக்கொண்டு நலம் விசாரிப்பது இப்படி தான் தொடர்கிறது.
எனது குருவிடம் கேட்டேன் என்ன சாமி இப்படி என்னை நெருங்கி வருகிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் அவர்களுக்கு என்ன வேணுமோ அதனை செய்துக்கொடுத்துவிடு என்றார்.
எனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதாவது உறவினர்களுக்கு குரு தான் உதவி செய்கிறார். அவர்களின் பிரச்சினையை ஒவ்வொன்றாக அவர் தான் தீர்த்துவருகிறார். எனது குரு எனக்கு அறிமுகமானதே எனது குடும்பத்தில் உள்ள நபர்கள் வழியாக தான். அதனால் நான் எதனையும் கண்டுக்கொள்வதில்லை.
குடும்ப உறவினர்கள் குருவோடு தொடர்பு உண்டு.இப்பொழுது நீங்கள் நினைக்கலாம். எல்லாம் சுயநலமாகவே இருக்கின்றனர் என்று நினைக்கலாம். இதில் ஒரு விசயம் இருக்கின்றது அதனை சொல்லுகிறேன் பாருங்கள். குரு சந்நியாசம் வாங்கியுள்ளார் அவரின் குடும்பத்தோடு தொடர்பு கிடையாது. எனக்கு குரு அமைந்ததே குடும்ப உறுப்பினர் வழியாக தான் அமைந்தது. அதனால் குடும்ப உறுப்பினர்க்கு முன்னுரிமை தரப்படுகிறது.
குரு சொல்லுவார். நீ ஒருவன் ஆன்மீகவாதியாக வருகின்றாய் என்றால் உன் குடும்பத்தில் முன்பரம்பரையில் ஒருவர் உன்னைப்போல் இருந்திருப்பார். உனக்கு பிறகு பல சந்ததினர்க்கு பிறகு உன்னைப்போல் ஒருவர் பிறப்பார். இது ஒரு சுழற்சி என்றும் சொல்லியுள்ளார்.
குரு சொல்லுவார். நீ ஒருவன் ஆன்மீகவாதியாக வருகின்றாய் என்றால் உன் குடும்பத்தில் முன்பரம்பரையில் ஒருவர் உன்னைப்போல் இருந்திருப்பார். உனக்கு பிறகு பல சந்ததினர்க்கு பிறகு உன்னைப்போல் ஒருவர் பிறப்பார். இது ஒரு சுழற்சி என்றும் சொல்லியுள்ளார்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment