Followers

Monday, September 16, 2019

ஆன்மீக அனுபவம்


வணக்கம்!
          ஆன்மீக அனுபவம் எழுதி நீண்ட நாள்கள் சென்றுவிட்டது. இன்று அதனைப்பற்றி எழுதவேண்டும் என்ற ஒரு தூண்டுதல் வந்தது உடனே அதனை தொடங்கிவிட்டேன். மரணம் நடக்கும்பொழுது பழைய பதிவில் சொல்லிருந்தேன் மரணம் எய்துபவர்களுக்கு வலி இருக்காது என்பதை சொல்லிருந்தேன்.

இயற்கையாக மரணம் எய்தும் நபர்களுக்கு முதலில் வலி என்பது இருக்கின்றது. மரணம் கொஞ்சம் கொஞ்சமாக ஆள்கொள்ளும்பொழுது அந்த வலி குறைந்துவிடுகின்றது. அதோடு சம்பந்தப்பட்ட நபர் ஒரு நீண்ட தூக்கத்திற்க்குள் செல்வது போன்ற ஒரு நிலை ஏற்படுகின்றது.

முதலில் உள்ள வலி என்பது அதிகமாக தான் இருக்கின்றது அதன்பிறகு அது குறைந்துவிடுகின்றது. உடனே மரணம் வந்துவிடுவதால் வலியின் வேகம் குறைந்து மரணத்திற்க்குள் நாம் சென்றுவிடுகிறோம்.மரணத்தைப்பற்றி சொல்லுவதற்க்கு நீங்கள் அனுபவத்தை சொல்லுகின்றீர்களாக என்று கேட்கலாம். ஒரு சில விசயங்கள் நடந்து அதனை காண்பித்து கொடுக்கும்பொழுது அதனைப்பற்றி பகிர்ந்துக்கொள்ளலாம் என்று தோன்றியது.

எப்படி பார்த்தாலும் சரி ஒருவரின் மரணம் எப்படி ஏற்படும் என்பது முன்கூட்டியே திட்டமிட்டபடி தான் நடக்கின்றது. நாம் ஆன்மீகத்தில் இருப்பதால் நாம் அதனை சோதிடத்தின் வழியாக தெரிந்துக்கொள்கிறோம். ஒரு சிலருக்கு தன்னுடைய சுயஉணர்வால் தெரிகின்றது. 

ஒரு சிலருக்கு அவர்களின் கர்மவினைப்படி நடக்கின்றது. ஒரு சிலருக்கு அவரின் நினைப்பிற்க்கு தகுந்தமாதிரி நடக்கின்றது. அதாவது நமது மரணம் இப்படி தான் நடக்கவேண்டும் என்று நினைப்பில் ஒரு சிலருக்கு நடக்கின்றது. எதுவாக இருந்தாலும் சரி நல்லதை மட்டுமே நினையுங்கள் அதனையே செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: