Followers

Wednesday, June 26, 2019

கோவில்களில் செய்யகூடாதவை


வணக்கம்!
         எனக்கு தெரிந்த நபர் ஒருவர் சென்னை திருவான்மீயூர் பகுதியில் வசித்து வந்தார். திருவான்மீயூரில் பிரசித்தி பெற்ற கோவிலில் அவர்க்கு அறங்காவலர் பதவியை தரவேண்டும் என்று ஒரு சிலர் அவரிடம் கேட்டுள்ளனர். அவர் அதற்கு மறுத்துவிட்டார். அவரிடம் நான் பேசியபொழுது அவர் என்னிடம் சொன்னார் இந்த பதவிக்கு செல்வது நல்லது தான் ஆனால் இதில் செய்யும் தவறுகளை திருத்தமுடியாது பிறர் செய்யும் பாவமும் நமக்கு வந்துவிடும் என்பதால் இதனை தவிர்த்துவிட்டேன் என்று சொன்னார்.

பெரும்பாலும் இப்படிப்பட்ட நல்லவர்கள் இந்த மாதிரியான பதவிக்கு சென்றால் நன்றாக இருக்கும் ஆனால் நல்லவர்கள் அனைவரும் ஒதுங்கி கொள்கின்றனர். இதில் வேலை செய்யபிடிக்கவில்லை என்று சொல்லுகின்றனர். அறநிலையத்துறையில் இருக்கும் அனைவரும் பெரியளவில் கொள்ளை அடிப்பதை நோக்கமாக வைத்திருக்கின்றனர்.

உங்களுக்கு இது தெரிந்து இருக்கும் தெரிந்து இருந்தாலும் இதனை சொல்லுவதின் நோக்கம் இப்படிப்பட்ட துறைக்கு வேலை செல்லும் நபராக இருந்தால் பெரும்பாலும் சம்பளத்தை தவிர வேறு எதனையும் பெற்றுவிடாதீர்கள். 

சுயசம்பளத்தை தவிர வேறு எதையாவது செய்தால் உங்களின் குலம் நாசமாக சென்றுவிடும் என்பதில் மாற்று கருத்து இல்லை. நீங்கள் நினைக்கலாம் இதில் கொள்ளை அடித்து நன்றாக வாழ்கின்றனர் என்று நினைக்கலாம். கடவுள் எப்பொழுதும் கடைசியில் அடிப்பார். அவர் அடிக்கும் அடியில் இருந்து பல ஜென்மங்கள் ஈடு ஏற முடியாது.

உங்களால் முடிந்தவரை கோவில் விசயங்களில் தலையீடு இல்லாமல் இருப்பது நல்லது. நல்லதை மட்டும் செய்யும் ஒரு இடமாக கோவில்களை தேர்ந்தெடுத்து நடந்துக்கொள்ளுங்கள். பிற எந்த தவறையும் செய்யும் இடமாக கோவில்களை தேர்ந்தெடுக்காதீர்கள்.

நம்ம அம்மன் கோவில் கட்டும்பணியில் கூட நான் துளி அளவும் என்னுடைய சுயதேவைக்கு இதனை எடுக்ககூடாது என்று எண்ணி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். நண்பர்கள் அனுப்பும் பணத்தை மிகச்சரியாக செயல்படுத்த வேண்டும் என்பதில் அதிக முனைப்பு காட்டி வேலை செய்துக்கொண்டு இருக்கிறேன்.

ஒரு ஆன்மீகவாதியாக நாம் இருந்தாலும் நாம் செய்த வேலைக்கு பணம் வந்தால் போதும் கோவில் பணியில் எந்த ஒரு பைசாவும் எடுக்ககூடாது என்று எண்ணி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். என்ன என்ன நடக்கின்றது என்பதை நமது நண்பர்களுக்கு தொடர்ச்சியாக தகவல்கள் கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: