Followers

Friday, April 22, 2016

செலவு


வணக்கம்!
          சேமிக்க வேண்டும் என்பது ஒரு நல்ல செயல் தான் ஆனால் எந்த ஒரு பைசாவும் தர்மம் கூட செய்யாமல் சேமிப்பது என்பது தான் தவறான ஒன்று.

உங்களின் ஜாதகத்தில் மறைவு இடங்கள் என்று காட்டும் இடங்கள் அதிகம் வேலை செய்யாமல் இருக்கவேண்டும் என்றால் அதாவது தீயபலன்களை கொடுக்காமல் இருக்கவேண்டும் என்றால் கொஞ்சம் செலவும் செய்து தான் ஆகவேண்டும்.

சம்பாதிப்பது அனைத்தையும் செலவு செய்ய சொல்லவில்லை. சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் எடுத்து தர்ம காரியத்திற்க்கு என்று செலவு செய்யவேண்டும். அப்படி செலவு செய்தால் மறைவு ஸ்தானம் கெடுதல் பலனை குறைவாக கொடுக்கும்.

ஒரு சிலர் ஒரே கஞ்சதனமாக இருப்பார்கள். அப்படி இருக்ககூடாது இயற்கையாக பார்த்து ஏதாவது ஒரு வழியில் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடும்.நம்ம ஆட்கள் நிறைய செலவு செய்வார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும் இருந்தாலும் ஒரு சிலர் மிகவும் கஞ்சனதனமாக இருப்பவர்களுக்கு இந்த பதிவை எழுதினேன்.

உலகத்திலேயே அதிக செலவு கடவுளுக்கு என்று செய்வது இந்துமதமாக தான் இருக்கும். அதாவது இந்த மதத்தில் உள்ளவர்களாக தான் இருக்கும். இந்துமக்கள் ஒவ்வொரு பண்டிகையும் எந்த ஒரு கோவிலுக்கு சென்றாலும் சும்மா போகவே மாட்டார்கள். தன்னால் முடிந்தளவு வாங்கிக்கொண்டு தான் செல்வார்கள். தான் எப்படி இருந்தாலும் தன்னுடைய கடவுளுக்கு செய்யவேண்டும் நினைப்பவன் தான் இந்து.

பிறமதத்தில் இப்படி இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள். ஒரு ஆள் கோவிலுக்கு செல்வார்களாக?

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: