Followers

Tuesday, April 5, 2016

முதலில் தானம் பிறகு வழிபாடு


வணக்கம்!
          ஒவ்வொரு கோவிலுக்கும் உள்ளே நுழையும்பொழுது முன்கூட்டியே ஒரு தானத்தை செய்துவிட்டு உள்ளே நுழையவேண்டும் என்பதை சொல்லியுள்ளனர் நமது முன்னோர்கள். இன்றுவரை நாம் இதனை கடைபிடித்து வருகிறோம்.

நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு வழிபாட்டிற்க்கும் முன்னால் ஒரு தானத்தை செய்துவிட்டு செய்தால் அதன் பலன் அதிகமானதாக நமக்கு அமையும். நான் செய்கின்ற ஒவ்வொரு பரிகாரத்திற்க்கும் முன்பு ஒரு சில தானத்தை செய்துவிட்டு பரிகாரத்தை செய்வது உண்டு.

எனக்கு சொல்லிக்கொடுத்த குரு எந்த ஒரு வேலையை செய்வதற்க்கு முன்பு இதனை செய்யாமல் செய்துவிடாதே என்று சொல்லிருக்கிறார். அதனை செய்யாமல் செய்தால் உனக்கு பிரச்சினை வந்துவிடும் என்றும் சொல்லிருக்கிறார்

ஒவ்வொரு ஜாதகத்திலும் பல தோஷங்கள் இருக்கும். அவர்களின் கர்மாவை நீக்க முதலில் புண்ணியம் செய்துவிட்டு தொடங்கவேண்டும் என்பார். நீங்களும் நீங்கள் வழிபடுவதற்க்கு எந்த ஒரு பூஜைக்கும் முன்பு ஒரு சிறிய புண்ணியம் செய்துவிட்டு தொடங்குங்கள். அந்த விசயம் உங்களை உயர்த்தும்.

ஒவ்வொரு நாளும் என்னால் முடிந்தவரை சொல்லுகிறேன் அதற்கு காரணம் இதனை படிக்கும் நண்பர்கள் ஒவ்வொருவரும் சிறந்த ஆன்மீகவாதி. ஆன்மீகம் உள்ளுக்குள் இல்லை என்றால் இதனை படிப்பது கடினம். நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்க்கு இதனை எல்லாம் சொல்லுகிறேன். முடிந்தவரை தானம் செய்துவிட்டு அனைத்து காரியத்தையும் தொடங்குங்கள்.

கோவிலில் சாமியை கும்பிட்டு வந்தபிறகு தானத்தை செய்யவேண்டாம். நீங்கள் கும்பிட்டு வந்த பிறகு நேராக உங்களின் வீட்டிற்க்கு சென்றால் போதும். இதனை ஒவ்வொரு தடவையும் கடைபிடியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: