Followers

Monday, April 11, 2016

பிஸியான ஆளு


ணக்கம்!
          நாம் பதிவு எழுத ஆரம்பித்த காலத்தில் எல்லாம் எனக்கு ஜாதககதம்பம் வழியாக ஒரு ஹோலோ சொல்லுவதற்க்கு கூட இங்கு ஆட்கள் இல்லை. பல வருடங்கள் ஓடியது அதன் பிறகு ஒவ்வொருவராக நம்மை தேடி வரஆரம்பித்தார்கள். 

நாம் சொல்லுகின்ற விசயத்தை ஒருவர் உள்ளுக்குள் எடுத்துக்கொண்டு அதனை உற்று கவனித்த பிறகு தான் வரமுடியும். நம்மை ஒருவர் தேடி வருகிறார் என்றால் அவரை நான் குறைவாக எடை போடமாட்டேன். ஜாதககதம்பத்தில் சொல்லப்பட்ட மொத்த கருத்தில் முக்கால்வாசி கருத்தை உடையவராக அவர் இருப்பார் என்பது எனது கணக்கு.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழிக்கு வாங்கி கட்டிய வரம் என்ற தலைப்பில் வரும் கருத்துக்கள் சரியாக இருக்கும். இன்றைக்கு நாம் செய்யும் தவறு இன்றே நமக்கு தண்டனை கிடைப்பதில்லை கொஞ்ச காலம் சென்று நமக்கு தண்டனை கிடைக்கும்.

தண்டனை நமக்கு மட்டும் கிடைத்தால் பரவாயில்லை நமது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கிடைக்கும்பொழுது தான் நமது துயரம் அதிகமாக இருக்கும். இன்றைக்கு நான் சொல்லுகின்ற கருத்து எல்லாம் உங்களுக்கு இன்றைக்கு ஏற்புடையதாக இருக்காது. கொஞ்ச காலம் எடுக்கும் அதன் பிறகு என்னை தேடிவருவீர்கள்.

ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அவனுக்கு வரும் வாரிசுகளின் வழியாக அந்த தவறு ஏன் செய்தோம் என்று நினைக்க தோன்றும். ஒருவருக்கு ஒரு பையன் இருந்தால் அந்த பையனுக்கு வரும் மனைவி வழியாக ஒரு சிலருக்கு தண்டனை என்பது வரும். மருமகள் பேரகுழந்தை இதன் வழியாக தண்டனை வருகிறது. கடவுள் கொஞ்சம் வேகமாக வேலை செய்கிறார் என்றால் அவன் பையனின் வழியாகவே நாம் செய்த பாவத்தின் பயன் என்ன என்பது தெரிந்துவிடும்.

தற்பொழுது நான் கொஞ்சம் பிஸியாக தான் இருக்கிறேன் இன்னும் சில வருடங்கள் கழித்து என்னை சந்திக்க பல மாதங்கள் கூட இருக்கலாம் அதற்கு காரணம் எனது தலைக்கணம் கிடையாது மக்களுக்கு நடந்ததை வைத்து இப்படி எல்லாம் நடந்து இருக்கிறது இதற்கு வழியை சொல்லுங்கள் என்று வருவார்கள். இன்று செய்வதை பார்த்து அதன் பிறகு செய்ய தொடங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: