வணக்கம் !
ஆடி அமாவாசை பூஜை முடிந்து உங்களுக்கு பதிவை தருகிறேன். அனைவரும் இன்று கொஞ்சம் பிஸியாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆடி அமாவாசை ஆடி பெருக்கு மற்றும் குரு பெயர்ச்சி என்று அதிக வேலை இருக்கும்.
கோயம்புத்தூர் பயணம் முடித்துவிட்டு தஞ்சாவூர் நேற்று வந்துவிட்டேன். முடிந்தளவுக்கு நண்பர்களை சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். பார்க்க முடியாதவர்களை விரைவில் அடுத்த பயணத்தில் சந்திக்கிறேன்.
ஒரு சிலர் இலவசம் என்று சொன்னாலும் ஒருவரும் அவரை சீண்ட மாட்டார்கள். ஒரு சிலர் இலவசம் என்று சொன்னாலும் அவரிடம் பணம் கொடுத்து தான் அனைத்தையும் பெறுவார்கள். நான் இலவசமாக சந்திக்கலாம் உங்களின் பிரச்சினைக்கு தீர்வு கேட்டுக்கொள்ளலாம் என்று சொன்னேன். சந்தித்த அனைவரும் பணத்தை கொடுக்கிறார்கள்.
நான் இலவசம் என்று சொன்னதே பலர் பயன்பெறவேண்டும் என்பதற்காக தான் சொல்லுகிறேன். இந்த தடவை நான் சந்தித்த பல நண்பர்களின் ஜாதகங்களுக்கு எளிய முறையில் அவர்களே பரிகாரம் செய்துக்கொள்வது போல தான் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன்.
பலர் இதுநாள் வரை பார்க்காமல் விட்டுவிட்டேன் என்று தான் சொன்னார்கள். எளிமையாக செய்யவேண்டிய விசயத்தை கூட செய்யாமல் விட்டு இருக்கின்றார்கள். அதனை அவர்கள் செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்ககூடும். இதுவரை என்னை சந்திக்காமல் இருக்கும் அனைவரும் ஒரு முறை உங்களின் ஜாதகத்தை என்னிடம் காட்டி பலன் கேட்டுக்கொள்ளுங்கள்.
இலவச சேவையில் பலர் பார்க்கவேண்டும் என்று தான் நினைக்கிறேன். அதோடு உங்களுக்கு தெரிந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் இதனை சொல்லி அவர்களும் பயன்பெற உதவுங்கள்.
இலவச சேவை எந்த வித லாபநோக்கின்றி செய்யப்படுவது அதில் பரிகாரம் உங்களுக்கு எளிதில் சொல்லப்படும். எனக்கு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்பதற்க்காக இதனை செய்யவில்லை அதனால் தாராளமாக பிறர்க்கும் இது கிடைக்கவேண்டும் என்பதற்க்காக அடுத்தவர்களிடம் சொல்லுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
i missed you iyya from palladam
Post a Comment