வணக்கம்!
எதிரிகள் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது நன்றாக இருக்கும். எதிரிகள் இருந்தால் தான் உங்களை நீங்கள் தொடர்ச்சியாக முன்னேற்றத்தை நோக்கி கொண்டு சென்றுக்கொண்டே இருக்க உதவும். எதுவும் இல்லாமல் உங்களின் வாழ்க்கை சென்றாலும் அதில் உப்பு சப்பு இருக்காது அல்லவா. எதிரிகளும் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்றாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.
எதிரிகளை காட்டக்கூடிய இடம் என்றால் அது ஆறாவது இடமாக இருக்கும். எதிரிகளை காட்டக்கூடிய ஆறாவது வீடு பலம்பெற்றால் உங்களுக்கு நல்லது என்றாலும் உங்களுக்கு அவ்வப்பொழுது பிரச்சினைகள் வந்துக்கொண்டே இருக்கும்.
ஆறாவது வீட்டில் இருக்கும் சும்மா இல்லாமல் ஏதாவது ஒரு பிரச்சினையை கொடுப்பது போலவே செயல்பட்டுக்கொண்டே இருக்கும். ஆறாவது வீட்டை பொறுத்தவரை ஒரு மனிதனை ஓடவைக்க அதிகமாகவே உறுதுணை புரிகின்றது.
கோச்சாரபடி ஒரு இராசிக்கு ஆறாவது வீட்டில் கிரகங்கள் வந்தாலும் எதிரிகள் கை ஓங்கி இருக்கும். உங்களின் இராசிக்கு ஆறில் கிரகங்கள் வரும்பொழுது உங்களின் எதிரி உங்களுக்கு தொல்லை கொடுப்பார். இப்படிப்பட்ட காலங்களில் கொஞ்சம் பொறுமையாக இருப்பதும் நல்லது.
மிதுனஇராசிக்கும் மீனஇராசிக்கும் எப்பொழுது எதிரிகளின் கை ஒங்கி இருக்கும். இந்த இரண்டு இராசிகளும் எதிரிகளிடம் சமாதானத்தோடு இருப்பதே நல்லது. தேவையில்லாமல் அவர்களை எதிர்த்துக்கொண்டு இருக்க வேண்டாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment