Followers

Friday, August 5, 2016

செல்வத்தை தரும் சுக்கிரன்


வணக்கம்!
          வெள்ளிக்கிழமை என்றாலே அது ஒரு தனித்துவம் உடைய நாளாக தான் இருக்கின்றது அதுவும் ஆடி வெள்ளி சொல்லிக்கொள்ளவே தேவையில்லை மிகுவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கின்றது.

அம்மன் என்பதற்க்கு மட்டும் காரணமில்லை சுக்கிரன் தான் இதற்கு அதிக காரணமாக இருக்கின்றார். அந்தந்த நாளை அந்த கிழமையின் அதிபர் அதிகமாக முடிவு செய்கிறார் அந்த வகையில் வெள்ளிக்கிழமை  சுக்கிரனின் நாளாக வருகின்றது அல்லவா.

சுக்கிரன் என்றாலே அள்ளி அள்ளி கொடுப்பவர் அல்லவா. சுக்கிரனின் காரத்துவம் உடைய அம்மன் வழிபாடு செய்யும்பொழுது சுக்கிர கிரகம் நன்றாக பலம் அடைந்து நமக்கு நிறைய செல்வவளம் கிடைக்கிறது.

செல்வத்திற்க்குரிய மகாலட்சுமி பூஜை எல்லாம் வெள்ளிக்கிழமை தானே செய்கிறார்கள். அந்தளவுக்கு செல்வவளத்தை அள்ளிக்கொடுக்கின்ற ஆற்றல் பெற்ற கிரகம் சுக்கிரன் கிரகம்.

நம்மால் வெள்ளிக்கிழமை அன்று ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நமக்கு எப்படியாவது ஒரு வழியில் செல்வவளம் வந்துக்கொண்டே இருக்கும். இதுவரை செய்யாமல் இருந்தாலும் இனிமேலாவது ஆரம்பியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: