வணக்கம்!
கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனை வாசம் ஆகிவிட்டது. அதனை முடித்து நேற்று மாலை வந்தால் கடுமையான ஜலதோஷம் வந்தது அதனால் பதிவை தரமுடியவில்லை. ஆன்மீக அனுபவகளிலும் பதிவை தரமுடியவில்லை தொடர்ந்து பதிவை எப்படியும் கொடுத்துவிடுவேன் இந்த சூழ்நிலையால் பதிவை தரமுடியவில்லை. சோதிடபலன் கூட சொல்லமுடியவில்லை நாளையில் இருந்து தான் ஆரம்பிக்கவேண்டும்.
நோயை காட்டும் ஆறாவது இடத்திற்க்கும் மருத்துவமனையை காட்டும் பனிரெண்டாவது வீட்டிற்க்கும் எப்படியும் தகுந்த மாற்று ஏற்பாடு செய்துவிடுவேன். கொஞ்ச சொந்த வேலை அதிகம் இருந்த காரணத்தால் இதனை செய்யாமல் விட்டுவிட்டேன். மாதம் தோறும் இதற்கு என்று ஒரு ஏற்பாடு இருக்கும் ஆனால் இதனை விட்டுவிட்டதால் கொஞ்ச செலவு அதிகமாக போய்விட்டது.
ஆறாவது வீடாக நோயை காட்டுவதால் அந்த இடத்திற்க்கு ஒரு கடுமையான தெய்வத்திற்க்கு அதாவது கோரமாக இருக்கும் தெய்வத்திற்க்கு ஒரு பூஜை அல்லது அந்த பூஜையை செய்ய காணிக்கையை அனுப்பிவிடுவேன்.
பனிரெண்டாவது வீட்டிற்க்கு என்று மருத்துவமனையில் இருக்கும் நபர்களுக்கு ஏதாவது பண உதவி செய்வது உண்டு இதனை விட்டதால் மடக்கி போட்டு படுத்தி எடுத்துவிட்டது.
நடக்கும் ஒவ்வொரு அனுபவத்திலும் பாடம் கற்கிறோம். மருத்துவமனையில் இருந்த பொழுது அவசரமாக வந்த நோயாளிக்கு அதுவும் குழந்தை நோயாளிக்கு நம்மால் முடிந்த பிராத்தனையை செய்ய முடிந்தது. அதோடு பல பேருக்கு தன்னால் முடிந்த பணஉதவியை செய்ய முடிந்தது.
நடப்பது நல்லதற்க்கே என்று விட்டுவிட்டு இனி தொடர்ந்து பதிவை தருவதற்க்கு அம்மனை பிராத்திக்கிறேன். வரும் புதன்கிழமை அம்மன் பூஜை வைக்கலாம் என்று தீர்மானித்து இருக்கிறேன். உடல்நிலை சரியாவிட்டால் உறுதியாகி அறிவிப்பை வெளியிடுகிறேன்.
மருத்துவமனையில் இருந்தபொழுது அவசர உதவிக்கு என்று மதுரையை சேர்ந்த நண்பர் காேபி அவர்கள் உதவி செய்தார். அவர்க்கு தான் அனைத்து புண்ணியமும் சேரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
அய்யா
தாங்கள் நலம் பெற அம்மனை வேண்டிக்கொள்கிறேன்.
Post a Comment