Followers

Thursday, June 20, 2019

பொறாமை குணம்


வணக்கம்!
          இந்தியகாரனோடு வாழ்வது என்பது ஒரு கடினமான ஒன்றாகவே இருக்கும். இந்தியகாரன் சும்மா இருக்கமாட்டான் அல்லவா அதனால் சொல்லுகிறேன். நமது வாடிக்கையாளர்கள் வெளிநாட்டில் இருந்தும் கூட சொல்லுவார்கள் ஏதாவது ஒரு வம்பு செய்துக்கொண்டே இருக்கின்றார்கள் என்று சொல்லுவார்கள்.

எந்த இடத்திற்க்கு சென்றாலும் ஏதாவது ஒரு இடத்தில் சம்பந்தமே இல்லாமல் ஏதாவது ஒன்றை பேசி கொண்டே இருப்பார்கள். ஒரு சில இடத்தில் பொறாமை அதிகமாக இது இருக்கும். சம்பந்தமே இல்லாமல் பொறாமைபட்டுக்கொண்டு இருப்பார்கள்.

பொறாமையில் பல பிரச்சினைகளை உருவாக்கிவிடுகின்றார்கள். உங்களிடம் ஏதாவது ஒரு வழியில் பொறாமைப்பட்டுக்கொண்டு சண்டைபோட்டுக்கொண்டு இருப்பார்கள். பெண்கள் தான் பொறாமைப்படுவார்கள் என்ற காலம் போயி தற்பொழுது ஆண்களும் இதில் அகப்பட்டுக்கொண்டுவிட்டார்கள்.

நிறைய இடத்தில் ஆண்களும் பொறாமைப்பட்டு மற்றவர்களுக்கு பிரச்சினை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் பல நண்பர்கள் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டு இருக்கும் பிரச்சினையில் இது தலையாக பிரச்சினையாக இருக்கின்றது.

ஒருவர் நல்லமுறையில் வளர்ந்து பெரிய ஆட்களாக வரவேண்டும் என்றால் அவனிடம் பொறாமை என்ற குணம் இல்லாமல் இருக்கவேண்டும். பொறாமை இல்லாமல் இருந்தால் மட்டுமே அவனால் சிறந்த வாழ்க்கையை உருவாக்கி வைத்துக்கொள்ளமுடியும் என்பதை நான் பார்த்து இருப்பதால் முடிந்தவரை அடுத்தவர்களிடம் பொறாமை குணத்தை காட்டாதீர்கள். உங்களிடமும் இதனை வளர்த்துக்கொள்ளாதீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: