Followers

Sunday, August 7, 2016

அனுபவம்


ணக்கம்!
          கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனை வாசம் ஆகிவிட்டது. அதனை முடித்து நேற்று மாலை வந்தால் கடுமையான ஜலதோஷம் வந்தது அதனால் பதிவை தரமுடியவில்லை. ஆன்மீக அனுபவகளிலும் பதிவை தரமுடியவில்லை தொடர்ந்து பதிவை எப்படியும் கொடுத்துவிடுவேன் இந்த சூழ்நிலையால் பதிவை தரமுடியவில்லை. சோதிடபலன் கூட சொல்லமுடியவில்லை நாளையில் இருந்து தான் ஆரம்பிக்கவேண்டும். 

நோயை காட்டும் ஆறாவது இடத்திற்க்கும் மருத்துவமனையை காட்டும்  பனிரெண்டாவது வீட்டிற்க்கும் எப்படியும் தகுந்த மாற்று ஏற்பாடு செய்துவிடுவேன். கொஞ்ச சொந்த வேலை அதிகம் இருந்த காரணத்தால் இதனை செய்யாமல் விட்டுவிட்டேன். மாதம் தோறும் இதற்கு என்று ஒரு ஏற்பாடு இருக்கும் ஆனால் இதனை விட்டுவிட்டதால் கொஞ்ச செலவு அதிகமாக போய்விட்டது. 

ஆறாவது வீடாக நோயை காட்டுவதால் அந்த இடத்திற்க்கு ஒரு கடுமையான தெய்வத்திற்க்கு அதாவது கோரமாக இருக்கும் தெய்வத்திற்க்கு ஒரு பூஜை அல்லது அந்த பூஜையை செய்ய காணிக்கையை அனுப்பிவிடுவேன்.

பனிரெண்டாவது வீட்டிற்க்கு என்று மருத்துவமனையில் இருக்கும் நபர்களுக்கு ஏதாவது பண உதவி செய்வது உண்டு இதனை விட்டதால் மடக்கி போட்டு படுத்தி எடுத்துவிட்டது. 

நடக்கும் ஒவ்வொரு அனுபவத்திலும் பாடம் கற்கிறோம். மருத்துவமனையில் இருந்த பொழுது அவசரமாக வந்த நோயாளிக்கு அதுவும் குழந்தை நோயாளிக்கு நம்மால் முடிந்த பிராத்தனையை செய்ய முடிந்தது. அதோடு பல பேருக்கு தன்னால் முடிந்த பணஉதவியை செய்ய முடிந்தது. 

நடப்பது நல்லதற்க்கே என்று விட்டுவிட்டு இனி தொடர்ந்து பதிவை தருவதற்க்கு அம்மனை பிராத்திக்கிறேன். வரும் புதன்கிழமை அம்மன் பூஜை வைக்கலாம் என்று தீர்மானித்து இருக்கிறேன். உடல்நிலை சரியாவிட்டால் உறுதியாகி அறிவிப்பை வெளியிடுகிறேன்.

மருத்துவமனையில் இருந்தபொழுது அவசர உதவிக்கு என்று மதுரையை சேர்ந்த நண்பர் காேபி அவர்கள் உதவி செய்தார். அவர்க்கு தான் அனைத்து புண்ணியமும் சேரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, August 5, 2016

செல்வத்தை தரும் சுக்கிரன்


வணக்கம்!
          வெள்ளிக்கிழமை என்றாலே அது ஒரு தனித்துவம் உடைய நாளாக தான் இருக்கின்றது அதுவும் ஆடி வெள்ளி சொல்லிக்கொள்ளவே தேவையில்லை மிகுவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கின்றது.

அம்மன் என்பதற்க்கு மட்டும் காரணமில்லை சுக்கிரன் தான் இதற்கு அதிக காரணமாக இருக்கின்றார். அந்தந்த நாளை அந்த கிழமையின் அதிபர் அதிகமாக முடிவு செய்கிறார் அந்த வகையில் வெள்ளிக்கிழமை  சுக்கிரனின் நாளாக வருகின்றது அல்லவா.

சுக்கிரன் என்றாலே அள்ளி அள்ளி கொடுப்பவர் அல்லவா. சுக்கிரனின் காரத்துவம் உடைய அம்மன் வழிபாடு செய்யும்பொழுது சுக்கிர கிரகம் நன்றாக பலம் அடைந்து நமக்கு நிறைய செல்வவளம் கிடைக்கிறது.

செல்வத்திற்க்குரிய மகாலட்சுமி பூஜை எல்லாம் வெள்ளிக்கிழமை தானே செய்கிறார்கள். அந்தளவுக்கு செல்வவளத்தை அள்ளிக்கொடுக்கின்ற ஆற்றல் பெற்ற கிரகம் சுக்கிரன் கிரகம்.

நம்மால் வெள்ளிக்கிழமை அன்று ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நமக்கு எப்படியாவது ஒரு வழியில் செல்வவளம் வந்துக்கொண்டே இருக்கும். இதுவரை செய்யாமல் இருந்தாலும் இனிமேலாவது ஆரம்பியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 4, 2016

கட்டண சேவையில் மாற்றம்


ணக்கம்!
          நமது ஆன்மீக அனுபவங்கள் என்ற பதிவைப்பற்றி உங்களுக்கு தெரியும். ஜாதககதம்பம் போல தனிப்பதிவாக அதனை எழுதிக்கொண்டு இருக்கிறேன். ஆன்மீக கருத்துக்கள் ஜாதககதம்பத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். ஆன்மீக அனுபவங்கள் கட்டணத்தை செலுத்தி படிப்பது போல கொண்டு வந்து ஒரு வருடங்கள் ஆகிவிட்டது.

ஆன்மீக அனுபவங்கள் ஒரு வருடத்திற்க்கு பனிரெண்டாயிரம் பணம் என்று சொல்லிருந்தேன். அதனை கட்டி பல நண்பர்கள் படித்து வருகின்றார்கள். வருடம் வருடம் பனிரெண்டாயிரம் பணம் செலுத்தவேண்டும் என்று சொல்லிருந்தேன்.

முழுவதும் அதனை மாற்றி விருப்ப சந்தாவாக மாற்றிக்கொண்டு வந்துவிட்டேன். ஒரு வருடத்திற்க்கு பனிரெண்டாயிரம் ரூபாய் பணம் கட்டிவிட்டால் அதன்பிறகு வரும் வருடத்திற்க்கு விருப்ப சந்தாவாக மாற்றிவிட்டேன். ஒரு வருடத்திற்க்கு நீங்கள் கட்டிவிட்டால் அதன் பிறகு வரும் வருடங்களில் நீங்கள் விருப்பட்டு கட்டலாம் அல்லது கட்டாமலும் படிக்கலாம். இணைப்பு துண்டிக்கபட மாட்டாது.

ஜாதககதம்பம் உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்கள் கட்டணபதிவில் இணைந்துக்கொள்ளுங்கள். நிறைய நல்ல விசங்கள் அதில் இருக்கின்றது. நன்றாக தெரிந்துக்கொள்ளமுடியும் அதோடு பயிற்சியும் செய்துக்கொள்ளலாம்.

என்னால் முடிந்தளவுக்கு அனைத்தையும் பணம் இல்லாமல் செய்துக்கொடுக்க முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன். ஆன்மீக அனுபவங்கள் பதிவையும் இலவசமாக கொடுக்கலாம் ஆனால் ஏற்கனவே பணம் கட்டி படித்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஒரு முறை நீங்கள் பணம் கட்டிய பிறகு தொடர்ந்து படிப்பது போல் செய்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, August 3, 2016

சந்திரன்


ணக்கம்!
          கோயம்புத்தூர் சென்று இருந்தபொழுது நண்பர் ஒருவரோடு சில மணி நேரம் இருக்க நேர்ந்தது. ஒவ்வொரு நண்பரையும் சந்திக்கும்பொழுது நமக்குள் இருக்கும் சோதிட அறிவை கொஞ்சம் தட்டி எழுப்பவது போல அமைவது உண்டு.

ஒருவருக்கு சந்திரன் மட்டும் நன்றாக இருந்தால் அவருக்கு எல்லாம் தானாகவே அமைந்துவிடும் என்று சொல்லுவது உண்டு. நேற்றைக்கு குரு பெயர்ச்சி நடந்தது அது கூட சந்திரனை மையமாக வைத்து தானே சொல்லுகிறோம். 

பிறந்த பொழுது உள்ள சந்திரனுக்கு எதுவும் நடந்துவிடகூடாது என்று தான் இந்த பெயர்ச்சிக்கு எல்லாம் இந்தளவுக்கு பயப்படுகிறோம் அதனால் சந்திரனுக்கு என்று தனி மதிப்பு ஜாதகத்தில் உண்டு.

உங்களின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் போதும் உங்களின் வாழ்க்கை சூப்பராக இருக்கும். சந்திரன் சரியில்லை என்றால் கொஞ்சம் கஷ்ட ஜீவனம் தான் நடந்த வேண்டியிருக்கும்.

சந்திரன் சரியில்லை என்றாலும் கூட அதனை சரி செய்தாவது நாம் முன்னேறி  தானே ஆகவேண்டும். உங்களின் வாழ்க்கை சரியில்லை என்று நினைப்பவர்கள் உங்களின் பிறந்த ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சந்திரன் எங்கு உள்ளது சந்திரன் வளர்பிறை சந்திரனாக இரு்கின்றதா அல்லது தேய்பிறை சந்திரனாக இருக்கின்றதா என்று பாருங்கள். 

சந்திரன் சரியில்லை என்று நினைப்பவர்கள் உடனே என்னை தொடர்புக்கொண்டு அதற்கு என்ன செய்யலாம் என்பதை ஆலோசனை செய்துக்கொள்ளுங்கள்.

ஆடி மாத அம்மன் பூஜைக்கு என்று இதுவரை பணம் அனுப்பாத நண்பர்கள் உடனே அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 2, 2016

இலவச சேவை


ணக்கம் !
          ஆடி அமாவாசை பூஜை முடிந்து உங்களுக்கு பதிவை தருகிறேன். அனைவரும் இன்று கொஞ்சம் பிஸியாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆடி அமாவாசை ஆடி பெருக்கு மற்றும் குரு பெயர்ச்சி என்று அதிக வேலை இருக்கும்.

கோயம்புத்தூர் பயணம் முடித்துவிட்டு தஞ்சாவூர் நேற்று வந்துவிட்டேன். முடிந்தளவுக்கு நண்பர்களை சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். பார்க்க முடியாதவர்களை விரைவில் அடுத்த பயணத்தில் சந்திக்கிறேன்.

ஒரு சிலர் இலவசம் என்று சொன்னாலும் ஒருவரும் அவரை சீண்ட மாட்டார்கள். ஒரு சிலர் இலவசம் என்று சொன்னாலும் அவரிடம் பணம் கொடுத்து தான் அனைத்தையும் பெறுவார்கள். நான் இலவசமாக சந்திக்கலாம் உங்களின் பிரச்சினைக்கு தீர்வு கேட்டுக்கொள்ளலாம் என்று சொன்னேன். சந்தித்த அனைவரும் பணத்தை கொடுக்கிறார்கள்.

நான் இலவசம் என்று சொன்னதே பலர் பயன்பெறவேண்டும் என்பதற்காக தான் சொல்லுகிறேன். இந்த தடவை நான் சந்தித்த பல நண்பர்களின் ஜாதகங்களுக்கு எளிய முறையில் அவர்களே பரிகாரம் செய்துக்கொள்வது போல தான் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன்.

பலர் இதுநாள் வரை பார்க்காமல் விட்டுவிட்டேன் என்று தான் சொன்னார்கள். எளிமையாக செய்யவேண்டிய விசயத்தை கூட செய்யாமல் விட்டு இருக்கின்றார்கள். அதனை அவர்கள் செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்ககூடும். இதுவரை என்னை சந்திக்காமல் இருக்கும் அனைவரும் ஒரு முறை உங்களின் ஜாதகத்தை என்னிடம் காட்டி பலன் கேட்டுக்கொள்ளுங்கள்.

இலவச சேவையில் பலர் பார்க்கவேண்டும் என்று தான் நினைக்கிறேன். அதோடு உங்களுக்கு தெரிந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் இதனை சொல்லி அவர்களும் பயன்பெற உதவுங்கள்.

இலவச சேவை எந்த வித லாபநோக்கின்றி செய்யப்படுவது அதில் பரிகாரம் உங்களுக்கு எளிதில் சொல்லப்படும். எனக்கு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்பதற்க்காக இதனை செய்யவில்லை அதனால் தாராளமாக பிறர்க்கும் இது கிடைக்கவேண்டும் என்பதற்க்காக அடுத்தவர்களிடம் சொல்லுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 1, 2016

அம்மன் பூஜை


வணக்கம்!
          ஆடி மாதம் அம்மனுக்கு என்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் பூஜை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு சில விஷேச நாட்களிலும் பூஜை செய்துக்கொண்டு வருகிறேன். 

நமது தளத்தை படிக்கும் நண்பர்களிடம் ஆடி மாதம் மட்டும் அம்மன் பூஜைக்கு என்று பணம் செலுத்துங்கள் என்று சொல்லுவது உண்டு. பல வருடங்களாக நமது நண்பர்களும் இதற்கு பணம் செலுத்தி வருகின்றனர்.

இந்த வருடமும் நமது அம்மன் பூஜைக்கு என்று நமது தளத்தை பார்வையிடும் நண்பர்கள் தங்களால் முடிந்த தொகையை அனுப்பி வையுங்கள். எந்த வித கூச்சமும் இல்லாமல் உங்களால் முடிந்த சிறுதொகையும் அனுப்புங்கள். ஒரு சில நண்பர்கள் கூச்சப்பட்டு இந்த பணத்தை எல்லாம் அனுப்பலாமா என்று யோசிப்பது எனக்கு தெரிந்தது. அதனை எல்லாம் விட்டுவிட்டு உங்களால் முடிந்ததை அனுப்புங்கள்.

பல நண்பர்கள் அம்மன் ஹோமத்திற்க்கு பணம் அனுப்பி வைத்திருந்தனர். அதேப்போல் அம்மன் பொதுபூஜைக்கு பணம் அனுப்புங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வருகின்ற பத்தாம் தேதிக்குள் அம்மன் பூஜை நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, July 31, 2016

சூரியன்


ணக்கம்!
          சூரியன் ஒருவருக்கு மறைந்தால் என்ன நடக்கும் என்பதை கடந்த சூரியன் பதிவில் சொல்லிருந்தேன். சூரியன் ஒருவருக்கு நன்றாக இருந்தால் அந்த நபருக்கு அரசாங்க வழியில் நல்லது நடக்கும்.

அரசாங்க ஊழியர்கள் என்று எடுத்துக்கொண்டாலே அவர்களுக்கு சூரியன் கிரகம் நன்றாக இருக்கு்ம். சோதிடம் உண்மை என்று உரைக்க அரசாங்க ஊழியர்களில் ஜாதகத்தை எடுத்து பார்த்தாலே புரியும். சூரியன் நல்ல நிலைமையில் அவர்களுக்கு இருக்கும்.

அரசாங்க ஊழியர்கள் அல்லாதவர்களுக்கும் ஒரு சில ஜாதகர்களுக்கு சூரியன் நன்றாக இருக்கும். அவர்கள் அரசாங்கம் வழியில் ஏதாே ஒரு வழியில் நன்றாக சம்பாதிப்பார்கள். 

ஒரு சிலருக்கு ஒரு மாதத்தில் மட்டும் பிரச்சினை அதிகம் இருக்கும் அவர்களுக்கு அந்த மாதத்தில் கோச்சாரப்படி சூரியன் இருக்கும் வீடு சரியில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

சூரியனை வைத்து எல்லாம் யார் பலன் சொல்லுகின்றார்கள் அனைத்தையும் பார்த்தால் ஒரு சில நேரத்தில் நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களின் ஜாதகத்தை எடுத்து சூரியன் எங்கு இருக்கின்றது என்று பாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு