வணக்கம்!
அஷ்டமாபதி தசா நடந்தால் என்ன பலனை தரும் என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டு அனுப்பியிருந்தார். அஷ்டமாபதி தசா என்றாலே அது ஒரு மோசமான தசா என்று தான் அனைவராலும் கணிக்கப்பட்டு சொல்லப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
ஜாதகத்தில் அஷ்டமாபதி எப்படி அமர்ந்திருக்கின்றார் என்பதை பொறுத்து தான் பலனை கணித்து சொல்லமுடியும். அஷ்டாமபதியின் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகம் மற்றும் அஷ்டமாபதி சென்ற அமர்ந்த இடத்தை பொறுத்தும் பலன் மாறுப்படும்.
அஷ்டமாபதி கெட்டு இருந்தால் அவர்கள் கொஞ்சம் தனிமையில் வாழ்வது சிறப்பான ஒன்றாக இருக்கும். வெளியில் தலைகாட்டாமல் வாழும் வாழ்க்கை வாழும்பொழுது அது அஷ்டமாபதி தசா அல்லது அதன் பிடியில் அமர்ந்து இருப்பது போன்றே இருக்கும்.
இன்றைய சூழலில் பலர் இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர். வயதான பெரியோர்கள் முதல் இளம்வயதில் இருப்பவர்கள் கூட தனிமையில் தான் வாழ்க்கின்றனர். சூழலை அப்படி மாற்றிக்கொண்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.
அஷ்டமாபதி பிடியில் வாழ்வது இன்றைய காலத்தில் எளிமையாகவே அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியாகவே வாழ்வதால் பெரிய பிரச்சினை இல்லை என்று சொல்லலாம். ஒரு சிலர்க்கு விபத்துகள் நடைபெறுவதற்க்கு வாய்ப்பு உண்டு.
அஷ்டமாபதி நன்றாக இருந்தால் அவர்களுக்கு பல வழிகளும் பணம் வந்து சேரும். யாரோ உழைத்து இவர்களுக்கு கொடுத்துக்கொண்டு இருப்பார்கள். இவர்களின் உழைப்பு இல்லாமல் அதுவாகவே பணம் வந்துக்கொண்டே இருப்பது போன்ற ஒரு நிலை ஏற்படலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment