Followers

Friday, September 6, 2019

நவராத்திரி அம்மன் ஹோமம்


வணக்கம்!
          இந்த வருடம் நவராத்திரி பண்டிக்கை வரும் செப்டம்பர் 29 தொடங்குகின்றது. வருடம் வருடம் நவராத்திரி பண்டிகையில் சிறப்பு அம்மன் ஹாேமம் செய்யப்படும். இந்த வருடமும் அது நடக்க இருக்கின்றது.

நவராத்திரியில் பகல் நேரத்தில் மட்டும் செய்த இந்த ஹோமம் இந்த வருடம் முதல் இரவு நேரத்திலும் செய்யப்படும். பகல் மற்றும் இரவு என்று இரண்டு நேரமாக இதனை செய்ய இருக்கிறோம். ஒரு ஹோமத்திற்க்கு ரூபாய் 5000 கட்டணமாக வைக்கப்படுகின்றது.

நவராத்திரி காலத்தில் செய்யப்படும் பூஜை அதிகளவில் பயனை தரக்கூடியதாக இருப்பதால் இதில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். அம்மனின் அருளை உங்களுக்கு வழங்ககூடிய ஒரு நல்ல ஹோமமாக இதனை செய்ய இருக்கிறோம்.

நவராத்திரி அம்மன் ஹோமம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் உடனே என்னை தொடர்புக்கொண்டு இணைந்துக்கொள்ளுங்கள். முன்கூட்டியே புக்கிங் செய்துக்கொள்வது நல்லது. உங்களுக்கான நாளை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளமுடியும். உடனே புக்கிங் செய்துக்கொள்ளுங்கள்.

ஒரு வேளை ஹோமம் செய்ய 5000 ரூபாய் இது மிக குறைந்த ஒரு கட்டணமாக இதனை வைத்து இருக்கிறேன். உடனே தொடர்புக்கொள்ளவும்.

ஹோமத்திற்க்கு தேவையான சாமான்களை மட்டும் வாங்கிக்கொண்டு மீதி இருக்கும் பணத்தை அம்மன் கோவில் கட்டும்பணிக்கு பயன்படுத்த உள்ளேன். அனைவரும் இதனை செய்துக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய் நீசம்


வணக்கம்!
          செவ்வாய்கிரகம் நீசம் அடைந்தால் அந்த ஜாதகர் நிறைய போராட்டங்களை சந்திக்கவேண்டியிருக்கும். ஒரு வேலை கூட அவர்க்கு எளிதில் அமைந்துவிடுவதில்லை. நிறைய கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்தாலும் அதிலும் பெரியதாக ஒன்றும் கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள்.

செவ்வாய் நீசத்தைப்பற்றி ஏற்கனவே நாம் சொல்லிருந்தாலும் பலர் இதனால் கஷ்டப்படுவதால் மறுபடியும் எழுதுகிறேன். கையில் பணம் வந்தாலும் அந்த பணம் அவரிடம் தங்காது. நாம் வேறு ஏதோ கிரகத்தால் இப்படி நடக்கின்றதோ என்று நினைத்துக்கொண்டு இருப்போம் ஆனால் செவ்வாய் கிரகத்தால் தான் இது நடக்கின்றது என்பதை போக போக உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்.

செவ்வாய்கிரகம் நீசம் அடையும்பொழுது அந்த நபர்க்கு வருகின்ற பணம் எல்லாம் வேறு ஏதோ ஒரு தேவைக்காக செலவு செய்ய நேரிடும். கையில் பணம் வந்தவுடன் அது வேறு தேவைக்கு என்று செல்லும். காலம் முழுவதும் உழைத்துக்கொண்டே இருக்க வைக்கும்.

ஒரு சிலருக்கு கடன் பிரச்சினை என்று சொல்லுவார்கள் அவர்களுக்கு கூட செவ்வாய் கிரகம் தான் இந்த கடன் பிரச்சினையை ஏற்படுத்திக்கொடுத்துவிடுகின்றது. செவ்வாய் நீசமாக இருக்கும் நபர்களுக்கு கடன்பிரச்சினை வருகின்றது.

செவ்வாய் நீசமாக இருப்பவர்கள் என்ன செய்யலாம் என்று கேட்கலாம். முருகவழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள். பழனி முருகன் கோவிலுக்கு அடிக்கடி சென்று வாருங்கள். உங்களுக்கு அருகில் இருக்கும் பிரசித்திபெற்ற முருகன் கோவிலுக்கும் சென்று வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, September 5, 2019

ஆண் பாவம்


வணக்கம்!
          ஆண்களுக்கு பாவம் இல்லை என்பது அனுபவ கருத்தாக நான் உங்களிடம் சொல்லுகிறேன். ஒரு ஆண் தன்னுடைய தேவைக்காக இயங்குகிறான் என்பது மிக மிக குறைவாகவே இருக்கும். தன் குடும்பத்தின் தேவைக்காகவே உழைக்கிறான் அவனின் தேவை இங்கு இல்லை அல்லது குறைவு என்று சொல்லலாம்.

ஆணை இயக்கும் சக்தியாகிய பெண்களுக்கு பாவம் போய்சேரும் என்பதை சொல்லலாம். பெண்கள் தான் தூண்டும் சக்தியாக இருக்கின்றார்கள். பெண்களுக்காகவே உழைக்கும் ஆணாகவே இருக்கின்றார்கள்.

உலகில் முதன் முதலில் தோன்றியது பெண் இனம். பெண் இனத்திற்க்கு பாதுகாப்பு என்பதற்க்காக ஆண் இனத்தை படைத்தான் என்று படித்து இருக்கிறோம். ஆணிற்க்கு உள்ள தோஷம் மற்றும் பாவம் எல்லாம் குறைவாகவே இருக்கும்.

ஜாதகத்தை வைத்து நான் சொல்லவில்லை ஒரு அனுமானத்தில் இதனை சொல்லுகிறேன். தன்னை ஒரு அர்பணிப்பு வாழ்க்கையாகவே செயல்படுவதால் அர்பணிப்பில் ஏது பாவம் வந்து சேர போகின்றது. அவர்களுக்கு இருக்கும் தோஷமும் பெரியதாக வேலை செய்வதில்லை.

இதனை படித்துவிட்டு நாம் இனி மேல் பாவம் செய்யலாம் என்று இறங்கவேண்டாம். ஏதோ உங்களிடம் இதனை சொல்ல தோன்றியது அதனால் சொல்லுகிறேன். ஆண்களுக்கு பெரிய பரிகாரம் தேவைப்படாது பெண்களாக இருந்தால் அது கண்டிப்பாக தேவைப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, September 4, 2019

கர்மாவும் கோவிலும்


வணக்கம்!
          பல நண்பர்கள் நீங்கள் தற்சமயம் நிறைய கஷ்டப்படுகின்றீர்களா என்று கேள்வி எழுப்பினார்கள். கோவில் கட்டும்பணியில் நிறைய கஷ்டங்களை எதிர்நோக்குகின்றீர்களா என்று கேட்டனர்.

கோவில் கட்டும்பணி என்பது கர்மா தொடர்புடைய வேலையை அதிகமாக கொண்ட ஒன்று. நமது கர்மாவை துடைத்து எடுக்கும் சக்தி வாய்ந்த ஒன்றாகவே இதனை கருதவேண்டும். நிறைய கஷ்டங்கள் என்பது இல்லை. நிறைய கஷ்டங்களை நாம் பார்த்து இருக்கின்றோம் இதனை கொஞ்சமாகவே நான் கருதுகிறேன்.

பெரும்பாலும் இது ஒரு பொதுவான ஒரு காரியம் என்பதால் இதில் தவறு இல்லாமல் அதே நேரத்தில் கொஞ்சம் அதிக சக்தி போட்டு செய்யவேண்டும் என்பதால் இதனை அக்கறைபோட்டு செய்கிறேன். மற்றபடி எந்தவித கஷ்டமும் இல்லை என்றே சொல்லலாம்.

இயற்கையாகவே நான் பொறுமையாகவும் அதே நேரத்தில் அமைதியாகவும் இருப்பவன் என்பதால் இதனை எளிமையாகவே கையாள்கிறேன். கூடுமானவரை இப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த வாய்ப்பு வருகின்றது.

என்னுடைய கணிப்பில் உங்களுக்கும் என்னுடைய எண்ணம்போலவே தான் இருக்கும். ஒரே மாதிரியான எண்ணங்களை கொண்டவர்களால் தான் இத்தனை வேலையையும் செய்யமுடிகின்றது. நம்மால் தான் நிறைய சாதிக்கமுடியும் என்றும் தோன்றுகிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 2, 2019

அம்மன் கோவில் கட்டும்பணி தாெடங்கியது


வணக்கம்!
         இன்று அம்மன் கோவில் கட்டும் பணி ஆரம்பித்துவிட்டோம். விநாயகர் சதுர்த்தி அன்று கோவில் கட்டும் பணி சிறப்பாக ஆரம்பித்துவிட்டோம். கோவிலில் நடைபெறும் பணிகளை வாட்ஸ்அப்பில் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறோம். 

அம்மன் கோவில் கட்டும்பணியில் தங்களை இணைத்துக்கொண்ட அனைத்து நண்பர்களும் அம்மனின் அருள் கிடைக்கும். இந்த பணியை ஆரம்பிக்க நிறைய நண்பர்களின் ஒத்துழைப்பை அளித்த காரணத்தால் மட்டுமே இது சாத்தியப்பட்டது.

ஒவ்வொரு நாளும் நிறைய உழைப்பை இதற்கு என்று போட்டார்கள். இதனை நான் நன்கு அறிந்தேன். நமது நண்பர்களின் உழைப்பை கண்டு நான் வியந்து போய் இருந்தேன். ஒவ்வொருவரின் நண்பர்களின் வட்டாரத்தில் சொல்லி இதனை ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அம்மன் கோவில்கட்டும் பணிக்கு நிறைய நிதி உதவி தேவைப்படுகின்றது. உங்களால் முடிந்தவரை முயற்சி செய்து இதனை தயார் செய்யுங்கள். இந்த உதவியால் உங்களுக்கு நல்லது நிறைய நடக்கும்.

அம்மன் கோவில் கட்டும் பணிக்கு உடனே நிதியுதவியை செய்யுங்கள்.

விரைவில் அம்மன் பூஜை நடைபெறும் அதற்கு காணிக்கை செலுத்துபவர்களும் செலுத்தி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, September 1, 2019

விநாயகர் சதுர்த்தி


வணக்கம்!
          எனக்கு தெரிந்தவரை இந்த விநாயகர் சதுர்த்தி எல்லாம் அந்தளவுக்கு பெரியளவில் இல்லை. எனக்கு தெரிந்த ஆன்மீகவாதிகள் மட்டும் இன்று விநாயகர் சதுர்த்தி என்று சொல்லுவார்கள். நான் சிறுவனாக இருந்த நேரத்தில் எல்லாம் இப்படி சொல்லி தான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இன்றைக்கு விநாயகர் சதுர்த்தி பெரியளவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. முடிந்தவரை இந்த பண்டிகை வைத்து நடைபெறும் வியாபாரம் என்பது பெரியளவில் நடக்கின்றது. தெருவில் செல்லமுடியாத நிலையில் மக்கள் கூட்டம் இருக்கின்றது.

விநாயகர் சதுர்த்தி மீடியா வழியாக தெரிந்தாலும் இதனை கொண்டாடும் மக்கள் மனநிலை உயர்ந்தால் சரி. அவர்களின் மூலாதாரம் நன்றாக திறந்து ஒவ்வொருவரும் பெரியளவில் உயர்ந்தால் நல்லது. மூலாதாரத்தை இயக்கி உங்களுக்கு நல்ல வாழ்க்கை அதுவும் எதிலும் தடை இல்லாமல் வெற்றிப்பெற்றால் நல்லது. 

விநாயகர் சதுர்த்தி அன்று பிறமதத்தில் உள்ளவர்களின் மனம் புண்படும் விதத்தில் நடந்துக்கொள்ளாமல் அமைதியாக கொண்டினால் மிகவும் நல்லது. நாம் வருடந்தோறும் இதனை சொல்லுவது உண்டு. இதனை கடைபிடித்தால் நல்லது.

விநாயகர் சதுர்த்தி அன்று நீங்கள் நான் செய்யும் காரியத்தில் தடை இல்லாமல் வெற்றி பெறவேண்டும். எடுக்கும் நல்ல காரியம் அனைத்தும் நல்லமுறையில் செயல்படவேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இனிய தொடக்கம்


வணக்கம்!
         பெரும்பாலும் குலதெய்வத்தை கண்டுபிடித்து சொல்லுகிறேன் என்று சொல்லுவது எல்லாம் ஒரு குத்துமதிப்பாக அடித்துவிடுவதாகவே இருக்குமே தவிர அதில் உண்மை என்பது அந்தளவுக்கு இருக்காது.

குலதெய்வம் கண்டுபிடிக்கமுடியாமல் நிறைய பேர்கள் இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் சோதிடத்தின் துணைக்கொண்டு அல்லது ஏதோ குறி சொல்லுபவர்களின் வழி காட்டுதலோடு தேடுவார்கள். இதனை வைத்துக்கொண்டு உண்மையான குலதெய்வத்தை நாடுவது சிரமமாகவே இருக்கும்.

சாேதிடர்கள் ஏதோ ஒன்றை சொல்லவேண்டும் என்று சொல்லிவிடுவார்கள் இல்லை என்றால் குலதெய்வம் தெரியாதவர்கள் திருசெந்தூர் முருகனை வணங்க சொல்லுவார்கள். இது நன்றாக ஆய்வு செய்து பார்த்தால் அது தவறாகவே இருக்கும்.

உங்களுக்கு முடிந்தவரை உங்களின் முன்னோர்கள் வழி எங்கு இருக்கின்றது அவர்கள் எந்த தெய்வத்தை வணங்கிக்கொண்டு வருகின்றனர் என்பதை அந்த நன்கு கேட்டு அறிந்துக்கொண்டு அதனை பின்பற்றி வருவது சிறப்பாக இருக்கும்.

தற்பொழுது நமது மக்கள் வணங்கிக்கொண்டு இருக்கும் குலதெய்வம் கூட முன்னோர்கள் வழிகாட்டுதல் படி தான் வணங்கிக்கொண்டு இருக்கின்றனர்.  பலர் வணங்கிக்கொண்டு இருக்கும் குலதெய்வம் அவர்களின் குலதெய்வமாக இருக்காது. முன்னோர்களின் ஒருவர் ஏதோ ஒரு கோவிலில் எடுத்து வந்த வைத்த இஷ்டதெய்வத்தை கூட குலதெய்வமாக வணங்கிக்கொண்டு இருக்கின்றனர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு