Followers

Wednesday, November 7, 2018

ஜாதக அனுபவம்


வணக்கம்!
          தற்பொழுது எல்லாம் சாேதிடம் பார்த்து சொல்லும் விதத்தில் பல மாறுதல்கள் வந்துவிட்டன. சோதிடபலன் பார்க்கும் வரும் நபர்களுக்கு அனைத்து தகவலும் நன்றாக தெரிந்துவிடுகின்றது. இதனை ஒரு சோதிடரின் வாயின் வழியாக கேட்டால் போதும் என்று தான் கேட்க வருகின்றனர்.

ஒரு சிலர் இதில் என்ன செய்கின்றார்கள் என்றால் எனக்கு சோதிடம் நன்றாக தெரிகின்றது என்ற நினைப்பில் சோதிடம் பலன் சொல்லும் சோதிடர்களின் வார்த்தையை அதிகம் கவனிப்பதில்லை. ஏற்கனவே எனக்கு இது தான் நடக்கும் என்று ஒரு தீர்மானித்தை வைத்துக்கொண்டு வந்துவிடுகின்றனர்.

சோதிடபலனை தீர்மானித்துவிட்டு சோதிடபலனை கேட்கும்பொழுது ஒன்று நடக்கின்றது அது எனக்கு ஒரு தசா நடக்கின்றது என்றால் இந்த தசா எனக்கு யோகத்தை தரும் என்று வரும் வாடிக்கையாளர்களே தீர்மானித்துவிடுகின்றனர். பலருக்கு இந்த இடத்தில் பிரச்சினை வருகின்றது.

தசா பலன் நமக்கு நல்லதை தான் தரும் என்பதை ஒரு போதும் நம்பிவிடகூடாது பலருக்கு தசாநாதன் சரியாக பலனை கொடுப்பதில்லை. சோதிடத்தில் நன்றாக ஆராய்ச்சி செய்யும்பொழுது இதனைபற்றி தெரியவரும். தசாநாதன் நன்றாக பலனை கொடுக்கவில்லை என்றால் அவர் நம்பி ஏமாந்து போய்விடுவார்கள். அதனால் சோதிடத்தை அவ்வளவு எளிதில் பார்த்துவிட்டு ஏமாந்துபோய்விடகூடாது. நன்றாக ஆராய்ந்து பார்த்தால் தான் அதனைப்பற்றி தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 6, 2018

நல்வாழ்த்துக்கள்

வணக்கம்!
          இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, November 5, 2018

லாபஸ்தானம்



வணக்கம்!
          லாபஸ்தானம் எனும் பதினோறாம் இடம் நன்றாக இருக்கும்பொழுது தான் ஒருவருக்கு லாபம் அதிகமாக சம்பாதிக்கமுடியும் என்று சொல்லுவார்கள். அனைவருக்கும் லாபஸ்தானம் என்பது நன்றாக அமைந்துவிடாது. ஒரு சிலருக்கு இந்த இடம் அருமையாக வேலை செய்துக்கொண்டு இருக்கும்.

லாபஸ்தானம் எனும் பதினோறாம் இடத்தில் அமைந்த கிரகங்கள் அது கெடுதலாக இருந்தாலும் எந்த கிரகமாக இருந்தாலும் அது நன்மையை செய்யும் என்பது சோதிட விதி. அனைத்து நேரத்திலும் இந்த கிரகங்கள் வேலை செய்வதில்லை என்பது தான் பலருக்கு இது அனுபவ உண்மையாக இருக்கின்றது.

சோதிடத்தில் ஒவ்வொரு காரியமும் வெற்றி பெறுவதற்க்கு பார்க்கும்பொழுது அது லாபஸ்தானத்தோடு சம்பந்தம் பெறும்பொழுது மட்டுமே அந்த கிரகம் வெற்றியை பெறும். அது லாப ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறவில்லை என்றால் வெற்றியை நோக்கி செல்லாது.

ஒரு மனிதன் எடுக்கும் அனைத்து காரியமும் வெற்றி பெறுவதில்லை. வெற்றி பெறுவதற்க்கு லாபஸ்தானம் வழிவிடுவதில்லை. நாம் பல வீடுகளைப்பற்றி அலசி ஆராய்ந்து பார்த்துக்கொண்டு இருப்போம் ஆனால் இந்த வீட்டை கொஞ்சம் அலட்சியமாகவே விட்டுவிட்டு சென்றுவிடுவோம்.

உங்களின் லாபஸ்தானம் நன்றாக இருந்தால் தான் அனைத்து காரியமும் வெற்றியை நோக்கி செல்லும். லாபஸ்தானம் சரியில்லை என்றால் கண்டிப்பாக அனைத்தும் தோல்வியை நோக்கியே  செல்லும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, November 4, 2018

கர்மத்தில் தர்மம்


வணக்கம்!
          ஒவ்வொரு தொழிலும் அதன் தோல்வியை சந்திக்க ஒரு சில காலம் எடுக்கும். காலசுழற்சியின் காரணமாக ஒரு தொழில் தோல்வி அடைவதற்க்கு என்று ஒரு சில காலம் எடுக்கும்பொழுது அதுவாகவே தோல்வி அடையும். மனிதர்களாலும் ஒரு தொழில் தோல்வி அடையும் அது மனிதர்கள் செய்யும் தவறால் நடப்பதாக இருக்கும்.

கர்மஸ்தானம் என்று சொல்லக்கூடிய பத்தாவது ஸ்தானத்தை வைத்து தொழில் செய்யும்பொழுது அதில் தர்ம நோக்கத்தோடும் அந்த தொழிலை செய்யும்பொழுது கண்டிப்பாக அது நீண்ட காலமாக செல்லும். தர்மம் இல்லாமல் அதர்மமாகவவே அது சென்றால் ஒரு சில காலக்கட்டத்தில் அந்த தொழில் தோல்வியை அடையும்.

கர்மஸ்தானத்தில் தர்மத்தை எப்படி செய்யமுடியும் அப்படி செய்தால் அது தோல்வியை சந்திக்காதா என்று கேட்கலாம். எல்லா நேரத்திலும் தர்மத்தையே செய்யதுக்கொண்டு இருக்கமுடியாது. பத்திற்க்கு ஒன்று என்ற கணக்கில் செய்யலாம்.

கர்மஸ்தானத்தில் தர்மம் என்று சொல்லுவது அந்த தொழிலை நேர்த்தியாக நடத்துவதிலும் இருக்கின்றது. ஒரு சிலருக்கு ஒரு தொழில் நன்றாக சென்றுக்கொண்டு இருக்கும். தொழில் நேர்த்தியாக சென்றுக்கொண்டு இருக்கும்பொழுது இவர்களே அந்த தொழிலை தவறான பாதைக்கு இழுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள் அதனாலும் அந்த தொழில் தோல்வியை சந்திக்கின்றது.

உங்களுக்கு எந்த தொழில் நன்றாக வருகின்றதோ அந்த தொழிலை கடைசி வரை செய்யலாம். உங்களின் கர்மப்படி அந்த தொழில் உங்களுக்கு அமைக்கின்றது அதனை விட்டுவிட்டு பல தொழிலும் கையில் பணமே இல்லாமல் அல்லது அடுத்த தொழிலில் அறிவு இல்லாமல் நுழைந்தால் கர்மமே உங்களை காவுவாங்கிவிடும்.

தீபாவளி போனஸ் இலவச சோதிட ஆலோசனைக்கு கூப்பிடலாம். அனைவருக்கும் தீபாவளிக்குள் இலவச சோதிட ஆலோசனை சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, November 2, 2018

தீபாராதனை மற்றும் நைவேத்தியம்


ணக்கம்!
          ஒரு படையல் போட்டு அல்லது ஒரு பூஜை செய்து அந்த பூஜைக்கு தீபாராதனையை காட்டுவோம். இந்த தீபாராதனையை காட்டிவிட்டு அந்த தீபாராதனை எரிந்துக்கொண்டு இருக்கும்பொழுதே நாம் நைவேத்தியத்தை எடுத்து சாப்பிட்டுவிடகூடாது.

கற்பூர தீபாராதனை காட்டிவிட்டு அந்த கற்பூரம் எரிந்துக்கொண்டு இருக்கும்பொழுது நாம் நைவேத்தியத்தை சாப்பிடாமல் அந்த கற்பூரம் அதுவாகவே அணைந்த பிறகு நைவேத்தியத்தை நீங்கள் எடுத்து சாப்பிடலாம் பிறர்க்கும் கொடுக்கலாம்.

பொதுவாகவே ஒரு தெய்வத்திற்க்கு தீபாராதனை காட்டும்பொழுதும் அல்லது ஏதோ ஒரு பூஜையை செய்த பிறகும் அதனை நாம் உடனே சாப்பிடாமல் அதனை ஒரு குறைந்தது மூன்று நிமிடமாவது சென்ற பிறகு சாப்பிட்டால் நல்லது.

தெய்வங்கள் வந்து நமது நைவேத்தியத்தை சாப்பிட்ட பிறகு அதாவது அதன் காரத்துவத்தை எடுத்துக்கொள்ளும். பெரும்பாலும் அதன் மணம் மற்றும் அதன் காரத்துவம் இனிப்பு அல்லது துவர்ப்பு என்று இருக்கும் இதனை தெய்வங்கள் நுகர்ந்த பிறகு நாம் சாப்பிட்டால் நல்லது.

தெய்வங்கள் அதனை வந்து சாப்பிடும்பொழுது அதனை உடனே எடுத்தால் அதனை சாப்பிடவிடாமல் செய்வது போல ஆகிவிடும் என்பதால் நீங்கள் மூன்று நிமிடத்திற்க்கு பிறகு எடுத்து சாப்பிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 1, 2018

சனியின் பார்வை சூரியன் மற்றும் சந்திரன்


வணக்கம்!
          ஒரு ஜாதத்தில் சனி மூன்றாம் பார்வையாக சூரியனை பார்க்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அதே சனி ஏழாம் பார்வையாக சந்திரனை பார்க்கிறது என்று வைத்துக்கொள்வோம். சூரியன் காட்டக்கூடிய காரத்துவம் தந்தை சந்திரன் காரத்துவத்தை காட்டக்கூடிய காரத்துவம் தாய். இந்த இரண்டு பேரில் யாருக்கு அதிக பாதிப்பு வரும்?

சனியின் மூன்றாம் பார்வைக்கு அதிக பாதிப்பு இருக்கும். தந்தை அதிகமான கஷ்டத்தை தாங்கவேண்டிய ஒரு சூழலை உருவாக்கும். தீயபலன்களை பார்க்கும்பொழுது அதிக பாதிப்பை தருவார். தந்தையின் உடல் நலனிலும் பாதிப்பை அதிகம் ஏற்படுத்துவார்.

சந்திரனை ஏழாம் பார்வையால் பார்ப்பதால் சந்திரனுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தினாலும் சந்திரனுக்கு உரிய காரத்துவம் உடைய தாய் மனநிலை பாதிப்பை அதிகமாக ஏற்படுத்தும். தாய் ஒழுங்கான ஒரு நிலையில் இருக்கமாட்டார். மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும்.

தாய் மற்றும் தந்தை இந்த இருவரில் தந்தை முதலிலேயே இறந்துவிடுவார். தந்தைக்குரிய சூரியனுக்கு சனியின் மூன்றாம் பார்வை கிடைத்தால் தந்தையின் உயிரை முதலிலேயே பறித்துவிடுவார். 

சூரியன் கெட்ட வீட்டில் அமர்ந்தால் உதாரணத்திற்க்கு சனியின் வீட்டில் சூரியன் அமர்ந்து சனியின் மூன்றாம் பார்வை கிடைக்கும்பொழுது ஜாதகரின் தந்தை ஜாதகரின் இளம் வயதிலேயே மரணம் அடைந்துவிடுவார்.

தாய் இறக்க மாட்டார் ஆனால் தாயின் மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது தாய் சம்பந்தப்பட்ட ஜாதகருக்காக மிகுந்த போராட்டத்தை அனுபவிக்க வேண்டிய ஒரு சூழலை ஏற்படுத்திவிடுவார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இனிய தொடக்கம்


வணக்கம்!
          பலர் சிக்குவது கடனில் தான் சிக்குகின்றனர். கடனை போக்குவதற்க்கு என்று நிறைய பரிகாரத்தை பரிந்துரை செய்து இருக்கின்றனர். பரிகாரம் என்பதை விட இதனை சரி செய்யும் விதத்தில் தான் நம்முடைய திறமையே இருக்கின்றது.

கடன் வாங்காமல் யாரும் இருக்கபோவதில்லை. கடனை வாங்க தான் அரசாங்கமே பரிந்துரை செய்ய வைக்கும். கடன் வாங்கி உங்களை சிக்க வைக்க இதனை செய்கின்றனர். ஒரு அடிமை போலவே உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

கடன் வாங்கிவிட்டு அதனை சரி செய்யமுடியாமல் சிக்கி தவிக்கும் நபர்களுக்கு என்று தனியாக ஒரு பொது பரிகாரத்தை செய்யுங்கள் என்று நண்பர்கள் பரிந்துரை செய்தனர். இதனை நாமும் நினைத்துக்கொண்டு இருந்த வேளையில் இதனை இரு நண்பர்கள் சொல்லி இருந்தார்கள்.

ஒவ்வொரு தடவையும் நாம் நவ அம்மன் யாகத்தை முதன்மையாக செய்து வருகிறோம். வருகின்ற நாட்களில் கடன் பிரச்சினை தீர்வதற்க்கு என்று சிறப்பு யாகத்தை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

கடன் தீர்வதற்க்கு அதனால் வரும் பிரச்சினை தீர்வதற்க்கு என்று அடுத்து வரும் சிறப்பு யாகம் நடத்த இருக்கிறோம். இதனை முன்கூட்டியே உங்களிடம் சொல்லுவதற்க்கு காரணம் நீங்கள் தயாராக இருக்கலாம் என்பதற்காக இதனை தற்பொழுது சொல்லுகிறேன். உடனே கிடையாது கொஞ்ச நாட்களுக்கு பிறகு இதனை செய்வோம்.

ஜாதக கதம்பத்திற்க்கு வரும் அனைவரும் பயன்பெறவேண்டும் என்பது போலவே அந்த பூஜைகள் இருக்கும். அனைவரும் தங்களுக்குள்ள கடன் தீர்வது பாேலவே அது இருக்கும்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு