Followers

Saturday, June 29, 2019

செல்வவளம்


வணக்கம்!
                          இன்று பழனி முருகன் கோவில் பயணம். 

ஒவ்வொருவரையும் நான் முடிந்தவரை வருடத்திற்க்கு ஒரு முறை சென்று வாருங்கள் என்று சொல்லிருக்கிறேன். அதனை ஏற்று பல நண்பர்கள் சென்று வந்திருக்கின்றனர். நீங்களும் அடிக்கடி சென்றால் நல்லது அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

உங்களின் வீட்டில் சமையறையில் ஒரு பானையை தயார் செய்து அந்த பானையில் கொஞ்சம் காசு பணம் மற்றும் நகைகளை போட்டு வைத்திருங்கள் உங்களுக்கு நல்ல பணவரவு உங்களுக்கு இருக்கும். பல செல்வந்தர்கள் இதனை செய்து வருகின்றனர்.

பெரும்பாலும் ஒரு சிலருக்கு மட்டும் இதனை செய்ய சொல்லுவார்கள். நான் அனைவருக்கும் இதனை பரிந்துரை செய்து இருக்கிறேன். உங்களின் வீட்டில் சமையறை நன்றாக இருந்தால் தான் பணம் வரும் என்று ஒரு பதிவை தந்திருக்கிறேன்.

வீட்டில் எல்லா இடமும் சுத்தமாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் உங்களின் சமையறையும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று சொல்லிருக்கிறேன். முடிந்தவரை சமையறையில் கொஞ்சம் பணம் வைத்திருங்கள் உங்களுக்கு எப்படியும் பணம் வந்து சேரும்.

கடந்த காலத்தில் எல்லாம் பெண்கள் சமையறையில் உள்ள அரச்சாமான் என்று சொல்லக்கூடிய மளிகை சாமான்கள் வைத்திருக்கும் டப்பாக்களில் எல்லாம் பணம் வைத்திருப்பார்கள். அவர்களின் பாதுகாப்பிற்க்கு என்று இதனை செய்தாலும் அது அந்த வீட்டிற்க்கு செல்வத்தை கொடுப்பதால் இதனை நீங்களும் செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 27, 2019

எதிரிகள்


வணக்கம்!
          எதிரிகள் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது நன்றாக இருக்கும். எதிரிகள் இருந்தால் தான் உங்களை நீங்கள் தொடர்ச்சியாக முன்னேற்றத்தை நோக்கி கொண்டு சென்றுக்கொண்டே இருக்க உதவும். எதுவும் இல்லாமல் உங்களின் வாழ்க்கை சென்றாலும் அதில் உப்பு சப்பு இருக்காது அல்லவா. எதிரிகளும் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்றாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

எதிரிகளை காட்டக்கூடிய இடம் என்றால் அது ஆறாவது இடமாக இருக்கும். எதிரிகளை காட்டக்கூடிய ஆறாவது வீடு பலம்பெற்றால் உங்களுக்கு நல்லது என்றாலும் உங்களுக்கு அவ்வப்பொழுது பிரச்சினைகள் வந்துக்கொண்டே இருக்கும்.

ஆறாவது வீட்டில் இருக்கும் சும்மா இல்லாமல் ஏதாவது ஒரு பிரச்சினையை கொடுப்பது போலவே செயல்பட்டுக்கொண்டே இருக்கும். ஆறாவது வீட்டை பொறுத்தவரை ஒரு மனிதனை ஓடவைக்க அதிகமாகவே உறுதுணை புரிகின்றது.

கோச்சாரபடி ஒரு இராசிக்கு ஆறாவது வீட்டில் கிரகங்கள் வந்தாலும் எதிரிகள் கை ஓங்கி இருக்கும். உங்களின் இராசிக்கு ஆறில் கிரகங்கள் வரும்பொழுது உங்களின் எதிரி உங்களுக்கு தொல்லை கொடுப்பார். இப்படிப்பட்ட காலங்களில் கொஞ்சம் பொறுமையாக இருப்பதும் நல்லது.

மிதுனஇராசிக்கும் மீனஇராசிக்கும் எப்பொழுது எதிரிகளின் கை ஒங்கி இருக்கும். இந்த இரண்டு இராசிகளும் எதிரிகளிடம் சமாதானத்தோடு இருப்பதே நல்லது. தேவையில்லாமல் அவர்களை எதிர்த்துக்கொண்டு இருக்க வேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 26, 2019

கோவில்களில் செய்யகூடாதவை


வணக்கம்!
         எனக்கு தெரிந்த நபர் ஒருவர் சென்னை திருவான்மீயூர் பகுதியில் வசித்து வந்தார். திருவான்மீயூரில் பிரசித்தி பெற்ற கோவிலில் அவர்க்கு அறங்காவலர் பதவியை தரவேண்டும் என்று ஒரு சிலர் அவரிடம் கேட்டுள்ளனர். அவர் அதற்கு மறுத்துவிட்டார். அவரிடம் நான் பேசியபொழுது அவர் என்னிடம் சொன்னார் இந்த பதவிக்கு செல்வது நல்லது தான் ஆனால் இதில் செய்யும் தவறுகளை திருத்தமுடியாது பிறர் செய்யும் பாவமும் நமக்கு வந்துவிடும் என்பதால் இதனை தவிர்த்துவிட்டேன் என்று சொன்னார்.

பெரும்பாலும் இப்படிப்பட்ட நல்லவர்கள் இந்த மாதிரியான பதவிக்கு சென்றால் நன்றாக இருக்கும் ஆனால் நல்லவர்கள் அனைவரும் ஒதுங்கி கொள்கின்றனர். இதில் வேலை செய்யபிடிக்கவில்லை என்று சொல்லுகின்றனர். அறநிலையத்துறையில் இருக்கும் அனைவரும் பெரியளவில் கொள்ளை அடிப்பதை நோக்கமாக வைத்திருக்கின்றனர்.

உங்களுக்கு இது தெரிந்து இருக்கும் தெரிந்து இருந்தாலும் இதனை சொல்லுவதின் நோக்கம் இப்படிப்பட்ட துறைக்கு வேலை செல்லும் நபராக இருந்தால் பெரும்பாலும் சம்பளத்தை தவிர வேறு எதனையும் பெற்றுவிடாதீர்கள். 

சுயசம்பளத்தை தவிர வேறு எதையாவது செய்தால் உங்களின் குலம் நாசமாக சென்றுவிடும் என்பதில் மாற்று கருத்து இல்லை. நீங்கள் நினைக்கலாம் இதில் கொள்ளை அடித்து நன்றாக வாழ்கின்றனர் என்று நினைக்கலாம். கடவுள் எப்பொழுதும் கடைசியில் அடிப்பார். அவர் அடிக்கும் அடியில் இருந்து பல ஜென்மங்கள் ஈடு ஏற முடியாது.

உங்களால் முடிந்தவரை கோவில் விசயங்களில் தலையீடு இல்லாமல் இருப்பது நல்லது. நல்லதை மட்டும் செய்யும் ஒரு இடமாக கோவில்களை தேர்ந்தெடுத்து நடந்துக்கொள்ளுங்கள். பிற எந்த தவறையும் செய்யும் இடமாக கோவில்களை தேர்ந்தெடுக்காதீர்கள்.

நம்ம அம்மன் கோவில் கட்டும்பணியில் கூட நான் துளி அளவும் என்னுடைய சுயதேவைக்கு இதனை எடுக்ககூடாது என்று எண்ணி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். நண்பர்கள் அனுப்பும் பணத்தை மிகச்சரியாக செயல்படுத்த வேண்டும் என்பதில் அதிக முனைப்பு காட்டி வேலை செய்துக்கொண்டு இருக்கிறேன்.

ஒரு ஆன்மீகவாதியாக நாம் இருந்தாலும் நாம் செய்த வேலைக்கு பணம் வந்தால் போதும் கோவில் பணியில் எந்த ஒரு பைசாவும் எடுக்ககூடாது என்று எண்ணி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். என்ன என்ன நடக்கின்றது என்பதை நமது நண்பர்களுக்கு தொடர்ச்சியாக தகவல்கள் கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, June 25, 2019

அஷ்டமாபதி


வணக்கம்!
         அஷ்டமாபதி தசா நடந்தால் என்ன பலனை தரும் என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டு அனுப்பியிருந்தார். அஷ்டமாபதி தசா என்றாலே அது ஒரு மோசமான தசா என்று தான் அனைவராலும் கணிக்கப்பட்டு சொல்லப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

ஜாதகத்தில் அஷ்டமாபதி எப்படி அமர்ந்திருக்கின்றார் என்பதை பொறுத்து தான் பலனை கணித்து சொல்லமுடியும். அஷ்டாமபதியின் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகம் மற்றும் அஷ்டமாபதி சென்ற அமர்ந்த இடத்தை பொறுத்தும் பலன் மாறுப்படும்.

அஷ்டமாபதி கெட்டு இருந்தால் அவர்கள் கொஞ்சம் தனிமையில் வாழ்வது சிறப்பான ஒன்றாக இருக்கும். வெளியில் தலைகாட்டாமல் வாழும் வாழ்க்கை வாழும்பொழுது அது அஷ்டமாபதி தசா அல்லது அதன் பிடியில் அமர்ந்து இருப்பது போன்றே இருக்கும்.

இன்றைய சூழலில் பலர் இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர். வயதான பெரியோர்கள் முதல் இளம்வயதில் இருப்பவர்கள் கூட தனிமையில் தான் வாழ்க்கின்றனர். சூழலை அப்படி மாற்றிக்கொண்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.

அஷ்டமாபதி பிடியில் வாழ்வது இன்றைய காலத்தில் எளிமையாகவே அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியாகவே வாழ்வதால் பெரிய பிரச்சினை இல்லை என்று சொல்லலாம். ஒரு சிலர்க்கு விபத்துகள் நடைபெறுவதற்க்கு வாய்ப்பு உண்டு.

அஷ்டமாபதி நன்றாக இருந்தால் அவர்களுக்கு பல வழிகளும் பணம் வந்து சேரும். யாரோ உழைத்து இவர்களுக்கு கொடுத்துக்கொண்டு இருப்பார்கள். இவர்களின் உழைப்பு இல்லாமல் அதுவாகவே பணம் வந்துக்கொண்டே இருப்பது போன்ற ஒரு நிலை ஏற்படலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 24, 2019

அம்மன் கோவில் கட்டும்பணி


வணக்கம்!
          அம்மன் கோவில் கட்டும்பணி ஆயத்தம் ஆகபோகின்றது. விரைவில் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளோம். கட்டும்பணிக்கு முன்கூட்டி நடைபெறும் ஆயத்தபணிகளை தற்பொழுது செய்துக்கொண்டு வருகிறோம்.என்ன என்ன நடந்துக்கொண்டு இருக்கின்றது என்பதை வாட்ஸ்அப்பில் அவ்வப்பொழுது தெரிவித்துக்கொண்டே இருக்கின்றேன். 

ஒரு சில காரணங்களால் கோவில் வேலையை உடனே தொடங்க முடியாமல் இருந்தது அது எதனால் என்று நமது நண்பர்களிடம் கூடுமானவரை தெரிவித்து இருந்தேன். தற்பொழுது அதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதை வாட்ஸ்அப்பில் பார்த்து தெரிந்துக்கொண்டு இருக்கின்றனர்.

நமது நண்பர்கள் அனைவரும் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர். ஒருத்தரும் செய்யவில்லை என்பதை சொல்லுவதைவிட ஒவ்வொருவரும் நிறைய உழைப்பை இதற்க்கு என்று போடுகின்றனர். அவர்களின் சொந்தபணி போல இதனை செய்வதால் சிறப்பான ஒரு பங்களிப்பு இருக்கின்றது.

ஜாதககதம்பத்தில் இதுவரை பங்களிப்பை அளிக்காதவர்கள் இருந்தாலும் இனிமேலும் தங்களின் உழைப்பை இதற்கு என்று கொஞ்சம் போடுங்கள். நல்ல பணியை தேர்ந்தெடுத்து செய்துக்கொண்டு இருக்கின்றோம். பல ஆயிரம் பேர் இருக்கின்றனர் அனைவரின் உழைப்பும் இதற்கு என்று தேவை என்பதல் இதனை செய்யுங்கள் என்று கேட்கிறேன்.

அம்மனின் அருள் முழுமையாக உங்களுக்கு கிடைப்பதற்க்கு இந்த பணி எடுத்து செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். மிகப்பெரிய பணியை பலர் இணைந்து தான் இதனை செய்யவேண்டும் என்பதால் இதனை  உங்களிடம் தெரிவித்துக்கொண்டே வருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, June 23, 2019

அம்மன் பூஜை


வணக்கம்!
                      இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.  
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.  
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.    

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.    
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.      

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.  
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்.  
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்.
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள்.

 வழக்கம்போல்            
                               திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 20, 2019

பொறாமை குணம்


வணக்கம்!
          இந்தியகாரனோடு வாழ்வது என்பது ஒரு கடினமான ஒன்றாகவே இருக்கும். இந்தியகாரன் சும்மா இருக்கமாட்டான் அல்லவா அதனால் சொல்லுகிறேன். நமது வாடிக்கையாளர்கள் வெளிநாட்டில் இருந்தும் கூட சொல்லுவார்கள் ஏதாவது ஒரு வம்பு செய்துக்கொண்டே இருக்கின்றார்கள் என்று சொல்லுவார்கள்.

எந்த இடத்திற்க்கு சென்றாலும் ஏதாவது ஒரு இடத்தில் சம்பந்தமே இல்லாமல் ஏதாவது ஒன்றை பேசி கொண்டே இருப்பார்கள். ஒரு சில இடத்தில் பொறாமை அதிகமாக இது இருக்கும். சம்பந்தமே இல்லாமல் பொறாமைபட்டுக்கொண்டு இருப்பார்கள்.

பொறாமையில் பல பிரச்சினைகளை உருவாக்கிவிடுகின்றார்கள். உங்களிடம் ஏதாவது ஒரு வழியில் பொறாமைப்பட்டுக்கொண்டு சண்டைபோட்டுக்கொண்டு இருப்பார்கள். பெண்கள் தான் பொறாமைப்படுவார்கள் என்ற காலம் போயி தற்பொழுது ஆண்களும் இதில் அகப்பட்டுக்கொண்டுவிட்டார்கள்.

நிறைய இடத்தில் ஆண்களும் பொறாமைப்பட்டு மற்றவர்களுக்கு பிரச்சினை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் பல நண்பர்கள் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டு இருக்கும் பிரச்சினையில் இது தலையாக பிரச்சினையாக இருக்கின்றது.

ஒருவர் நல்லமுறையில் வளர்ந்து பெரிய ஆட்களாக வரவேண்டும் என்றால் அவனிடம் பொறாமை என்ற குணம் இல்லாமல் இருக்கவேண்டும். பொறாமை இல்லாமல் இருந்தால் மட்டுமே அவனால் சிறந்த வாழ்க்கையை உருவாக்கி வைத்துக்கொள்ளமுடியும் என்பதை நான் பார்த்து இருப்பதால் முடிந்தவரை அடுத்தவர்களிடம் பொறாமை குணத்தை காட்டாதீர்கள். உங்களிடமும் இதனை வளர்த்துக்கொள்ளாதீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு