Followers

Wednesday, September 18, 2019

நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்


வணக்கம்!
          உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகத்தை சரி செய்வதற்க்கு முன்பு உங்களின் பெயரை கொஞ்சம் சரி செய்யுங்கள். உங்களின் முதல் அடையளமாக இருக்கும் பெயரை மிகச்சரியாக தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.

உங்களின் பெயரை நான் சோதிடத்திற்க்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ள தேவையில்லை. இந்த பெயர் உங்களுக்கு வைத்தால் நன்றாக இருக்குமா என்று யோசித்து அதன்படி வைத்துக்கொள்ளுங்கள். 

உங்களின் இராசிப்படி பெயரை தேர்ந்தெடுக்கொள்ள வேண்டியதில்லை. உங்களுக்கு தெரிந்த பெயர்களை பார்த்து இந்த பெயரை வைத்தவர்கள் நன்றாக இருக்கின்றார்களா என்று பாருங்கள். 

அவர்கள் நன்றாக இருக்கும்பட்சத்தில் அதுபோல உள்ள பெயர்களை நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ளலாம். ஏன் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார் என்று நீங்கள் நினைக்கலாம். பல இடங்களில் நல்ல பெயரை தேர்ந்தெடுத்தவர்கள் நன்றாக இருப்பார்கள்.

வீணாக போன பெயர்களை நீங்கள் வைத்திருந்தால் உங்களின் ஜாதகத்தில் நல்ல கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் உங்களின் பெயர் இராசிக்கு தகுந்தமாதிரி உங்களின் வாழ்க்கையும் வீணாக சென்றுவிடும். முடிந்தவரை ஒரு ஆராய்ச்சி செய்து உங்களின் பெயரை தேர்ந்தெடுங்கள் என்று சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 17, 2019

ஜாதக பலன்


வணக்கம்!
          ஒருவரின் நட்சத்திரத்தை வைத்துக்கொண்டு அவரின் பாவத்தைப்பற்றி சொல்லி அதற்கு தீர்வு கண்டுபிடிக்கலாமா என்று நண்பர் ஒருவர் கேட்டுருந்தார். 

நட்சத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவர்க்கு தீர்வு காணமுடியாது அவரின் ஜாதகத்தில் அமர்ந்த ஒன்பது கோள்கள் மற்றும் துணைக்கு மாந்தியையும் சேர்த்து பார்த்து அதற்கு வழியை தேடவேண்டும். 

வெறும் நட்சத்திரத்தை மட்டும் வைத்தால் உங்களுக்கு ஜாதக கட்டமே  தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும். நட்சத்திரத்தை வைத்துக்கொண்டு பொதுபலனை சொல்லலாம். நட்சத்திரத்தை மட்டும் வைத்து பலனை சொல்லிவிடமுடியாது.

நட்சத்திரம் மட்டும் போதும் என்றால் கிரகத்தை கண்டுபிடித்து இருக்கமாட்டார்கள் அல்லவா. சோதிடத்தில் சொல்லப்பட்ட அனைத்து விசயத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பலனை சொன்னால் மட்டுமே சரியாக வரும் அப்படி இல்லை என்றால் தவறாகவே அனைத்தும் போய்விடும்.

ஜாதகத்தில் உள்ள அனைத்தையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு அதற்கு தகுந்தார்போல் பலனை பார்த்துக்கொள்ளுங்கள். உண்மையிலேயே ஒருவர் அதிக தோஷத்தை உடையவரா அல்லது குறைந்த தோஷத்தை உடையவராக இருக்கின்றா என்பதை எல்லாம் ஜாதகத்தின் உள்ள கிரகங்கள் தான் தீர்மானிக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 16, 2019

ஆன்மீக அனுபவம்


வணக்கம்!
          ஆன்மீக அனுபவம் எழுதி நீண்ட நாள்கள் சென்றுவிட்டது. இன்று அதனைப்பற்றி எழுதவேண்டும் என்ற ஒரு தூண்டுதல் வந்தது உடனே அதனை தொடங்கிவிட்டேன். மரணம் நடக்கும்பொழுது பழைய பதிவில் சொல்லிருந்தேன் மரணம் எய்துபவர்களுக்கு வலி இருக்காது என்பதை சொல்லிருந்தேன்.

இயற்கையாக மரணம் எய்தும் நபர்களுக்கு முதலில் வலி என்பது இருக்கின்றது. மரணம் கொஞ்சம் கொஞ்சமாக ஆள்கொள்ளும்பொழுது அந்த வலி குறைந்துவிடுகின்றது. அதோடு சம்பந்தப்பட்ட நபர் ஒரு நீண்ட தூக்கத்திற்க்குள் செல்வது போன்ற ஒரு நிலை ஏற்படுகின்றது.

முதலில் உள்ள வலி என்பது அதிகமாக தான் இருக்கின்றது அதன்பிறகு அது குறைந்துவிடுகின்றது. உடனே மரணம் வந்துவிடுவதால் வலியின் வேகம் குறைந்து மரணத்திற்க்குள் நாம் சென்றுவிடுகிறோம்.மரணத்தைப்பற்றி சொல்லுவதற்க்கு நீங்கள் அனுபவத்தை சொல்லுகின்றீர்களாக என்று கேட்கலாம். ஒரு சில விசயங்கள் நடந்து அதனை காண்பித்து கொடுக்கும்பொழுது அதனைப்பற்றி பகிர்ந்துக்கொள்ளலாம் என்று தோன்றியது.

எப்படி பார்த்தாலும் சரி ஒருவரின் மரணம் எப்படி ஏற்படும் என்பது முன்கூட்டியே திட்டமிட்டபடி தான் நடக்கின்றது. நாம் ஆன்மீகத்தில் இருப்பதால் நாம் அதனை சோதிடத்தின் வழியாக தெரிந்துக்கொள்கிறோம். ஒரு சிலருக்கு தன்னுடைய சுயஉணர்வால் தெரிகின்றது. 

ஒரு சிலருக்கு அவர்களின் கர்மவினைப்படி நடக்கின்றது. ஒரு சிலருக்கு அவரின் நினைப்பிற்க்கு தகுந்தமாதிரி நடக்கின்றது. அதாவது நமது மரணம் இப்படி தான் நடக்கவேண்டும் என்று நினைப்பில் ஒரு சிலருக்கு நடக்கின்றது. எதுவாக இருந்தாலும் சரி நல்லதை மட்டுமே நினையுங்கள் அதனையே செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 13, 2019

தெய்வநிலை


வணக்கம்!
          நிறைய பேர்கள் நான் நல்ல ஆன்மீகவாதியாக இருக்கிறேன். நான் நிறைய கோவிலுக்கு சென்று வருகிறேன். நிறைய பூஜைகளை செய்துக்கொண்டு இருக்கிறேன் ஆனால் எனக்கு ஒன்றும் நடப்பதில்லை. என்னுடைய காரியம் எதுவும் வெற்றி பெறுவதில்லை என்று சொல்லுவார்கள். பெரும்பாலானவர்கள் இப்படிப்பட்ட வார்த்தையும் உங்களிடம் வைத்திருக்கலாம்.

இவர்களை நன்றாக கவனித்து பார்த்தால் ஏதோ ஒரு விதத்தில் சரியில்லாமல் இருப்பார்கள். இவர்களின் கர்மா என்று சொல்லுவதை விட இவர்களின் நடத்தை அப்படிப்பட்ட ஒன்றாக இருக்கும். இவர்கள் உங்களிடம் ஏதோ ஒன்றை கேட்டு அதனை நீங்கள் செய்யாமல் இருந்தால் அவர்கள் உடனே அவர்களின் எதிர்மறை குணத்தை காட்டுவார்கள்.

எதிர்மறை குணத்தை காட்டுவது தவறு என்று சொல்லவில்லை ஆனால் ஆன்மீகம் என்பது எதனையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பக்குவநிலை. இதனை இப்படி சொல்லலாம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நான் உன்னை பற்றிக்கொண்டதை விடமாட்டேன் என்ற நிலை என்று சொல்லலாம்.

மனிதனை ஒரே மாதிரியாக பார்க்கும் ஒரு பக்குவப்பட்ட நிலையாக இருக்கவேண்டும். ஒரு தெய்வத்திடம் நாம் இப்படிப்பட்ட நிலையில் இருக்கும்பொழுது தான் நம்மை நாடி இறை அருள் கிடைக்கும். இது இல்லை என்றால் கண்டிப்பாக கிடைக்காது.

பலர் ஆன்மீகம் என்று சொல்லிக்கொண்டு அதற்கு ஒப்பாத ஒரு நிலையில் இருக்கின்றனர். இதனை நீங்கள் எடுத்துவிட்டால் உங்களிடம் ஒரு நல்ல சக்தி குடிக்கொள்ளும். உங்களை நோக்கி அனைத்தும் ஈர்க்கப்பட்டு வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஒன்பதில் இராகு


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாவது வீட்டில் தீயகிரகமான இராகு கிரகம் இருந்தால் பெரும்பாலானவர்களின் கணிப்பு இவர் சரியில்லாத ஒரு ஆள். இவர்க்கு நிறைய காரிய தடை ஏற்படும் என்று சொல்லுவது உண்டு.

ஒன்பதில் இராகு கிரகம் இருந்தால் அது பித்ருதோஷத்தை காட்டுகின்றது அதனால் இவர்க்கு தடைகள் நிறைய ஏற்படும். இவரால் சாதிக்கமுடியாது என்று சொல்லுவார்கள். உண்மையில் அப்படிப்பட்ட கணிப்பு தவறாகவே அமைகின்றது.

ஒன்பதில் இராகு கிரகம் என்று எடுத்துக்கொள்ளகூடாது. பொதுவாக அப்படியே நாம் கணிக்க கூடாது. இராகு கிரகம் எந்த நட்சத்திரத்தில் செல்கின்றது. இராசி அதிபதியின் நிலை அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு தான் பலனை சொல்லவேண்டும்.

ஒன்பதில் இராகு கிரகம் இருக்கும் நபர்கள் பெரும்பாலும் இளம்வயதில் அவரின் தந்தை சரியில்லாத நிலை இருந்தால் தான் அவரின் இளமை பருவம் பாதிப்படையும். தந்தை சரியாக இருந்தால் இளமை பருவமும் நன்றாக இருக்கும். அவரின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

வறுமையில் தந்தை இருந்த காலக்கட்டத்தில் ஒன்பதில் இராகு இருந்தால் பிரச்சினை தான் இல்லை என்றால் பெரியதாக பாதிப்பதில்லை. பெரும்பாலான ஜாதகர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்க்கின்றனர்

பெரிய காரியத்தை எல்லாம் செய்யக்கூடிய ஆட்கள் யார் என்று பார்த்தால் இந்த ஒன்பதில் இராகு கிரகம் இருக்கும் ஆட்களாக தான் இருப்பார்கள். ஒன்பதில் இராகு உங்களுக்கு இருந்தால் நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்று நினைத்து செயல்படுங்கள். நன்றாக உங்களால் வாழமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, September 12, 2019

அம்மன் கோவில்


ணக்கம்!
          வழக்கமாக இருக்கும் கோவிலை விட நமது அம்மன் கோவில் அடி ஆழம் அதிகமாக தோண்டி எடுக்கப்பட்டு அதன்பிறகு பேஷ் போடப்பட்டு வருகின்றது. கோவில் இருக்கும்பகுதி வயல் மற்றும் குளம் இருப்பதால் அதிகளவில் தண்ணீர் இருக்கும் பகுதியால் அதிகமான ஆழத்தில் இருந்து எழுப்ப வேண்டியிருக்கின்றது.

மரங்களின் வேர்களும் கோவிலை தாக்கி பிற்காலத்தில் சேதம் விளைவிக்க கூடாது என்பதாலும் இதனை கணக்கில் கொண்டு கட்டப்பட்டு வருகின்றது. வேலையும் வேகமாக தான் செய்கின்றனர். இந்த காரணத்தால் தான் மேல் வருவதற்க்கு நாள்கள் எடுகின்றன.

வீடுகள் போல் இல்லாமல் கோவில்கள் கட்டுவதற்க்கு வித்தியாசமாக தான் வேலை செய்கின்றனர். கோவிலுக்கு என்று நிறைய விதிகளை வைத்து அதன்படி செய்கின்றனர். இதனை ஏன் சொல்லுகின்றேன் என்றால் நமது நேரடி பார்வையில் கோவில் கட்டுவதால் நேரடி அனுபவம் ஏற்படுகின்றது. எதிர்காலத்தில் நீங்கள் கோவில் கட்டும்பொழுது என்னுடைய அனுபவம் உங்களுக்கு பயன்படலாம்.

நமது அம்மன் கோவிலுக்கு நமது நண்பர்களால் நிறைய உதவி கிடைத்துக்கொண்டே இருக்கின்றது. இந்த உதவிகள் தான் நமது அம்மன் கோவிலை சிறப்பாக செய்வதற்க்கு உதவியாக இருக்கின்றது. அவர் அவர்களும் அவர்களின் நண்பர்களின் வட்டத்தில் இருந்தும் உதவியை செய்கின்றனர். உங்களின் உதவி தொடர்ச்சியாக இருக்கட்டும். இந்த உதவியை தான் நான் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 10, 2019

கெடுதல் தரும் கிரகம் நல்லதை செய்யும்


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கெட்டகிரகத்தை பார்த்து நாம் பயப்படுவோம் ஆனால் இந்த கெட்டகிரகங்கள் ஒரு சில காலங்களுக்கு பிறகு நல்லதை செய்ய ஆரம்பித்துவிடுகின்றது. பலரின் வாழ்வில் இது நடந்து இருக்கின்றது.

ஒருவருக்கு பித்ரு தோஷமே இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். பித்ரு தோஷத்திற்க்குரிய கிரகம் என்று பார்த்தால் மூன்றில் கேது மற்றும் ஒன்பதில் இராகு இந்த அமைப்பை உடையவர்களுக்கு பித்ரு தோஷம் என்று சொல்லுவார்கள்.

பித்ருதோஷம் உடையவர்கள் இளைமையில் கஷ்டப்பட்டாலும் ஒரு சில காலக்கட்டங்களுக்கு பிறகு இவர்களால் சமுதாயத்திற்க்கு நல்லது நடக்கும். சமுதாயத்திற்க்கு ஏதாவது ஒன்றை செய்யவேண்டும் என்று இவர்கள் செயல்பட்டு செய்வார்கள்.

இன்றைக்கு நல்லது செய்யும் ஆன்மீகவாதிகள் அனைவருக்கும் பித்ருதோஷம் உடைய ஜாதகர்கள் தான் இருப்பார்கள். இவர்களுக்கு கெடுதல் செய்த கிரகமே இவர்களுக்கு நல்லதும் செய்ய ஆரம்பித்துவிடுகின்றது.

ஒருவரின் வாழ்வில் பாதி வாழ்க்கையில் கெடுதலை செய்துவிட்டு மறுபாதி வாழ்க்கையில் பிரச்சினையை கொடுக்கின்றது. கெடுதல் தரும் கிரகம் என்றால் அது வாழ்நாள் முழுவதும் கெடுதலை மட்டுமே செய்துக்கொண்டு இருப்பதில்லை நன்மையும் செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு