Followers

Thursday, July 25, 2019

தீர்வுகள் பகுதி 7


வணக்கம்!
          ஒருவரின் தலைமுறையைப்பற்றி நமக்கு நன்கு தெரியும்பொழுது மட்டுமே அவர்கள் என்ன செய்திருக்கிறார் அவர்களால் தற்பொழுது நமக்கு என்ன பிரச்சினை வரும் என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தமாதிரி நாம் பரிகாரங்களை எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணத்திற்க்கு நமது குழந்தை ஊமையாக இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். ஒருவரின் குழந்தை ஊமையாக இருந்தால் உடனே அவர்களின் வம்சத்தில் இப்படி யாரும் இல்லை இந்த குழந்தைக்கு மட்டும் எப்படி ஊமையாக இருக்கின்றான் என்று எண்ணுவார்கள்.

ஐந்து தலைமுறைக்கு முன்னாடி உங்களின் பரம்பரையில் ஒருவர் ஊமையாக இருந்திருப்பார். ஐந்து தலைமுறையாக உள்ள (மரபணு)ஜீன் தூங்கிக்கொண்டு இருந்திருக்கும். திடீர் என்று இந்த தலைமுறையில் ஜீன்(மரபணு) விழிப்படைந்து வந்தவுடன் ஊமை வந்திருக்கும். இது தான் அறிவியில். அறிவியல் இப்படி தான் வருகின்றது என்று சொல்லுகின்றது.

நாம் என்ன செய்திருப்போம் நம்முடைய தாத்தா மட்டும் தான் நமக்கு தெரிந்து இருக்கும் அதற்கு முன்னால் உள்ளவர்களை பற்றி தெரிய வாய்ப்பில்லாமல் இருக்கும். நம்முடைய பரம்பரையில் இது இருந்தது தற்பொழுது வந்திருக்கின்றது.

சோதிடத்தில் இந்த பாதிப்புகள் எல்லாம் பித்ரு தோஷத்தால் பெரும்பாலும் வரும். ராகு கேதுக்கள் இதனை முக்கியமாக குறிக்கும் என்பது சோதிட விதி. நாம் என்ன சொல்லுவோம் பையனின் அப்பா நன்றாக இருக்கின்றார் பையனின் தாத்தா நன்றாக இருக்கின்றார் ஆனால் இவன் மட்டும் எப்படி என்பது தான் மண்டைப்போட்டு குழப்பிக்கொண்டு இருப்பார்கள்.

ஒரு சில இடத்தில் பையன் சித்தப்பா போல இருப்பார். உடனே சந்தேகம் வந்துவிடும். சித்தப்பா போல இருக்கின்றான் என்று சொல்லுவார்கள். அனைத்தும் ஜீனின் வேலையாக தான் இருக்கும். இதற்கு என்ன செய்யலாம் என்பதை தான் சோதிடத்தில் சொல்லுவார்கள்.

நீங்கள் உங்களின் முன்னோர்களுக்கு ஒழுங்காக திதியை கொடுங்கள் . அவர்கள் உங்களின் தலைமுறையை தீர்மானிப்பார்கள் என்று சொல்லுவார்கள். பல சோதிடர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை வைப்பார்கள் ஆனால் உண்மை என்ன என்றால் உங்களின் முன்னோர்களுக்கு நீங்கள் செய்யும் திதி காரியங்கள் நன்றாக இருந்தால் உங்களின் தலைமுறையில் உள்ள குறைகள் கலையப்பட்டு நல்ல தலைமுறையாக உருவாகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: