Followers

Wednesday, August 8, 2012

புதன் பரிகாரம்



வணக்கம் நண்பர்களே இப்பதிவில் ஆறாம் வீட்டு தசாவில் புதன் சம்பந்தப்பட்டு நடக்கும் போது என்ன பரிகாரம் செய்தால் பலன் அளிக்கும் என்று பார்க்கலாம். புதன் ஆறாம் வீட்டு தசாவில் சம்பந்தப்பட்டு நடந்தால் வரும் விவகாரம் அதிக புத்திசாலிதனமாக தான் இருக்கும். 

புத்திசாலித்தனத்திற்க்கு அதிபதி புதன். அவன் வில்லனாக மாறும் போது வரும் இடஞ்சல் எப்படி இருக்கும்.  கத்தி அருவாளேடு வருபவனை சமாளித்து அனுப்பிவிடலாம் நல்ல அறிவை பயன்படுத்தி நம்மிடம் சண்டைக்கு வருபவனை சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம்தானே. 

இவர் இரட்டை வேடம் போடுபவர். அவரின் செயல்பாடும் அப்படி தான் இருக்கும். நம்மிடம் ஒன்று பேசிவிட்டு வெளியில் போய் நம்மையை அழிக்கும் வேலையில் இறங்கிவிடுவார். அதனால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மை பயக்கும்.

இப்பொழுது நாம் புதனுக்குரிய பரிகாரத்தை பார்க்கலாம். புதன்கிழமையில் விரதம் இருந்து விஷ்ணு  வழிபாடு செய்தல் நல்லது. வசதி வாய்ப்பு இருந்தால் சுதர்சன ஹோமம் செய்யலாம் அல்லது சுதர்சன எந்திரத்தை வைத்து வழிபாடு செய்யலாம். 

இப்பொழுது வரும் எந்திரங்கள் எல்லாம் கடையில் இருந்து வாங்கி வந்து வைக்கிறார்கள் அப்படி செய்வது தவறு உங்கள் ஏரியாவில் நல்ல முறையில் எந்திரம் எழுத தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் சென்று எழுதி வாங்கி வைத்து பூஜை. செய்யுங்கள். பச்சை நிறத்தை பயன்படுத்தலாம். புதன்கிழமை பச்சை நிற ஆடை அணிந்து கொள்ளுங்கள்.

புதன் வில்லனாக வருவதால் அவரை சமாளிக்க சுதர்சன எந்திரம் அல்லது சுதர்சன ஹோமம் நல்ல பயன் அளிக்கும்.


நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

Udhayaganesh said...

Good work!!
Will share your Blog to friends circle who realy get benifit from this.