வணக்கம்!
அம்மன் அருளால் இந்த மாதமும் நிறைய பதிவுகளை தரவேண்டும் என்று வணங்கி இந்த பதிவை ஆரம்பிக்கிறேன். அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்க அம்மனை பிராத்திக்கிறேன்.
ஜாதகத்தில் எத்தனை தோஷம் இருந்தாலும் வாழ்க்கையில் நாம் நடந்துக்கொள்ளும் விதத்தில் நம்முடைய முன்னேற்றம் அடங்கி இருக்கிறது. நமது செயல்பாட்டில் கவனம் இருக்கவேண்டும்.
பொதுவாக நமக்கு குடும்ப ஸ்தானம் என்று அழைக்ககூடிய வீடான இரண்டாவது வீடு நன்றாக இருந்தால் பணம் வந்துக்கொண்டே இருக்கும். இரண்டாவது வீடு கெடும்பொழுது அவர்களுக்கு பணவரவு என்பது கொஞ்சம் கடினம்.
இரண்டாவது வீடு ஒருவருக்கு கெட்டு கூட பணவரவு நன்றாக இருக்கும் ஒரு சில ஆட்கள் இருக்கின்றார்கள். அதாவது தன்னுடைய நடத்தை நன்றாக இருந்து அதனை பெற்று இருக்கின்றார்கள். தன்னை ஒழுங்கிப்படுத்திக்கொண்டு இதனை அடைந்து இருக்கின்றார்கள்.
இரண்டாவது வீடு என்றாலே பேச்சு ஸ்தானம் தான். அதிகம் பேசினால் பணம் தங்காது. அளவோடு பேசும்பொழுது குடும்பஸ்தானம் வலுப்பெற்று பணத்தை வாரி வழங்கும். நீங்களும் பேச்சை தேவையில்லாமல் பேசாமல் குறைத்து பேசி நல்ல செல்லவவளத்தோடு வாழுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment