Followers

Tuesday, July 30, 2019

ஈசானியத்தின் அருள்


வணக்கம்!
          ஈசானியத்தைபற்றி நாம் பார்த்தோம். இதில் தாயை கவனிக்கவில்லை என்றால் உங்களுக்கு ஈசானிய மூலை சரியாக அமையாது என்று சொல்லிருக்கிறேன். இதனை விட முக்கியமான ஒன்றை சொல்லுகிறேன்.

உங்களின் வீட்டில் இல்லறத்தில் இருக்கும் பெண். குடும்ப தலைவி அதிகமாக அனைத்து விசயத்திலும் தலையீடு செய்தால் அதாவது அவர் மீனாட்சி ஆட்சி நடத்தினாலும் ஈசானியத்தில் இருந்து உங்களுக்கு அருள் கிடைக்காது.

இன்றைய காலத்தில் அனைத்து வீட்டிலும் பெண்களின் ஈகோ அதிகமாக இருக்கின்றது என்று சொல்லலாம். பெண்களின் தலையீடு அதிகமாக இருக்கும் வீட்டை நீங்கள் பார்த்தால் ஒன்று இந்த தலைமுறையிலேயே அந்த வீடு அடிப்பட்டுவிடும். 

ஒரு சில வீடுகளில் அவர்களின் வாரிசுகளின் வாழ்க்கை சரியாக இருக்காது. வாரிசுகளுக்கு ஈசானியத்தில் இருந்து சக்தி கிடைக்காது. அவர்கள் வாழும் வீடும் சரியாக இருக்காது. இதனை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் உங்களின் வீட்டை நீங்கள் சரி செய்துக்கொள்ளுங்கள்.

நாளை ஆடி அமாவாசை உங்களின் முன்னோர்களுக்காக நீங்கள் நிறைவேற்றும் ஒரு கடமையை செய்யும் நாள் என்பதால் உங்களின் கடமையை நிறைவேற்ற மறக்கவேண்டாம். உங்களின் முன்னோர்களுக்காக சிறப்பு பூஜை இருக்கின்றது இதிலும் இணைத்துக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 29, 2019

ஆடி மாத அமாவாசை


வணக்கம்!
          ஆடி மாத அமாவாசை அன்று இரவு சிறப்பு அம்மன் யாகம் இருக்கின்றது. 

ஆடி மாத அமாவாசை அன்று சிறப்பு பூஜை ஒன்று இருக்கின்றது. இது பூஜை முன்னோர்களுக்கு என்று இதனை செய்ய இருக்கின்றோம். இந்த பூஜையின் புகைப்படங்கள் வெளியிடபடாது. இதில் கலந்துக்கொள்ளும் நபர்கள் தங்களின் முன்னோர்களுக்கு அன்று நீங்கள் தனியாக தர்பணம் கொடுத்துவிட்டு அவர்களின் பெயர் மற்றும் உங்களின் பெயரை எனக்கு அனுப்பி வைத்தால் இந்த முன்னோர்களுக்கு செய்யும் பூஜையில் அதில் இணைத்துக்கொள்ளலாம். 

உங்களின் பெயர் மற்றும் நட்சத்திரம் யாருக்கு நீங்கள் கொடுத்தீர்கள் . உதாரணத்திற்க்கு தந்தைக்கு செய்யவேண்டும் என்று நீங்கள் சொன்னால் போதும். இறந்தவர்களின் பெயர் கூட வேண்டியதில்லை உங்களுக்கு என்ன உறவு என்பதை மட்டும் சொல்லலாம்.

இது தற்பொழுது ஆரம்பிக்கப்பட்ட புதிய பூஜை. பலர் தங்களின் முன்னோர்களுக்கு என்று செய்யவேண்டும் என்று என்னை கேட்டுக்கொண்டதால் இதனை செய்கிறேன். முதலில் உங்களின் முன்னோர்களுக்கு நீங்கள் அன்று விரதம் இருந்து தர்பணம் கொடுத்து இருக்கவேண்டும்.

உங்களின் உறவிற்க்கு நான் தர்பணம் கொடுக்கவில்லை மாறாக ஒரு ஆத்மா சாந்தி பூஜை செய்யபட இருப்பதால் இதனை கேட்கிறேன். ஆத்மா சாந்தி பூஜை செய்ய இருப்பதே பலர் கேட்டுக்கொண்டதால் இதனை செய்கிறேன். இதற்கு கட்டணம் செலுத்தவேண்டியதில்லை நமது நண்பர்களுக்காக இது இலவசமாக செய்யபட இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, July 28, 2019

தீர்வுகள் பகுதி 8


வணக்கம்!
          அனைவரும் என்ன நினைப்பார்கள் என்ன சொல்லுவார்கள் நான் நன்றாக இருக்கவேண்டும். சுகமாக இருக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். உங்களைப்பற்றி தெரிந்தவர்கள் உங்களை முதலில் பார்க்கும்பொழுது என்ன கேட்பார்கள் நலமாக இருக்கின்றீர்களா இதனை தான் கேட்பார்கள்.

உங்களின் ஜாதகத்தில் சுகம் என்று வந்தாலே அது நான்காவது வீட்டை குறிக்கும். நான்காவது வீடு நன்றாக இருந்தால் அவர் சுகமாக இருக்கின்றார் என்று அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். நான்காவது வீடு நன்றாக இருக்கும் வரை தான் அவர் சுகமாக இருப்பார்.

முதலில் லக்கனாதிபதியை நன்றாக இருந்தால் தானே சுகமாக இருக்கமுடியும் நீங்கள் நான்காவது வீட்டை சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம். நான்காவது வீடு தான் மிக மிக முக்கியம் அதன்பிறகு நீங்கள் எந்த வீட்டையும் பார்த்துக்கொள்ளலாம்.

நான்காவது வீடு அம்மாவைப்பற்றி காட்டக்கூடிய வீடு. காலபுருஷப்படி நான்காவது வீடாக கடக இராசியை வைத்திருக்கின்றார்கள். கடக இராசி அதிபதி சந்திரன். சந்திரன் நன்றாக இருந்தால் அம்மா நன்றாக இருப்பார்கள்.

ஒருவர் முன்ஜென்மத்தில் அம்மாவை தவறாக நடத்திருந்தால் அல்லது அம்மாவை கவனிக்காமல் விட்டு இருந்தால் அவர்களுக்கு ஈசானியம் நன்றாக அமையாது என்று வாஸ்துவில் சொல்லிருப்பார்கள். ஈசானிய மூலை உங்களின் வீட்டில் நன்றாக அமைந்துவிட்டால் நீங்கள் அனைத்து சுகத்தையும் அனுபவித்துவிடமுடியும். ஒன்றோடு ஒன்று தொடர்பை பற்றி சொல்லுவதற்க்கு தான் மேலே சொன்ன சோதிட தகவலை தந்தேன். 

ஈசானியம் வழியாக தான் உங்களுக்கு சக்தி கிடைக்கும். தெய்வத்தின் அருள் கிடைக்கும். தெய்வத்தின் அருள் கிடைத்துவிட்டால் உங்களின் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷமும் போய்விடும் நீங்களும் நன்றாக வாழ்வீர்கள்.உங்களுக்கு நாம் கொடுக்கும் தீர்வு நீங்கள் போன ஜென்மத்தில் உள்ள குறைகளை களைய வேண்டாம். இந்த ஜென்மத்தில் உங்களின் தாயாரை நன்றாக கவனித்தாலே போதும். இதற்கு தீர்வு இதுவாக மட்டுமே இருக்கமுடியும். அனைவரும் எளிதாக இதனை செய்து சரி செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 26, 2019

சோதிட தொழில்


வணக்கம்!
         தற்பொழுது எல்லாம் சோதிடம் நன்கு தெரிந்தவர்கள் தான் சோதிடம் பார்க்க வருகின்றனர். சோதிடத்தைப்பற்றி நல்ல அறிவை பெற்று இருக்கின்றனர். இது ஆரோக்கியமான ஒன்றாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். தன்நிலை மற்றும் தன்னுடைய குடும்பத்திற்க்கு ஒரு வழிகாட்டியாக இவர்கள் இருப்பார்கள்.

ஒரு சிலர் ஆர்வகோளாறு காரணமாக சோதிடத்தை நன்கு தெரிந்துக்கொண்டு சோதிட தொழில் செய்யலாமா என்று நினைப்பதும் உண்டு. நான் என்ன சொல்லுவேன் என்றால் உங்களுக்கு இந்த வேறு எந்த ஒரு தொழிலும் செய்யமுடியாமல் வழியே இல்லை என்ற ஒரு நிலை வரும்பொழுது மட்டுமே இந்த தொழிலை தேர்ந்தெடுங்கள்.

இதனைப்பற்றி பல்வேறு பதிவுகளை தந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் சொல்லுவதற்க்கு காரணம் இருக்கின்றது. சோதிடதொழிலில் போட்டியை உருவாக்க கூடாது என்ற நினைப்பில் இதனை எழுதவில்லை. நல்ல வாழ்க்கையை நீங்கள் வாழவேண்டும் என்ற நினைப்பில் இதனை எழுதுகிறேன். முடிந்தவரை போராடி வேறு வேலையை பாருங்கள்.

ஒரு சாதாரணமான தொழிலுக்கும் இந்த தொழிலுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கின்றது. முதலில் செய்யும்பொழுது நன்றாகவே இருக்கும் நாட்கள் செல்ல செல்ல உங்களுக்கே நான் சொல்லுவது புரிய வரும். அனுபவத்தில் தான் என்ன என்பது புரியும்.

அம்மன் கோவில் கட்டும்பணிக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வையுங்கள். இந்த பணிக்காக தான் நிறைய வேலை செய்து வருகிறேன். அம்மன் கோவிலுக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்கி வைத்திருக்கிறேன். விரைவில் கட்டுமான பணி தொடங்க இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 25, 2019

தீர்வுகள் பகுதி 7


வணக்கம்!
          ஒருவரின் தலைமுறையைப்பற்றி நமக்கு நன்கு தெரியும்பொழுது மட்டுமே அவர்கள் என்ன செய்திருக்கிறார் அவர்களால் தற்பொழுது நமக்கு என்ன பிரச்சினை வரும் என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தமாதிரி நாம் பரிகாரங்களை எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணத்திற்க்கு நமது குழந்தை ஊமையாக இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். ஒருவரின் குழந்தை ஊமையாக இருந்தால் உடனே அவர்களின் வம்சத்தில் இப்படி யாரும் இல்லை இந்த குழந்தைக்கு மட்டும் எப்படி ஊமையாக இருக்கின்றான் என்று எண்ணுவார்கள்.

ஐந்து தலைமுறைக்கு முன்னாடி உங்களின் பரம்பரையில் ஒருவர் ஊமையாக இருந்திருப்பார். ஐந்து தலைமுறையாக உள்ள (மரபணு)ஜீன் தூங்கிக்கொண்டு இருந்திருக்கும். திடீர் என்று இந்த தலைமுறையில் ஜீன்(மரபணு) விழிப்படைந்து வந்தவுடன் ஊமை வந்திருக்கும். இது தான் அறிவியில். அறிவியல் இப்படி தான் வருகின்றது என்று சொல்லுகின்றது.

நாம் என்ன செய்திருப்போம் நம்முடைய தாத்தா மட்டும் தான் நமக்கு தெரிந்து இருக்கும் அதற்கு முன்னால் உள்ளவர்களை பற்றி தெரிய வாய்ப்பில்லாமல் இருக்கும். நம்முடைய பரம்பரையில் இது இருந்தது தற்பொழுது வந்திருக்கின்றது.

சோதிடத்தில் இந்த பாதிப்புகள் எல்லாம் பித்ரு தோஷத்தால் பெரும்பாலும் வரும். ராகு கேதுக்கள் இதனை முக்கியமாக குறிக்கும் என்பது சோதிட விதி. நாம் என்ன சொல்லுவோம் பையனின் அப்பா நன்றாக இருக்கின்றார் பையனின் தாத்தா நன்றாக இருக்கின்றார் ஆனால் இவன் மட்டும் எப்படி என்பது தான் மண்டைப்போட்டு குழப்பிக்கொண்டு இருப்பார்கள்.

ஒரு சில இடத்தில் பையன் சித்தப்பா போல இருப்பார். உடனே சந்தேகம் வந்துவிடும். சித்தப்பா போல இருக்கின்றான் என்று சொல்லுவார்கள். அனைத்தும் ஜீனின் வேலையாக தான் இருக்கும். இதற்கு என்ன செய்யலாம் என்பதை தான் சோதிடத்தில் சொல்லுவார்கள்.

நீங்கள் உங்களின் முன்னோர்களுக்கு ஒழுங்காக திதியை கொடுங்கள் . அவர்கள் உங்களின் தலைமுறையை தீர்மானிப்பார்கள் என்று சொல்லுவார்கள். பல சோதிடர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை வைப்பார்கள் ஆனால் உண்மை என்ன என்றால் உங்களின் முன்னோர்களுக்கு நீங்கள் செய்யும் திதி காரியங்கள் நன்றாக இருந்தால் உங்களின் தலைமுறையில் உள்ள குறைகள் கலையப்பட்டு நல்ல தலைமுறையாக உருவாகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 23, 2019

தீர்வுகள் பகுதி 6


வணக்கம்!
         பெரும்பாலும் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய அந்தந்த காலக்கட்டத்தில் என்ன பிரச்சினை என்பதை மட்டும் ஆராய்ந்து அதற்கு தகுந்தார்போல் தீர்வு சொல்லுவது உண்டு. ஒருவரின் பூர்வ ஜென்ம கர்மாவையும் நன்றாக ஆராய்ந்து அதற்கு நாம் தீர்வை சொன்னால் வந்தவர் சரியான ஒரு தீர்வை பெற்றுவிடுவார்.

பூர்வஜென்மத்தில் உள்ள குறைகளை களையும்பொழுது அவர்களுக்கு தானாகவே நல்லது நடக்க ஆரம்பித்துவிடும். பூர்வபுண்ணிய கர்மா எந்தளவுக்கு இவருக்கு இருக்கின்றது அதற்கு தீர்வை நாம் கண்டுபிடித்தால் ஜாதகர் நல்ல பலனை அனுபவிக்கலாம்.

பெரும்பாலான பதிவுகள் பூர்வபுண்ணியத்தைப்பற்றி நாம் எழுதியிருக்கிறோம். இந்த பதிவுகளை எல்லாம் நீங்கள் தேடிப்படித்தாலே உங்களுக்கு பூர்வபுண்ணியத்தைப்பற்றி ஒரு நல்ல ஐடியா கிடைத்துவிடும்.

உங்களின் ஜாதகத்தை எடுத்து ஐந்தாவது வீடாக எந்த வீடு வருகின்றது என்பதை பார்க்கவேண்டும். ஐந்தாவது வீட்டிற்க்கு எந்த கிரகத்தின் பார்வைபடுகின்றது என்பதையும் பாருங்கள். ஐந்தாவது வீட்டில் எந்த கிரகம் இருக்கின்றது என்பதையும் பாருங்கள்.

ஐந்தாவது வீடு எந்தளவுக்கு பாதிப்படைந்து இருக்கின்றது என்பதை பார்த்தாலே உங்களுக்கு தெரிந்துவிடும். ஐந்தாம் பாவம் நல்ல புண்ணியங்களை பெற்று வந்தால் பெரும்பாலும் ஐந்தாவது வீட்டில் தீய கிரகங்கள் இருக்காது.

ஐந்தாவது பாவத்திற்க்கு நல்ல கிரகத்தின் பார்வை கிடைத்தால் நல்லது. குருவின் பார்வை பட்டாலும் நல்லது. இது எப்படிப்பட்ட பலனை உங்களுக்கு தரும் என்றால் உங்களின் ஊரில் நீங்கள் தான் தலைவராக இருப்பீர்கள்.

ஐந்தாவம் பாவம் கெட்டால் உங்களின் சொந்த ஊரில் நீங்கள் இருக்கமாட்டீர்கள். உங்களின் பங்காளியே உங்களை எதிர்ப்பவர்களாக இருப்பார்கள். சொத்து விசயத்தில் உஷாராக இருக்கவேண்டும். சொந்த சொத்தில் பிரச்சினை வரும்.

ஐந்தாவது பாவம் நன்றாக இருக்க என்ன வழி என்று சொல்லுங்கள் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. உங்களின் ஜாதகத்தை எடுத்து ஐந்தாவது கிரகம் எது என்று பார்த்து அந்த காரத்துவம் உடையவர்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். இது ஒரு நல்ல பரிகாரமாக அமையும்.

ஐந்தாவது வீடு அல்லது குரு சம்பந்தப்பட்ட காரத்துவம் உடையவர்களுக்கு நீங்கள் சென்று உதவுவது நல்லது. ஒரு குருவை நீங்கள் ஏற்றுக்கொள்வதும் நல்லது. குலதெய்வத்தை வணங்கலாமே என்று செல்லவேண்டாம் கொஞ்ச காலம் இதனை தவிர்த்துவிட்டு மேலே சொன்னதை மட்டும் செய்து வாருங்கள்  அதன்பிறகு குலதெய்வத்தை வணங்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 22, 2019

சக்தியை தரும் சுக்கிரன்


வணக்கம்!
          ஒரு ஆண் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்க்கு அவனுக்கு ஒரு பெண் கண்டிப்பாக தேவைப்படும். இதனை பல காலங்களாக சொல்லிக்கொண்டு வருகின்றனர்.  இன்று குடும்பங்களில் உள்ள பெண்கள் இல்லை என்றால் ஒரு ஆண் கூட உறுப்படமாட்டார்கள். பெண்களின் உதவியால் தான் ஒரு ஆண் முன்னேற்றம் காண்கிறான்.

உங்களின் மனைவிக்கு முதல் மரியாதை கொடுத்து அவர்களின் அன்பை நீங்கள் பெற்றால் உங்களின் வாழ்க்கை சிறக்கும். உங்களின் துணையின் முழு சக்தியும் உங்களுக்கு கிடைக்கும்பொழுது நீங்கள் சிறப்பாக செயல்படமுடியும்.

உங்களின் அருகில் இருக்கும் பெண்கள் மற்றும் அலுவலகத்தில் உள்ள பெண்களின் அன்பையும் பெறவேண்டும். உங்களால் அவர்களுக்கு தொந்தரவை கொடுக்காமல் நீங்கள் அன்போடு இருக்கவேண்டும். ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் வெளி பெண்களின் சக்தியும் நீங்கள் வீணடித்துவிடகூடாது என்பதற்காக சொல்லுகிறேன்.

சோதிடத்தில் இதில் என்ன இருக்கின்றது என்றால் பெண்களை குறிக்கும் கிரகம் சுக்கிரன். சுக்கிரனின் முழுமையான ஆற்றலை கொண்ட பெண்களின் சக்தியை நீங்கள் பெற்றுவிட்டால் சுக்கிரன் உங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார்கள்.

பெரும்பாலும் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை கூட நீங்கள் பழகும் பெண்களால் நீக்கமுடியும். அவர்கள் நீங்கள் நன்றாக வாழவேண்டும் என்று மனது வைத்துவிட்டால் ஜாதகத்தை மீறி நீங்கள் செயல்படமுடியும். இனி உங்களின் கையில் தான் இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு